Showing posts with label மாயமான். Show all posts
Showing posts with label மாயமான். Show all posts

Sunday, 20 May 2012

வடக்குபட்டி பஸ் ஸ்டாப் -1A

சில எடக்குமடக்கான கேள்விகள்....(இவை ஒன்லி பிகின்னிங்...நிறைய வரும்)
-ஆரிய திராவிட யுத்தம் என்பது ஆர்யாவுக்கும் திராவிடுக்கும் நடக்கும் யுத்தமா?
-பிராமண பணியா யுத்தத்துக்கு போட்டு செல்லப்பட வேண்டியது முண்டா பணியனா கை வச்ச பணியனா?
-நான் தீக்குளிப்பேன் என சொல்வது எந்த வகையான பகுத்தறிவு?

 ஆறிய சாரி ஆர்யா டிராவிட் யுத்தம்...

  Slum dog Scandal என்ற பெயரில் ஒரு வீடியோ செகண்ட் ரிலீஸில் பிக்கப் ஆகியுள்ள நிலையில் இந்த வீடியோ இணைப்பை இசை விமர்சகர்(என்று தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட)ஷாஜிக்கு மெயில் செய்ததில் Door locked என்று மெயில் திரும்பி வந்துவிட்டது..[ஏற்கெனவே சீப் பப்ளிசிட்டிக்காக இவர் ஒரு இசை அமைப்பாளரின் அந்தரங்கங்களை விமர்சித்தபோது நான் எழுதிய ஒரு பக்க கடிதத்துக்குகிடைத்த பதில் சிவாஜி ஸ்டைலில் சொல்லவேண்டுமெனில் "நான் என்ன்னத்த சொல்றதுன்னே தெரியளியேபா" I don't know what to say என்று பதில் அனுப்பினார் அண்ணாத்த]..இந்த முறை ஏன் டோர் லாக்ட் என விசாரித்தபோது அண்ணாத்த ஒரு பிரபல இசை அமைப்பாளருடன் போட்டோ எடுத்துக்கொள்ள சென்றுள்ளாராம்...அவர் ஆப்பிள் ஜூஸ் ஆட்டுக்கால் சூப் கொடுத்தார் என்று தயிர்மையில் அடுத்த மாதம் கட்டுரை வர வாய்ப்பதிகம்...


           உருவம் என்ற மோகன் படம் எந்த டிவியிலும் போடுவதாக தெரியாமல் போகவே அதை டிவிடியில் வாங்கி பார்த்தேன்...யார் (மைக்) மோகன் என்றே முதல் அரை மணி நேரத்திற்கு தெரியவே இல்லை..கடைசியில் மீசை இல்லாமல் விக் வைத்துக்கொண்டு(இந்த படம் அவரது கடைசி கேரியர் நாட்களில் வந்தது) பார்ப்பதற்கு Tom boy பெண் போல இருந்தார்...

படத்தில்  The Exorcist படத்தின் காட்சிகளை சுட்டு பல இடங்களில் போட்டுவிட்டார்கள்...கடைசியில் அந்த சிறுமிக்கு பதில் மோகன் கட்டிலில் படுத்திருக்க பாதிரியாருக்கு பதில் நம்பூதிரி...கட்டில் மேலே எழும் காட்சியை அவர்கள் படம்பிடிக்க தொழில் நுட்பம் கைகொடுக்கவில்லை போல...லைட்டாக யாரோ கட்டிலை தூக்கி தூக்கிய கட்டில் காலை மட்டும் க்ளோசப்பில் காட்டி முடித்துவிட்டனர்...

Friday, 23 December 2011

கடவுள் ஆஸ்கர் எல்லாம் கொடுக்குறாரா என்ன?"உண்மை" தமிழன் பாரீர்!!!!!

ஏ.ஆர் ரகுமான் பிரபலமானது ரோஜா என்னும் தமிழ் படத்தின் மூலம்!மேலும் அவர் ஆஸ்கர் வாங்கியபோது தமிழில் பேசுனதுக்கு எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சிலாகித்தனர்!இவரல்லவோ உண்மை தமிழன் என்று சொன்னார்கள்!தமிழனுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு பெருமை அப்படின்னு மக்கள் எங்கும் திரண்டு கொண்டாடினர்!
ஆனால்  இத்தகைய ஒரு மனிதர் எத்தகைய பேச்சை இப்போது பேசியுள்ளார்ன்னு   பாருங்க!தமிழனுக்கு துரோகம் இழைப்பதர்காகவே கேரளத்தவன்  காசு கொடுத்து எடுக்க சொன்ன படம் Dam999.

          கூடங்குளம் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரமது!பல லட்சம்மக்கள் பசி தூக்கம் எல்லாவற்றையும் மறந்து போராடி கொண்டிருந்தனர்!மத்திய அரசுக்கு இது பெரும் சிக்கலானது!இந்த நேரத்தில் எரிகிற குடிசையில் பீடி பற்றவைப்பது போல வந்தது Dam999 படம்!இது முல்லை பெரியாறு அணை உடைந்து அதனால் பலகிராமங்கள் மூழ்குவது பற்றிய ஒரு படம்!அதனால் இது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது!
           ஆனால் இது தொடக்கமே!இதன் தொடர்ச்சியாக அணை பற்றிய  பல போலியான தகவல்களை பரப்பி விட்டது கேரளம்!இதனால் அங்குள்ள தமிழர்கள் மற்றும் சபரிமலைக்கு செல்வோர் அடித்து நொறுக்கப்பட்டது என இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்!
          இத்தகைய தமிழக மக்களுக்கு துரோகம்இழைக்கும் ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்வதன் மூலம் ரகுமான் தனது "தமிழ் விசுவாசத்தை" காட்டியுள்ளார்!
      இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.(ஆமா கடவுள் ஆஸ்கர் பரிந்துரை குழுவில் இருப்பதை சொல்லவே இல்ல!)
     "உண்மை" தமிழனின் பேச்சு!

ஆக  எவனையாவது நம்பி ஏமாறுவது தமிழனின் பிறவி குணம்!முன்பு ரஜினிகாந்தை நம்பி ஏமாந்தனர்!இப்போ ஏமாறுவதுக்கு ஆள் தேடி கொண்டிருந்தனர்!நல்லா கிடைச்சாரு  மாயமான்!சாரி ரகுமான்!
சோறு போட்ட கையை வெட்டுவது போல இவர் சொல்லியுள்ள கருத்து எவ்வளவு அசிங்கத்தை இவர் மனதில் வைத்துள்ளார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் மீது இவர் வைத்த்துள்ள "பாசத்தையும்" இது தெளிவாக காட்டுது!இரைச்சல் நாயகனின் மேலும் ஒரு இரைச்சல் இது!