Showing posts with label தமிழ்படம். Show all posts
Showing posts with label தமிழ்படம். Show all posts

Friday, 27 May 2022

விஜயகாந்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும்

                     தலைப்பை படித்ததுமே நமுட்டு சிரிப்பு/அட ஆமால்ல! என்ற எண்ணம் வந்தால் நாம் வியப்படைய மாட்டோம்! காரணம் மீடியா மற்றும் தமிழ் சினிமாவை சார்ந்த சில நடிகர்களே. மறைந்த பத்திரிக்கையாளர் ஞாநி ஒருமுறை "அரசியல்ல punching bag ஆக விஜயகாந்த்தை திட்டமிட்டே மாற்றிவிட்டனர்" என்றார்.ஒருவகையில் சினிமாவிலுமே அது நடந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

                  என்னமோ விஜயகாந்த் நடித்த நூற்று அறுபத்து சொச்சம் படங்களிலுமே கையில் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துக்கொண்டிருந்தார் என்பதுமாதிரியான ஒரு பிம்பம் உண்மையா என்று பார்ப்போம்! விஜயகாந்த் நாயகனாக நடித்த சட்டம் ஒரு இருட்டறை  துவங்கி இறுதியாக அவர் நடித்த விருதகிரி வரையில் கிட்டத்தட்ட 90% படங்களை திரையரங்கில் பார்த்த வகையில் நம்மால் சில விஷயங்களை உறுதியாக கூற முடியும். பாகிஸ்தான் தீவிரவாதிகளை விஜயகாந்த் அழிக்கும் வகையிலான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

                                -தாயகம் படம்தான் அதற்கு ஆரம்பம்.அதில் மன்சூர் அலிகான் கேரக்டர் (வினோதமான மேக்கப்பில்) காஷ்மீரை தனியாக பிரிக்க சில சதிவேலைகள் செய்வார்.அதை கேப்புடன் தடுப்பதாக கதை செல்லும். 

-பிறகு எல்லாரும் troll செய்யும் முதல் படமான வல்லரசு.வாசிம் கானை பிடிக்க கேப்புடன் மேற்கொள்ளும் முயற்சிகள் பிடித்த பின்னர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உள்நாட்டிலேயே இருக்கும் துரோகிகள் என்பதாக கதை செல்லும்.

-அடுத்தது மிக அதிகமாக troll செய்யப்பட்ட கேப்புடன் படம் என்ற பெயரை பெற்ற நரசிம்மா.அதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்தபடி இங்கே சதிவேலை செய்வோரை கண்டுபிடித்து அழிப்பதாக கதை செல்லும்.இதில் வரும் சில சாகச காட்சிகள்(கரண்ட் ஷாக் கொடுக்கும் காட்சி) சமூக வலைதளங்கள் வளர ஆரம்பித்தபோது அதிகமாக troll செய்ய பயன்பட்டன.இதைவிட பல சாகச காட்சிகளில் ரஜினி(ஊர்க்காவலன் காலில் கயிறு கட்டி எதிர்முனையில் ஜீப் நகர மறுக்கும் காட்சி சிறு உதாரணம்) கமல்(விக்ரம் படத்தில் ஆகாயத்தில் இருந்து விழும் கமல் டிம்பிள் கபாடியாவை லாவகமாக பிடித்து தரை இறங்கும் காட்சி) போன்றோர் நடித்திருந்தாலும் ஏதோ விஜயகாந்த் மட்டுமே இப்படியெல்லாம் செய்வதாக ஒரு பொய் பிம்பம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டது.

நமக்கு கேப்புடன் பட சண்டைக்காட்சிகளின் தரம் வீழ்ந்தது பற்றி கடும் விமர்சனங்கள் உண்டு.புலன் விசாரணை, மாநகர காவல், கேப்டன் பிரபாகரன், கருப்பு நிலா, ஆனஸ்ட்ராஜ் ,சத்ரியன்...etc..etc.., என்று அற்புதமான- யதார்த்தமான- உக்கிரமான சண்டைக்காட்சிகள் கொண்ட கேப்புடன் படங்கள் எத்தனையோ உண்டு.

 


               ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் (அலெக்சாண்டருக்கு பிறகு) அதிகமாக ரோப் ஷாட்களை வைக்க ஆரம்பித்தார் கேப்புடன். சமந்தமே இல்லாமல் காற்றில் பறப்பது(ராஜ்ஜியம் பட கிளைமேக்ஸ்) மீசையை சுண்டி விட்டதும் எதிரிகள் பறந்து போய் தூர விழுவது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றதை மறுக்கவில்லை.ஆனால் அதே காலகட்டத்தில் வந்த மற்ற ஹீரோக்கள் படங்களிலும் அதே அளவு சாகசங்கள் இருந்தன.அஜீத் விஜய் போன்றோர் படங்களிலும் இன்றுவரையில் அதுபோன்ற காட்சிகள் உண்டு.ஆனால் அவர்கள் என்றும் கேப்புடன் ஆரம்ப காலங்களில் நடித்த அளவுக்கு உக்கிரமான சண்டை காட்சிகளில் நடித்தவர்களில்லை! 

                                 இன்று விஷால் சண்டைக்காட்சியில் நடித்தபோது "முழங்கையில் லேசான கீறல்" என்பதையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்  அங்கலாய்த்து பேசும் நிலைதான் உள்ளது.கேப்டன் பிரபாகரன் சண்டைக்காட்சி படமாக்கலின் போது கை மூட்டு கழண்டு போன கேப்புடன் பற்றியோ கருப்பு நிலா படத்தில் ரோப் எதுவும் இல்லாமலே பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கியபடி நடித்ததையோ எவரும் பேசியதில்லை. 

                                          ஒரு பழைய ஸ்டன்ட் மாஸ்டரை பேட்டி எடுத்தாலும் "நீங்க ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் ,கமலுடன் பணியாற்றிய அனுபவம்" என்றுதான் கேட்பார்களே தவிர கேப்புடனுடன் பணியாற்றிய அனுபவங்கள் அவர் எதிர்கொண்ட விபத்துகள் எலும்பு முறிவுகள் பற்றியெல்லாம் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அதற்கு ஏற்கெனவே உண்டாக்கி வைத்த ஒரு பொதுபிம்பம் தடையாக உள்ளதை மறுக்க முடியாது. இதில் அபத்தத்தின் உச்சம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தனது படத்தில் தொடர்ந்து தீவிரவாதியாக காட்டியதால் அந்த சாபத்தால் இன்று கேப்புடன் உடல் நலிந்து போய்விட்டாராம்.என்ன அபத்தம் இது?ஒரு பொய்யான பொதுபிம்பம் கட்டமைப்பதால் எந்தளவு வக்கிரமான கருத்துக்கள் வருகிறது என்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

                                                 இதில் மற்றொரு குற்றவாளி சினிமா துறை சார்ந்த சில நடிகர்களே!! விவேக் காமெடிகளில் தொடர்ந்து கேப்புடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிப்பதையே வேலையாக கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தனது வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைத்தார்(விஸ்வநாதன் ராமமூர்த்தி,அலை போன்று பல படக்காட்சிகளை சொல்லலாம்). 

                         சத்யராஜ் மகாநடிகன் படத்திலும் "ஆத்தா ஆடு வளர்த்துச்சு கோழி வளர்த்துச்சு நாய் வளர்க்கல.ஏன்னா அதை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுடுவாங்க" என்று கேப்புடனை மிமிக்ரி செய்து பேசி இருப்பார். 

                            தமிழ் படம் 2 இல் வாசிம் கான் என்ற பேருக்கு வக்காலத்து வாங்கும் காட்சி வைக்கப்பட்டது. 

