படம் நம்மை ஈர்த்ததில் முக்கிய பங்கு பசில் ஜோசப்பின் கெட்டப்புக்கே.அசல் சுராத்தை படத்தில் இரு ரூபங்களில் காணலாம்.
தனது தந்தையைக்காணோம் என்றதும் பெண்கள் கழிப்பிடத்தில் மகன் தேடும் காட்சி,பட்டாயா தொடர்பான உரையாடல்,அந்த கண்டக்டர் அருவி கேசவ குரூப் மார்பில் குத்தப்பட்ட பச்சை போலவே தனது மார்பில் இருக்க "யப்பா!" என்று உணர்ச்சிவசப்படுதல் அதகளம்!
பார்க்கும் எல்லோருக்கும் அதேமாதிரி பச்சை குத்திவிட்ட குரு சோமசுந்தரத்தை ஜோசியராக காட்டியதும் வந்த பீதி ஒரே ஷாட்டோடு அவரை அனுப்பி வைத்து இயக்குனர் பால் வார்த்தார்! ஒரு பஃப் கிங்ஸ் லெவன் மற்றொரு பஃப் ஆஸ்த்துமா இன்ஹேலர் என்று கேசவ குரூப் இழுப்பதாக காட்டி கீழே எச்சரிக்கை வாசகம் போடும் சென்சாருக்கே சவால் விட்டுள்ளார்கள் ! 😃
சீரியல் கொலையாளி வேடம் செய்த ஶ்ரீகுமார்(ராஜேஷ் மாதவன்) மற்றும் கேசவ குரூப்( புலியனம் பௌலோஸ்) ஆகிய இருவருமே பார்க்க ஏதோ AI உருவாக்கிய உருவம் உயிர்பெற்று வந்ததுபோல இருக்கிறார்கள். குறிப்பாக நேரு உடை அணிந்து வரும் SK surreal அனுபவத்தை உண்டாக்குகிறார்!
நமதபிமான சைத்ரா ஆச்சார் நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம் Happy Birthday to me .கிட்டத்தட்ட அந்தப்படம் தந்த அனுபவம் இதிலும் கிடைத்தது.பல இடங்களில் விடாது சிரிப்பு தான் 😃 ( உதயா சீரியஸ் காட்சிகளைக்காணும் போதே சிரிப்பான்.இப்ப சிரிப்புக்கு கேட்கணுமா? - கும்மாங்கோ).
இந்தப்படத்திலும் அப்படியான ஒரு முயற்சி வருகிறது.ஆனால் இனி எப்போதாவது அந்த செகண்ட் கிளாஸ் யாத்ரா பட அடக்க காட்சியை பார்த்தால் இந்தப்பட காட்சி நினைவுக்கு வந்து சிரிப்புதான் வரும்!
சூர்யா தனக்கு கேரளாவில் வாசகர்கள் அதிகம் என்பார்.அது உண்மையோ பொய்யோ ஆனால் சூர்யா, சுராத்து ஆகியோர் குறித்து சூர்யாவின் எழுத்து மூலமாக பரிச்சயம் ஆனவர் யாரோ அவர்களை வில்லங்கமாக சித்தரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் நமக்கு இப்போதும் உண்டு 🤪 சுராத்து - லூக்
சூர்யா - படம் பார்த்தாலே புரியும்! 😜
இந்தமாதிரி அவல நகைச்சுவை படங்களாக பார்த்து சிரித்து பழகிவிட்டதால் சாதாரண நகைச்சுவை காட்சிகள் அவ்வளவு சிரிப்பை உண்டாக்குவதில்லை!
ஒலக விமர்சகர்கள் இப்படம் குறித்து எழுதும்போது அலுத்தபடி "இன்னும் எத்தனை murder mystery படங்களைத்தான் மலையாளத்தில் எடுப்பார்கள்" என்பதாக எழுதியதை படித்ததும் தலை சுற்றியது.
அடங்கப்பா ஒரு சிபிஐ டயரி குறிப்பு மாதிரியான படமா இது??இது ஒரு அவல நகைச்சுவை படம்.கொலையாளி இவர்தான் என்று ஆரம்பத்திலேயே காட்டி விடுகிறார்கள்.இருந்தும் இப்படியாக எழுதுகிறார்கள்.இவர்களே தமிழில் வரும் மிகை உணர்ச்சி படங்களை உச்சிமுகர்ந்து "இந்த படமெல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும்" என்று மூக்கு சிந்துவார்கள்!
இன்னொரு க்ரூப் cringe என்று வருகிறது.எல்லாரும் cringe என்ற அனிமல் பார்க் படத்தையே ரசித்தோம்! ஆக cringe சான்றிதழ் வழங்கும் கோஷ்டி மொத்தமாக அத்தகைய படங்களின் பட்டியலை வெளியிடவும்! நீங்கள் பாராட்டும் படங்களை விட cringe ஆகும் படங்கள் அட்டகாசமாக இருக்கிறது!
நாம் சுராத்துக்காக ரிப்பீட் ஆடியன்சாக படத்தை மீண்டும் பார்ப்போம்!(அப்போ சூர்யாவுக்காக இன்னொருக்கா பாக்க மாட்டியா?- கும்மாங்கோ)
No comments:
Post a Comment