 மேலும் சினிமா துறையில் பல பத்தாண்டுகள் பழம் தின்று கொட்டை போட்டதாக சொல்லப்படும் தமிழ் டாக்கீஸ் மாறன் போன்றவர்களும் தீவிரவாதிகள் வரும் தற்கால தமிழ் சினிமா விமர்சனம் செய்யும்போது போகிற போக்கில் "இதெல்லாம் ஏற்கெனவே விஜயகாந்த் அர்ஜுன் அடிச்சு துவைச்ச கதை தான்" என்று அடிச்சு விடுவதும் நடந்து வருகிறது .

                          உண்மையில் இம்மாதிரியான அபத்த காட்சியமைப்புகள் வசனங்கள் குற்றச்சாட்டுக்கள் போன்றவைகளுக்கு கேப்புடனோ அல்லது அவர் சார்ந்தவர்களோ என்றுமே மறுத்து அறிக்கையோ பேட்டியோ கொடுக்கவே இல்லை என்பது இந்த வதந்தி மன்னர்களுக்கு வசதியாக போய்விட்டது! இதேபோன்று ஊடகங்களால் ஒரு பொதுபிம்பம் மேலே திணிக்கப்பட்ட மற்றொரு நடிகர் ராமராஜன்.அவர் பற்றி முன்பு எழுதிய பதிவு இதோ

 

                இறுதியாகதிரையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டினால் இங்கு கொந்தளிக்கும் சிலரின் கவனத்திற்காக ஒரு கொசுறு தகவல்:

          பாகிஸ்தானில் அப்துஸ் ஸலாம் என்ற பேரில் ஒரு இயற்பியல் விஞ்ஞானி இருந்தார்.அவரின் பெரும் பங்களிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.1996 இல் அவர் இறந்தபிறகு அவரது கல்லறையில் "the first Muslim Nobel laureate"என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.ஆனால் அவர் அஹமதியா பிரிவை சார்ந்தவர் என்பதால் அவரை இசுலாமியர் என்று ஏற்றுக்கொள்ளாத   மாற்றுப்பிரிவை சார்ந்தவர்கள் கல்லறையில்  இருந்த 'முஸ்லிம்' என்ற வார்த்தையை அழித்துவிட கல்லறையில் மிஞ்சிய வாசகம் "the first  Nobel laureate" என்பதே!

        

Sunday, 9 January 2022

கோலிவுட் ரவுண்டப்-6.0

பிவகுமார் வீட்டுக்கு முன்ஜாக்கிரதையாக ஹெல்மெட் மாட்டிக்கொண்டு சென்றோம்!வழக்கம்போல "செல்போனை குடுத்துட்டு போ ராஜா..ஆ." ஒரு குரல் கேட்க பம்மியபடி அவர் கையில் மொபைலை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாதை மூன்றாக பிரிய எந்த வழியில் போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கிலோ கணக்கில் பழைய பேப்பர்களை சுமந்தபடி பத்து பணியாட்கள் செல்ல நாமும் ஆர்வத்தோடு அவர்களை பின்தொடர்ந்தோம். "...ம்ம்...ஹூம்..வேணாம்!..இன்னும் நல்ல ஹெவி சம்பவமா எடு!" "ஐயோ!அவங்க பீரியட்ல நடந்ததா?அப்போ வேணாம்...இவிங்க பீரியடை மட்டும் தேடுங்க போதும்" என்று குரலை பின்தொடர்ந்தால் அங்கே கூர்யா நின்றபடி தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்! "ண்ணா வணக்கமுங்க" என்று பம்மியபடி வணங்கி ஒரு மூலையில் சென்று நின்றோம். "நல்லா முற்போக்கு புரட்சி பொதுவுடைமைன்னு கேமராவ பாத்து ஆவேசமா பேசுறாப்ல சப்ஜக்ட் இருக்கணும்!அதுக்கு தகுந்தமாதிரி செய்தியை தேடி எடுங்க"
நாம் அமைதிகாக்க கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா ஒரு சந்தேகம்" "ம்.நானே பிஸியா இருக்கேன்.சரி கேளுங்க" "படத்துல பொதுவுடமை கார்ப்பரேட் ஒழிப்புன்னு பேசுறீங்க.ஆனா அந்த படத்தையே நீங்க பொதிகை டிவிக்கு குடுக்காம எதுக்கு தனியார் சேனலுக்கும் தனியார் பெருநிறுவனத்துக்கும் கொடுக்குறீங்க?" "இவனுங்க இம்சை தாங்கல" என்ற மைன்ட் வாய்ஸ் நமக்கு சத்தமாகவே கேட்டாலும் ஒன்றும் கேட்காதபடி முகத்தை வைத்துக்கொண்டு அவரையே பார்க்க "து....வந்து.....அது .....நிச்சயமா....சத்தியமா..." "அண்ணா கேள்விக்கு பதிலை சொல்லுங்கன்னா உங்க டிரேட்மார்க் வசனத்தை சொல்லி பம்முரீங்களே!" "வந்துடுச்சு" இது உதவியாளர் "டேய் வந்துடுச்சுன்னா வெளிய போயிட்டு வா.பழைய பேப்பர் நினைப்புல இங்கையே ....கூர்யா கவுண்டரை பார்த்து முறைக்க .......இல்ல..இங்கையே படிச்சத சொல்லுன்னு சொல்ல வந்தேன்" "***2 ல ஒரு சம்பவம் நடந்திருக்கு...என்று பேப்பரை காட்ட "ம் என்றபடி கூர்யா அதை படித்துக்கொண்டிருக்க கவுண்டர் சும்மா இல்லாமல் மீண்டும் "அண்ணா இன்னொரு சந்தேகம்" "படத்துக்கு துளு மொழில தலைப்பு வக்குறீங்க.ஆனா படத்துல யாராவது துளு மொழில பேசுனா பளார்னு அறை உடுறீங்க!இது எப்படிங் " "அதுவா! அவன்கிட்ட ஏன் கேக்குற?என்னை கேளு" என்றபடி பிவகுமார் வேகமாக வர "ஐயோ சாமீ!எஸ்கேப்" என்றபடி கவுண்டர் ஜூட் விட நாமும் பின்னாலேயே அப்பீட் ஆனோம்! ******************************************************************************* அடுத்து அஜய் கேதுபதி!அவர் ஒரே நாளில் நூறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதை அறிந்து எங்கு சென்று அவரை சந்திப்பது என்ற குழப்பத்தில் நடந்துகொண்டிருந்தபோது "ஐயோ!" "கலத்கா மத் கர்" "சம்பேஸ்தானு" "எள்ளி நோடுத்தர" என்ற அதட்டல் குரல்கள் கேட்க செட்டுக்குள் நுழைந்தால் நெற்றிமாறன் இயக்கம் கிடுதலை ஸ்பாட்.வழக்கம்போல நாலு ஜிம்பாய்ஸ் நடுவில் ஜட்டியுடன் தலைகீழாக தொங்கி கொடிருக்கும் ஆசாமியை வெளுத்துக்கொண்டிருக்க பக்கத்தில் கூரி "Dhis ish dhe dreatmend par nad delling dhe drudh" என்று பேசியபடி நடுநாயகமாக தடியுடன் அஜய் கேதுபதியை வெளுக்க
நெற்றிமாறன் வழக்கம்போல "அப்படித்தான்!நெஞ்சுல மிதிலே!விலாவுல குத்துலே!போன தடவையும் ஆஸ்கர் மிஸ்ஸாகிட்டு!இந்த தபா உடமாட்டேன்" என்று கத்த நடுவில் யார் தொங்குவது என்று கூர்ந்து நோக்கினால் அஜய் கேதுபதி!ப்பா!என்றபடி நாம் அங்கிருந்து எஸ்கேப் ஆனோம்! ******************************************************************************** நூறு பைக்குகள் குறுக்கும் மறுக்குமாக போய்க்கொண்டிருக்க நடுநாயகமாக "படம் ரிலீஸாகும் வரை ஒற்றை டயரில் பைக்கை இடைவிடாமல் ஓட்டி பெட்ரோலை காலி செய்யும் போராட்டம்" என்று சிலர் கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்!புரிந்தபடி நாம் வெளியேறினோம்!( கவுந்தியடிகள் மேற்கோள் எதுவும் அங்கே இல்லையா?- கும்மாங்கோ) ******************************************************************************** அடுத்து குஜை நடிக்கும் "ஃபீஸ்ட்". டேபிள் நிறைய சாப்பாட்டு ஐட்டங்கள் இருக்க அதை தொடாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்தபடி அரை இட்லியை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார் குஜை.பக்கத்தில் இயக்குனர் பல்சன்."அண்ணா ஒப்பனிங் சீனே நீங்க அப்படியே பத்து ஃபுல் அடிச்சிட்டு டேபிள் முழுக்க இருந்த ஐட்டங்களை முழுங்கிட்டு அப்படியே காஜ்பிரண் கணக்கா ரத்தம் சொட்டும் ஆட்டுத்தொடை எலும்பை வாயில் கவ்வியபடி ஆவேசமாக கேமராவை பாக்குறீங்க.பக்கத்தில் நூறு அடியாளுங்க அடிவாங்கி மயக்கத்தில் இருக்க "ஐ ஆம் கமிங்" என்று ஃபேஸ்டைமில் வில்லனுக்கு சவால் விடுறீங்க.அங்க டைட்டில் போடுறோம்! "ஃபீஸ்ட்"... ..."ம்ம்....சூப்பர்!அப்படியே டாப் கியர்ல போட்டு தூக்கு" "வில்லன் க்ரூப் காலேஜ் பசங்களுக்கு ட்ரக் சப்ளை பண்ணுது.நீங்கள் காலேஜ் ப்ரொபசர்.ஆனா லுங்கி கட் பனியனோடுதான் காலேஜ் போறீங்க!" "யோவ் போன படத்தையே திரும்ப சொல்லாத!வேற வேற!" "வில்லன் க்ரூப் ஒரு மெடிக்கல் மாபியா...நீங்க ஒரு..." "கம்பவுண்டரா??யோவ் முன்னாடி என்னோட முந்தைய படத்த சொன்ன!இப்ப உன்னோட முந்தைய படமா?...வேற..வேற..."
"வில்லன் க்ரூப் விக்குக்குள்ள போதைப்பொருள் வச்சி கடத்துறாங்க...நீங்க ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்!ஒரு நாளைக்கு ஒரு விஐபி கஸ்டமருக்கு ஹேர் ஸ்டைலிங் பண்றப்போ அந்த விக்குல கொஞ்சம் போதைப்பொருள் இருப்பதை ஸ்மெல் பண்றீங்க.அப்படியே அதோட பின்னணியை ஆராய ஒரு விக் விக்கும் கடைக்கு போறீங்க.அங்க உள்ள தடியனுங்க எக்குதப்பா பதில் சொல்ல வில்லன் க்ரூப்புக்கும் உங்களுக்கும் மோதல்.அப்புறம் நான் சொன்ன அந்த ஒப்பனிங் ஸீன்.." "ம்ம்...ஓகே.மேல போ" ******************************************************************************** அடுத்து கோயஸ் பார்டன் சென்றோம்!மகா அமைதி நிலவ கேட்டை திறந்து உள்ளே சென்றால் நான்கு இயக்குனர்கள், ஒரு போஸ்ட்மேன், ஒரு வாட்ச்மேன் கதை சொல்ல வரிசையில் காத்திருந்தனர்."ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆவாது" என்றபடி நாமும் சோபாவில் ஒரு ஓரத்தில் அமர்ந்தோம்! கஜினி வந்தார்."அட என்னப்பா நீ?கைய வேற கால வேற தனித்தனியா தூக்கிட்டு இருப்பியா?" என்று கவுன்டர் அடிக்க கஜினி அவரை கண்டுகொள்ளாமல் "ம்ம்....கடைசி .....ம்ம்...எத்தனை படமோ!எல்லாம் பப்படம்!கதை சும்மா நச்சுன்னு இருக்கணும்.நீ சொல்லு" இயக்குனர் பிவா " ஸார் ஓப்பன் பண்ணா கொல்கத்தா!அங்க நீங்க கையில வெட்டருவாவோட ஆவேசமா நிக்குறீங்க!பக்கத்துல உங்க தங்காச்சி" கஜினி பெரிய கும்பிடு போட்டபடி "நீ கிளம்பு ராசா" என்று அடுத்து போஸ்ட்மேனை அழைக்க... "தலைவா ஓப்பன் பண்ணா நீங்க ஸ்கூல் வாசல்ல நிக்குறீங்க .அப்படியே உங்க மகள் கேரக்டர் ஓடிவந்து "டாடீ" என்று கட்டியணைக்க வர உங்கள் மனைவி கேரக்டரான டென்தாரா மகளை புடிச்சி இழுத்துட்டு போக நீங்க கண்ணீர் தளும்ப உங்க மகளை பாக்க ...." "இது அந்த பிவா உன்னை சொல்ல சொல்லி குடுத்த கதைதான?" என்று கஜினி கேட்க... "து....அது...வந்து.." "கிளம்புங்க!நெக்ஸ்ட்"
"ஓப்பன் பண்ணா உங்களுக்கு ஒரு பேத்தி...அவ மேல உயிரா இருக்கீங்க.." "அவுட்!பொண்டாட்டி தங்காச்சி பொண்ணு பேத்தின்னு யாராவது சொல்றதா இருந்தா இப்பவே கிளம்புங்க" என்று கும்பிட அனைவரும் அப்ஸ்காண்ட்! கவுண்டர் சும்மா இல்லாமல் "அண்ணா! அல்லக்கைங்கல நாலு அப்பு அப்புங்க!எப்ப பாத்தாலும் "'எங்கேயோ கேட்ட ஓலம் ,கள்ளும் மலரும்' படங்கள்ல ஒரு மகாநடிகன் தெரியுறான்"னு உசுப்பிவிட்டத நம்பி நீங்களும் செண்டிமெண்ட் படமா நடிச்சி தள்ளுறீங்க!இதுல சில ஒலக விமர்சகனுங்க சமிதாப் ரேஞ்சுக்கு நீங்களும் நடிக்கணும்னு சொல்லிட்டு திரியுறான்!அப்படி சொல்றவன் ஒருத்தனை புடிச்சி படம் எடுக்க சொன்னீங்கன்னா அதுக்கப்புறம் ஒருபய இப்படி உசுப்பேத்த மாட்டான்!வரட்டுங்களா!" என்றபடி வெளியேற நாமும் வெளியேறினோம்! ************************************************************************** அடுத்து லோகநாயக்கடு நடிக்கும் பிக்ரம் பட ஸ்பாட்.கும்மிருட்டில் கம்பேனி ஆர்டிஸ்ட் சூழ லோகநாயக்கடு நின்று கொண்டிருக்க அருகில் போகேஷ்."ஆண்டவரே அப்படியே டபார் டபார்னு எதிரி க்ரூப் ஷூட் பண்ணிகிட்டே முன்னேறி வரான்.உங்க சைடு ஆளுங்களால கண்ட்ரோல் பண்ண முடியல!என்னடா பண்ண போறோம் என்று அங்கலாய்க்க அப்படியே நீங்க என்ட்ரி குடுக்குறீங்க.கைல வெறும் தகடை புடிச்சிகிட்டு முன்னேற எதிரிகள் சுட குண்டுகள் அப்படியே தெறிச்சி விழ...பிக்ராம் என்று உங்களின் பின்னணி குரலில் அப்படியே என்ட்ரி குடுத்து தகட்டை தூக்கி போட்டுட்டு எதிரிகளை நோக்கி சுடுறீங்க. கவுண்டர் வழக்கம்போல "அண்ணா ஒரு சந்தேகம்" "வெல் இவுரா?யாருப்பா உள்ள உட்டது" என்ற முகபாவத்தை கஷ்டப்பட்டு கண்ட்ரோல் செய்துகொண்டு "ம்ம்..கேளுங்க" "சுடுறவன் தகட்டு மேலேயேதான் சுடுவானா?ரெண்டு இன்ச் கீழ சுட்டா முட்டிக்கால் தெரிச்சிடுமே.அப்புறம் கபாலம்!" "அதெல்லாம் தெரிஞ்சவன எங்க படத்துல வில்லனா இருக்க உட மாட்டோமில்ல" என்றால் பிமல். "ஆமா!படம் முழுக்க உங்க புகழ் பாடுறா மாதிரி தான கேரக்டரை செட் பண்ணுவீங்க!" "அப்புறம் அந்த கிண்டியன் படம் என்னங்க ஆச்சு?" "வெல்!ஆ!கிண்டியன் வருமா வராதா?என்ற கேள்விக்கு வரும் வராது என்று பைனரியில் சொல்ல இயலாது.வரலாம்!வந்தும் வராமல் போகலாம்!வராமலும் வரலாம்!அப்படியே வந்தாலும்..." "பப்படம் ஆகலாம்!" என்று கவுன்டர் அடிக்க பிமல் முறைக்க நாம் எஸ்கேப்!

Friday, 15 January 2021

கோலிவுட் ரவுண்டப் 5.0

 Pituitary warning: சிகரெட் பிடித்தல் உயிரை கொல்லும்.புடிக்காம இருந்தாலும் வேற எதாச்சும் காற்றில் பரவி கொல்லும்!

.
டுமீல்.....டிஷ்.......டமால்.....dispararle a la muerte...

 டப்.....டுப்....

...............

.Shoot...Shoot.....
.
அமேசான் அடர்ந்த காட்டின் நடுவே...
மம்பு  ஓடிக்கொண்டிருக்க பின்னால் அமேசான் வன பாதுகாப்புப்படை....
.
ஐயோ!இந்த குகீந்திரன் பேச்சை கேட்டது தப்பா போச்சே...
.
டுமீல்...
..பின்னாலிருந்து வந்த புல்லட் ஒன்று மம்புவின் முன் மண்டையின் கற்றை முடியை கழட்டிக்கொண்டு போகிறது....
.
போச்சா!இனி "அவரு" மாதிரி பேட்ச் விக் வச்சித்தான் நடிச்சாகணும்!ஏற்கெனவே அக்ரமை போட்டு  காஜராட்டைன்னு வச்சு செஞ்சதை பாத்தப்பவே நா உசார் ஆகியிருக்கணும்!இப்ப பாரு முன்னாடி க்ளார் அடிக்கும்படி ஆகிப்போச்சே.....
.
லோக்கல்ல அழகா என்னோட வீட்டு பாத்ரூம்ல  டீசருக்கான சீனை எடுக்கலாம்னு சொன்னதை வேணாம்னுட்டு அமேசான் காட்டில் அனகோண்டாவை உசுரோட கையில புடிக்குறமாதிரி காட்டுனாத்தான் த்ரில்லுன்னு சொன்ன அந்த டைரக்டர் எங்கடா....என்றபடி புதருக்குள் மறைந்து ஓடுகிறார்....
.
நாம் அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆனோம்.
.
******************************************************************************
அடுத்து அடுத்து சென்றது பல்பேட்டா ஷூட்டிங் ஸ்பாட்.... கொருக்குபேட்டை ஜிம்...

.
பஞ்சித்: ம்...அப்டிதான் மாம்ஸ்....உன்னும் வெறும் ஆயிரம் ஸ்குவாட்தான் மிச்சம்.....
.
 கார்யா: .....நுரை தள்ளியபடி......  "அய்யய்யோ.......ஜாலியா நொந்தானத்தோட காலேஜ் வாசல்ல கிரவுண்ட்நட்  போட்டுக்கிட்டு இருந்தவனை  இப்படி பெண்டு நிமித்துறியே மச்சி...இது நாயமா?


.
பஞ்சித்: இன்னா தல மெர்சல் ஆவாத பண்ணு.நெக்ஷ்ட்  இயர் கீட் எக்ஜாம்ல "நீ எத்தினி வாட்டி தண்டால் எட்த்த" ....அத்தான் கொஷின் ஆ வரப்போவுது...
.
கார்யா: ஆமா ஒரு சிங்கிள் க்வெஸ்டின்....அதுக்காக மொத்தமா ஆல்  பாடி பார்ட்ஸும் டேமேஜ் ஆகிடும் போலயே!....அய்யய்யோ என்று அலறியபடி மீண்டும் ஸ்க்வாட்ஸ்!
.


***********************************************************************************************************
அடுத்து நாம் சென்ற இடத்தில் தேய்ந்து போன ரெகார்டாக ஒரு வருடமாக  ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது..

 

..லை....ப்.....இ....கர்ர்...ர்ர்ர்ரர்.....ஸ்....வெ....கர்ர்ர்ர்.....ரி....ஷா....ர்ர்ர்...ட்....ந....கர்ர்ர்ர்....ண்பா..........
.
கவுண்டர்: எந்த நேரத்துல வாய வச்சாங்களோ!ஒலகத்துல பாதி பேர் மேல டிக்கட் வாங்கிட்டான்....சரி இங்கேர்ந்து மொதல்ல ஜூட் விடுவோம்...
.
********************************************************************அடுத்து அஜய் கேதுபதி வீடு...கணசிங்கம் என்ற கிங்கள பெயர் தலைப்பை மாற்றக்கோரி வீட்டின் முன்பு நூறு பேர் மல்லாக்க படுத்து மறியல் செய்துகொண்டிருக்க இடையில் இருந்த கேப்பில் கால் வைத்து ஜம்ப் பண்ணி நாம் உள்ளே சென்றோம்....
.
அஜய் கேதுபதி முகமூடி அணிந்து நம்மை வரவேற்கிறார்...
.
கவுண்டர்: ...ண்ணா ......ஒரு டவுட்டு...
.
அ.கே: சொல்லுங்கஜி..
.
கவுண்டர்: போன வருசம் பாஸ்டர் ஆடியோ ரிலீஸ் பங்க்சன்ல ஒண்ணு சொன்னீங்களே நியாபகம் இருக்கா?
.
அ.கே:ஜி....சாரிஜி.....நியாபகமில்ல...
.
கவுண்டர் :(மைன்ட் வாய்ஸ்) ஆமா ஒரு வாரத்துக்கு பத்து படம்னு கால்ஷீட் குடுத்துட்டு இருந்தா எப்படி நியாபகம் இருக்கும்....ஆ...அது வந்துங்ணா...."நம்ம மனசு சுத்தமா இருந்தா எதுக்கும் நாம பயப்பட வேண்டியதில்லைன்னு சொன்னீங்க.ஆனா நீங்க ஏனுங்ணா முகமூடி போட்டிருக்கீங்க?உங்க மனசு சுத்தமில்லையா?
.
அ.கே:...து...அது...வந்துஜி......
.
கவுண்டர்:க்கும்...தமிழ்நாட்ல மைக்கும் மேடையும் கெடச்சிட கூடாது!சகட்டுமேனிக்கு அடிச்சி விடவேண்டியது...என்ன ஏதுன்னு விளக்கம் கேட்டா பம்ம வேண்டியது!அவனவனுக்கு தெரிஞ்சத செய்ங்க!உனக்கு என்ன தெரியும்?
.
அ.கே:து....வந்து......
.
கவுண்டர்: கேக்கக்கூடாத கேள்விய கேட்டுட்டேன் போல!சரிங்ணா நீங்க வழக்கம் போல மேடைல மைக்க புடிச்சு ஆட்டையாம்பட்டி அரசியல்லேர்ந்து ஆப்ரிக்க அரசியல் வரைக்கும் சகட்டுமேனிக்கு அடிச்சி உடுங்க!இப்ப என்ன ஆளை உடுங்க!
.

*******************************************************************************
அடுத்து கலிமை ஷூட்டிங் ஸ்பாட்....
.
எந்த வருசம் ஷூட்டிங் ஆரம்பித்தது என்பதையே மறந்துபோய் காலமற்ற ஒரு வெளியை உள்ளே செல்லும்போதே நாம் உணர்ந்தோம்.
.
நுழைவாயிலில் ஒருவர் தலையை பிய்த்துக்கொண்டு உக்காந்திருக்க...என்ன என்று கேட்டதில் தான் கன்டின்யுவிட்டி பாக்கும் ஆசாமி என்றுசொல்ல விவரம் புரிந்து உள்ளே சென்றோம்.
.
பத்து பைக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பாய்ந்துகொண்டிருக்க நமக்கு எந்த சேதாரமும் வந்துடக்கூடாது என்ற சுயநலத்தில் எஸ்கேப் ஆனோம்!
.

**********************************************************************************
அடுத்து ரெண்டாயிரத்தில் ஒருவன்  பட ஸ்பாட்.

வழிநெடுக கும்மிருட்டு.ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் தொங்க ரத்தவாடை....


யார்னா இருக்கீங்களா?


ஊ ஊ ஊ என்று ஊதக்காத்து......

 
யார்லாம் இருக்கீங்க?
கும்மிருட்டில் இரண்டு கண்கள் மட்டும்.....
நெல்லாடிய நிலமெங்கே .....
கவுண்டர்: அதெல்லாம் பிளாட்டு போட்டு வித்தாச்சுங்ணா
சொல்லாடிய அவையெங்கே?
கவுண்டர்: அதெல்லாம் ஷாப்பிங் மால் ஆகிடுச்சு!
வில்லாடிய களமெங்கே?
கவுண்டர்:கேட்டட் கம்யூனிட்டி!ஆ நெக்ஸ்ட்...
கல்லாடிய சிலையெங்கே
கவுண்டர்: இதுக்கு கவுன்டர் அடிச்சா வீண் வம்பு!கப்சிப்!
தாய் தின்ற மண்ணே.. தாய் தின்ற மண்ணே....
கவுண்டர்:(கனுசுவின் தலையை பிடித்து ஆட்டியபடி) ஏன்டா பெத்த தாய்க்கு சோறுபோடாம மண்ணை திங்க வச்சிட்டு பெருமையா பாட்டு வேறையா?
. தா தீம்த.. திகு தக..
தா.. திரனன தா.. ஜிகு தக தா..

.
கவுண்டர்: ஓ!தமிழ்ல பாடுனா கலாய்க்கிறோம்னுட்டு துளு மொழில அளக்குறான்.....அடங்கப்பா முடியலடா!எஸ்கேப்!
.

*********************************************************************************
அடுத்து கூர்யா எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்...எது டிராப் ஆச்சு என்று எதுவுமே புரியாதநிலையில் அவர் வீட்டுக்கே சென்றோம்.வாசலில் பிவக்குமார் " செல்போனை எங்கிட்டே குடுத்துட்டு உள்ள போ ராஜா..ஆ ஆ " என்றுசொல்ல  கீழே விழுந்தால் பிக்ஸல் தெரிச்சிடும் என்ற முன்யோசனை பயத்தில் பவ்யமாக அவரிடம் மொபைலை குடுத்துவிட்டு உள்ளே செல்கிறோம்..நூறு காலர் வச்ச ரவிக்கையும் நூறு காட்டன் புடவையும் பண்டலாக வந்து இறங்க...ஓ!ககுந்தலா தேவி ரீமேக் என்று புரிந்து அதை கடந்து சென்றோம்

தகச்சிக்கு தகச்சின் ....தகச்சிக்கு தகச்சின்....தகச்சிக்கு தகச்சின்....ரட்டட்ட....தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...தகச்சிக்கு தகச்சின்...ரட்டட்டட்

.
என்னாதிது?போதிகாதான் சோலோ படத்துல மட்டும்தான நடிக்கிறாங்க?அப்புறம் எப்படி புஷி பாட்டு?என்று குழம்பியபடி உள்ளே சென்றால் அங்கே பட்டாபட்டியோடு கூர்யா சேறுபூசியபடி நிற்க ரெண்டு பக்கமும் ரெண்டு அல்லக்கைகள் பயர் எஞ்சின் ஹோஸ் வைத்து தண்ணீரை பீய்த்து அடித்துக்கொண்டிருந்தார்கள்...


.
கூர்யா:...ம்...அப்படித்தான்!நல்லா வேகமா அடிங்க!காடிவாசல் படத்துக்காக மெனக்கெட்டு ரெண்டு மாசமா சேத்துளையும் வெயில்லயும் நின்னு ரெடியானா படம் ட்ராப்புன்னுட்டாங்க!அடுத்து சிட்டி சப்ஜக்ட்!பழையபடி ஜூஸ் குடிச்சு தெளியவச்சிட்டுதான் நடிக்க போகணும்!ம்....அப்படித்தான் அப்படியே ரெண்டு இன்ச் வலது இடுப்புல ஃபோர்சா அடி....அப்பாடா...
.
கவுண்டர்: ஏனுங்கணா எதுக்கு அப்படி செய்ய சொல்றீங்க?
.
கூர்யா:காடிவாசல் கேரக்டரோட முகபாவம் எப்பவும் கல்லடைப்பு வந்தவன் மாதிரி இருக்கணும்னு டைரக்டர் சொன்னாரு!அதான் நெஜமாவே....
.
கவுண்டர்: ஆங்!புரியுதுங்!டேய் அல்லக்கை...போய் அண்ணனுக்கு பழம் வாங்கிட்டு வா!ஒண்ணு இங்க இருக்கு!இன்னொன்னு இதான்னு சொன்னான்னா நடக்குறதே வேற!ஓடு!
.
பிவக்குமார்: என்ன இங்க சத்தம்?
.
கவுண்டர்: பம்மியபடி...ஒண்ணுமில்லீங்!என்றபடி வெளியேற நாமும் அவரோடு எஸ்கேப்!
.




********************************************************************************
அடுத்து செக்கந்தராபாத்தில்  ஒரு ஷூட்டிங்  ஸ்பாட்.நுழைவாயிலில்  பெரிய பலகையில்...

ஷூட்டிங் நேற்று நடந்தது.....இன்னக்கி நடக்கல...நாளைக்கி....!!!!!

 

 

என்று எழுதியிருக்க...

.
கவுண்டர்: இஹாஹாஹா என்று நக்கலாக சிரித்தபடி கடந்துசெல்ல நாமும் பின்னால் பம்மினோம்.

**********************************************************************************

அடுத்து காசர் எழுந்தருளும் பாழ்வார்பேட்டை சென்றோம்.....

வழிநெடுக பேனர் கட்டவுட் தோரணங்கள் துண்டுசீட்டு..இத்யாதி...இத்யாதி....

.

அல்லக்கைகளை தாண்டி உள்ளே செல்லவே மூன்று மணி நேரமாகிவிட்டது!உள்ளேயும் பெருங்கூட்டம்.கூட்டத்தின் இடையே லேசாக கிடைத்த இடைவெளியில் எட்டி பார்த்ததில் காசர் டாஸ் போட்டுக்கொண்டிருந்தார்...

...கிண்டியன் 2 ஷூட்டிங் போகணுமா?இல்லாட்டி அக்ரம் ஷூட்டிங்கா?

.


 

டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......

 

நாணயம் காசரின் பேச்சு போல மையமாக நிற்க.....சிறிதுநேர அமைதிக்கு பிறகு...பிரச்சாரம்!ஆரம்பிக்கலாங்களா? என்று கூறியபடி அடிப்பொடிகள் சூழ வெளியேறுகிறார்.

Monday, 8 April 2019

அநீதிக்கதைகள் 2.0


          படத்தை இரண்டாவது முறை பார்த்தேன்.அதில் கண்ட சில விஷயங்கள்&தோன்றிய எண்ணங்கள்.

   இரண்டாவது முறை கண்டபோது அப்பட்டமாக தெரிந்தது காலம் நேரம் இடம் அனைத்தும் skew செய்யப்பட்டுள்ளது.அற்புதமும் மாணிக்கமும் சுனாமியில் தப்பித்தவர்கள்.வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணிக்கம் ஷில்பாவாக திரும்புவது ஏழாண்டுகள் கழித்து.அப்போ அது 2011 ஆம் ஆண்டு.ஆனால் அந்த விடலைகள் பார்க்கும் டிவி,பெர்லினின் மொபைல் எல்லாம் நவீன காலத்தவை.
    அப்போ இந்த கதைகள் ஒரே நாளில் நடக்கவில்லையா?அந்த விடலைகள் லோக்கல் தாதாவின்  டிவியை உடைத்தததும் வேறொரு டிவியை எப்படியோ வாங்கி அவன் வீட்டுக்கு எடுத்துட்டு போனதும் “ஒரே நாள்ல நாப்பத்தெட்டு இன்ச் டிவி வாங்கிட்டோம்.நாளைக்கின்னா அம்பது இன்ச் டிவி கிடைக்கும்”னு சொல்லி அனுமதி வாங்கிட்டு அந்த டிவியை தூயவனின் வீட்டுக்கு எடுத்து செல்கிறார்கள்.இங்க மட்டும்தான் நாள் பற்றிய குறிப்பு வருது.

   ஆனா பெர்லின் திடீர்னு பட்டு வேட்டி சட்டையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறான்.கொஞ்ச நேரம் கழித்து யூனிபார்ம் அணிந்து நிற்கிறான்,பேரலலா  முகிலன் வேம்புவை வேற மப்டில கண்காணிக்கிறான்.இவை அனைத்து ஒரே நாளில் சாத்தியமா?என்ற கேள்வியும் இருக்கு.
    மற்றொன்று படத்தின் பிற்பகுதியில் பெர்லின் முகிலன் வேம்புவை ஒரு பழைய பேக்டரி மாதிரியான இடத்தில் வைத்து மிரட்டுகிறான்.அந்த விடலைகள் உடைந்த டிவியை தூக்கி எரிவதோ அவர்கள் குடியிருப்புக்கு வெளியே.அது இங்கே விழுகிறது.
  அதுபோல ஷில்பா தனது மகனை பள்ளிக்கு அழைத்து செல்லும் வழி என்பது எந்த ஊர் எந்த இடம் என்பதுபற்றிய எந்தவித தெளிவான அடையாளங்களும் இல்லாத ஒருவித surrealistic இடமாகவே தெரிந்தது.அப்புறம் ஷில்பாவும் தனசேகரும் சந்தித்துக்கொள்ளும் சப்வே(அந்த காட்சியை இரண்டாம் முறை பார்த்த போதும் அதே வீரியத்தோடு இருந்தது).குறிப்பாக விளக்கு மின்னி மின்னி அணையும் அந்த டைமிங்கை ஏற்கெனவே முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள்.அற்புதம்!
  அப்புறம் விளக்கமளிக்கமுடியாத சில நிகழ்வுகள். லிப்டுல கரண்ட் போனதும் வேம்பு கரண்ட் வரும் என்கிறாள்.”ஆமா நீ பெரிய பத்தினி!சொன்னதும் நடந்துட போவுது”னு முகிலன் அலட்சியமா  சொல்லி முடித்ததும் கரண்ட் வருகிறது.அதுபோல காவல் நிலையத்தில் ஷில்பா பெர்லினின் தலையில் அடித்து சபிக்கிறாள்.பிறகு பெர்லினின் தலையில் அடிபட்டே இறக்கிறான்.
   ஷில்பா ஒரு திருநங்கை என்றதும் அவர் மீது கழிவிரக்கம் வரும்படியான செண்டிமெண்ட் காட்சிகள் எதையும் இயக்குனர்  வலிந்து வைக்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் ஷில்பாவும் ஒருவிதத்தில் பெரும் குற்றத்தில் பங்கு வகித்தவளாகவே காட்டப்படுகிறாள்.இரண்டு குழந்தைகளை யாரிடமோ கொடுத்ததாகவும் ஒரு வாரம் கழித்து ட்ராபிக் சிக்னல்ல அவர்கள் இருவரும் கண் பார்வை இழந்து கை கால் ஒடிந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததாகவும் சொல்கிறாள்.ஆக அவளுமே பாவத்தில் பங்கு வகிக்க தயங்கவில்லை.
   வேம்பு முகிலன் இடையேயான உரையாடல்கள் அப்பட்டமான கணவன் மனைவி உரையாடல்களை ஒத்திருந்தது.மிகையான சக்கரை பூச்சோடு பார்த்ததும் காதல் பிறகு எப்படியாவது ஹீரோயினியை வற்புறுத்தி திரும்ப காதலிக்க வைப்பது பிறகு   காதலின் வெற்றி பிறகு  கல்யாணம்.அதன் பிறகு they happily lived ever after என்றுதான் 99% தமிழ் படங்கள் முடியும்.இதில் அந்த மாய தோற்றங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
   மூன்று தம்பதிகளின் கதையே இங்கு பிரதானம்.சமீபத்தில் திருமணமான முகிலன்—வேம்பு,திருமணமாகி ஏழு வருடங்கள் ஆனா மாணிக்கம்-ஜோதி,பதினேழு பதினெட்டு ஆண்டுகள் ஆனா தனசேகர்-லீலா.மூன்று தம்பதிகளுமே மகிழ்வான  வாழ்க்கையை வாழவில்லை.
   
   இரண்டாம் முறை பார்த்தபோதும் பல காட்சிகளின் தேவையற்ற நீளத்தை உணர முடிந்தது.அப்புறம் அவ்வப்போது ஒலிக்கும் ராசைய்யாவின் பாடல்கள்(ஆரம்பத்தில் வரும் ஐயம் ஏ டிஸ்கோ டான்சர் தவிர்த்து) ஒருவித வினோத உணர்வை தந்தது.ஷில்பா உடைமாற்றும்போது ஒலிக்கும் மாசிமாசம் பாடல், வனிதாமணி பாடலில் ஆண் குரலுக்கு மட்டும் வாயசைக்கும் தூயவன்   என்று இப்பாடல்களை தனியே கேட்டால் அந்த காட்சிகள் நினைவுக்கு வரும் என்கிற அளவுக்கு பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.அப்புறம் அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் பின்னணியில் ஒலித்த அந்த அரவை இயந்திரம் போன்ற அந்த ஒலியை மறக்க முடியாது.
  படத்தின் color tone நன்றாக இருந்தது.படத்தின் கதைக்களன் போலவே அதுவும் ஒருவித dreamy தன்மை கொண்டதாக இருந்தது.
    இப்படம் ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து எப்படி இருக்க போகுதுன்னு என்னால யூகிக்க முடியல(இப்பவே இரண்டாம் முறை பார்த்தபோது வேறு அனுபவமாகவே இருந்தது).இப்போது இருப்பதை காட்டிலும் சிறந்த படமா தெரியலாம்.அல்லது இப்போது கண்டதை விட மோசமான அனுபவமாகவும் அமையலாம்.

Friday, 5 April 2019

அநீதிக்கதைகள்


                       படத்தில் மூன்று ட்ராக்கில்  மூன்று கதைகள்.படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மூன்றிலும் எதிர்பாராத திருப்பம்.ஆகா செம விறுவிறுப்பா போக போவுதுன்னு நினைச்சா அதற்குப்பின் நடப்பது வேறு.இந்த மாதிரி தொடர்ச்சியா மூன்று எதிர்பாராத ட்விஸ்ட் வச்சிட்டமே!தொடர்ந்து இந்தமாதிரி ட்விஸ்ட் வச்சா அப்புறம் பல்வேறு குறும்படங்களின் தொகுப்பாகிடும்.அதனால கொஞ்சம் இழுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரோ என்னவோ!

              அதற்கு பின் ஒவ்வொரு காட்சியையும் தேவைக்கும்  அதிகமான நீளத்திற்கு sustain பண்ணுகிறார்.அது எதுக்குன்னு புரியல!
               படம் நல்லாருக்கா இல்லையா? என்று பைனரியில் பதிலளிக்க முடியாத படங்களுள் இதுவும் ஒன்று.நன்றாக வந்திருக்கவேண்டிய படம் என்பதுமட்டும் உறுதியா சொல்லலாம்!.
    ஷில்பாவுக்கும் மகனுக்குமான அந்த பாச பிணைப்பு.”நானும் அம்மாவும் உன்னை ஏதாவது சொன்னமா?” என்று கேட்கும் அந்த சிறுவன்(ஆரண்ய காண்டத்திலும் இதுபோல ஒரு கெட்டிக்கார சிறுவன் உண்டு) தருணம்;அந்த சப்வேல ஷில்பாவும் (தான் இறைதூதர் என்ற நினைப்பில் வாழும்)அற்புதமும் தற்செயலா சந்தித்து பேசும் காட்சி என்று சில நல்ல தருணங்கள் நிச்சயம் உண்டு.

     ஆனால் இப்படி பல நல்ல தருணங்கள் நிரம்பிய படமாக  வந்திருக்க வேண்டியது. காட்சிகள் பல இழுவையாக இழுக்கப்பட்டதால் அதன் உன்னதத்தை வீரியத்தை இழந்து வெறுமனே பார்வையாளனால் கடந்துபோகும் தருணமாகிவிட்டது.உதாரணமாக முகிலன்-வேம்பு தொடர்பான காட்சிகளில் அவர்களுக்குள் நிகழும் மோதல் பிறகு  ஏற்படும் புரிதல் நன்றாக வந்திருக்க வேண்டியது!ஆனால் வரவில்லை!அந்த காட்சிகளை செல்வராகவன் பட பாணில எடுப்போம் என்று இயக்குனர் நினைத்தாரா அல்லது திரைக்கதை எழுதியவர்களுள் ஒருவர் நினைத்தாரா என்று தெரியல!

மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன்.கே.சேகர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.இதில் மிஸ்கின் எழுதிய காட்சிகள் இவைதான் என்று சொல்ல முடியும்.உதாரணமாக அந்த சப்வே காட்சி,ஹாஸ்பிடலில் மனைவி  விடம் கடவுள் குறித்து பேசும் காட்சி சுனாமியில் தப்பித்தது(அவன் கடல்ல விழ போனான்.கடல் அவனை பின்தொடர்ந்தது), அந்த சிலை உடைப்பின் முடிவில் வரும் திருப்பம்  போன்றவைகளை சொல்லலாம்(இவை நானாக ஊகித்து சொல்பவை)!

            இதுல பிரச்சனை மிஸ்கின் படங்களுக்கே உரிய மனதை நெகிழ வைக்கும் அந்த உன்னத தருணங்கள் பல அவர் படங்களில் அற்புதமாக வெளிவந்திருக்கும்.இதுல என்ன நடந்துச்சோ அவர் எழுதியதை காட்சிப்படுத்தும்போது எங்கோ திசை மாறிட்டுதோ என்னவோ..அவை உன்னத தருணங்களாக மாறவில்லை(முன்பு குறிப்பிட்ட சப்வே காட்சி தவிர).
   இதுல முனியாண்டி இப்படத்தை 2006 ல இன்னாரித்து இயக்கத்தில் வந்த  Babel படத்தோடு ஒப்பிட்டிருந்தார்.அப்படமும் இதுபோல மூன்று வெவ்வேறு கதை மாந்தர்கள் விளக்கவியலா ஒரு மெல்லிய இணைப்பு சங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும்.ஆனால் அப்படம் கன கச்சிதமான காட்சியமைப்பை  கொண்டிருந்தது. இப்படத்தில் அது மிஸ்ஸிங்.

    ஏற்கெனவே தசாவதாரம் படத்தில் இந்த பட்டர்ஃபளை எபெக்டை மையமா வச்சு கதை பண்ணுறேன்னு ஏதோ குழப்பியடித்திருப்பார் கமல்.இப்படத்தில் அவ்வளவு குழப்பங்கள் இல்லை.கடவுளின் இருப்பு தொடர்பான வசனங்கள் உண்டு.ஆனால் விவாதங்கள் இல்லை(தசா அசின் நியாபகம் உள்ளதா?).
   படத்தின் பிற்பகுதியில் வரும் இன்னும் இரு திருப்பங்கள்.ஒன்றை ஊகிக்க முடிந்தாலும் இன்னொன்று நிச்சயம் ஆச்சரியம்தான்(சேட்டு வீட்டில்).ஆனால் அந்த ஆச்சரிய தருணத்தை தாண்டி என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கமான கோடம்பாக்க பார்முலாபடி மொட்டைமாடிக்கு போய்ட்டார்.
     கடைசி சில காட்சிகளில் சுஜாதா எழுதிய கடவுள் புத்தகத்தை அப்படியே இரத்தின சுருக்கமா கேப்ஸ்யூல் வடிவில் கொடுக்கலாம்னு யாரோ ஐடியா கொடுத்திருக்காங்க போல!

          மாணிக்கம்  திருமணம் செய்து மனைவிக்கு  பிள்ளை உண்டானதும் தனது உடலில்  பெண் தன்மை அதிகரித்துக்கொண்டே செல்ல தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்படுது(சுனாமி-அற்புதம்-சிலை).இதுல ஷில்பாவின் மனைவியும் மகனுமே அவளை முழுமையாக ஏற்றுகொள்கின்றனர்.அந்த எஸ்ஐ பெர்லின்  (வாய்ப்பு கிடைக்குமானால் ஆண் பெண் திருநங்கை என யாரையும் விட்டுவைக்காத) அணுகும் விதமும், அந்த பள்ளி ஹெட் மாஸ்டர் அணுகும் விதமும் அதிகாரத்தின் அணுகுமுறை.அந்த பள்ளியில் பணியாற்றுவோர் மட்டுமல்லாமல் அந்த பள்ளியில் “ அச்சில் வார்த்தெடுக்கப்படும்”  மாணவர்களுமே ஷில்பாவை கேலி கிண்டல் செய்கின்றனர்.இழிவாக பேசுகின்றனர்.”வித்தியாசமான நபர்களை உலகம் கண்டு பயப்படும்” என்று ஷில்பா சொல்வதாக வருகிறது.

     இதுல குறிப்பிடவேண்டிய இன்னொரு கேரக்டர் முகிலன்.ஹீரோவாக ஆவதற்கு முன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுப்பவன்.அதோடு மட்டுமல்லாமல் திடீர் திடீரென்று சமூக கருத்துக்களை பேசுபவன்(தேசம்னா பக்தி-மொழின்னா பற்று.சாதின்னா மட்டும் வெறியா?).அதற்கும் அவன் காரணம் சொல்கிறான்.பெரிய ஸ்டார் ஆனதும் பேருக்கு முன்னாடி புரட்சி டேஷ்(தலைவலி?) முகிலன்னு போட்டுக்கிட்டு மேற்கூறியபடி  ஆவேச கருத்துக்களை பேசி அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பது(யப்பா!மூச்சு வாங்குது).இப்ப பிரபலமா இருக்கு பல ஹீரோக்களை  இந்த கேரக்டரோடு பொருத்தி பார்க்கமுடியும்.தமிழக அரசியல் வெற்றிடத்தில் பெரிய பாதிப்பை உண்டாக்கிவிட முடியும் என்று பல ஹீரோக்களின் கண்களில் ஆசை மின்னல் மின்னுகிறது.

    ஒருகாலத்தில்  பிட்டு படத்துல நடித்த நடிகை தாயானால் உண்டாகும் பிரச்சனை- சாதாரண நடிகை சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் புரிந்து  தாயானாலும் எதிர்கொள்ள நேரிடும்!பாலியல் உறவுகள் குறித்த அரைகுறை புரிதல்கள் நிரம்பிய சமூகத்தில் இந்தமாதிரியான குழப்பங்கள்(சன்னி லியோனுக்கு பிள்ளை பிறந்தால் அது என்ன மனநிலையில் இருக்கும்?) நேரிடுவது இயல்பே!இதை crisp ஆ சொல்லாம ஜவ்வா இழுத்து முடித்திருக்கிறார்கள். 

   சமூகத்தில் நிகழும் ஆனால் பலரும் விவாதிக்க விரும்பாத சம்பவங்களை படத்தில் காட்டியுள்ளார்கள்."இவையெல்லாம் இங்க நிகழவே இல்லை" என்று ஒருவர் சொன்னால் அவர் நிஜ உலகம் அறியாதவர் என்பதை தவிர சொல்றதுக்கு  வேறேதும் இல்லை!
 தேவையற்ற காட்சிகள் லாஜிக் ஓட்டைகளும் உண்டு. வீட்ல அறிமுகமில்லாத சிலர் உக்காந்திருக்கும் போதே பாடியை டிஸ்போஸ் செய்ய முயலும் காட்சி ஒரு உதாரணம்.
                         ஆரண்ய காண்டம் படத்தில் வந்த அந்த ஒலி வடிவமைப்பை இப்படத்திலும் கேட்க முடிந்தது.ஒரு அறையில் இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தெருவில் வெங்காயம் விற்பவனின் குரல்,ஏதேனும் ஸ்பீக்கரில் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் அடைத்த தொனியில் கேட்கும் பாடல்,வாகனம் செல்லும் சத்தம் etc..etc.. என்று அவ்வகையே இப்படத்திலும் துல்லியமாக  கேட்க முடியுது.

அப்புறம் இப்படம் குறித்த விமர்சனங்கள்.படம் சார்ந்தவை அல்ல.”இப்படிலாம் வசனம் காட்சிகள் வச்சு படமெடுத்தா சம்முவம் கெட்டுடாதா?” என்ற கலாச்சார காவலர்கள் கூச்சல்.இதுக்குமேலையுமா சம்முவத்தை கெடுக்க முடியும்?சிறுவர் சிறுமிகளின் மிக அபிமான ஸ்டார்கள் சிலர் தமிழில் உள்ளனர்.அவர்கள் படத்திற்கு குடும்பத்தோடு அவர்கள் செல்வர்.அப்படங்களில் வராத வக்கிரமா?ஆபாசமா?ஐட்டம் சாங்கா?இரட்டை அர்த்த வசனமா இதுல இருக்கு?இது வெளிப்படையா “ஆமா நாங்க இதைப்பத்தி பேசுறோம்” என்றுதான் எடுத்திருக்கிறார்கள்.

              வரிவிலக்கிற்காக பல படங்கள் யு சான்றிதழ் எப்படி பெற்றது என்பது நமக்கு தெரியும்!அப்படங்களில் உள்ள காட்சிகளில் இல்லாத வக்கிரமா?தவிர வக்கிரம் என்பது மறைமுகமா சக்கரை பூச்சோடு ஒன்றை சொல்லும்போதே கனத்து ஒலிக்கும்!நேரடியாக சொல்லும்போது அதன் போலி ஈர்ப்புகள் கவர்ச்சிகள் காணாமல் போகும்!
             விஜய் சேதுபதி வழக்கமான தேய்வழக்கு வசன உச்சரிப்பிலிருந்து முதன்முறையாக விலகி பேசியிருக்கிறார்.ஆனாலும் அப்பப்போ "என்னாச்சு?" ங்கிற நடுவுல கொஞ்சம்...பட perplexed முழிப்பை இதிலும் காண முடியுது!ஃபகத் ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் வேறு பரிமாணத்தை தொடுகிறார்!


யுவனின் பின்னணி பல இடங்களில் அற்புதமாக உள்ளது.வழக்கமா தற்போதைய "வடசென்னை மீட்பு" டிரென்ட்படி ஒரு கானா வச்சு கொல்லாமல் இருந்ததற்காகவே இயக்குனருக்கும் இசை அமைப்பாளருக்கும் நன்றி!



              அப்புறம் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டனும்”னு வசனம் பேசி படம் முழுக்க எப்படி ஃபிராடு வேலை செய்வதுன்னு டெமோ காட்டிட்டு கடைசில கிராமத்துல விவசாயம் பண்ண போறேன்னு நமக்கே அதிர்ச்சி கொடுத்த சதுரங்க வேட்டை  பட நடராஜ் படத்துக்கு எதிரா  ஓவரா கூவியிருக்கார்.”கில்மா கதை புத்தகத்துல எல்லாத்தையும் விளக்கிட்டு கடைசில இதையெல்லாம் செய்ய கூடாது தப்புன்னு சொல்ற அயோக்கியத்தனம்” என்று  படத்துலயே அவருக்கு பதிலிருக்கு!
       அப்புறம் ஷில்பா ஒரு திருநங்கை இல்லையாம் Transvestite(மாற்று பாலினத்தவரின் உடைகளை விரும்பி அணிபவர்) னு இன்னொரு ஒலக விமர்சகன் கூவுறான்.அஞ்சு ரூவாக்கி ஒரு ஜிபி டேட்டா குடுத்ததுல இந்தமேரி அரைவேக்காட்டுகள் அதிகம் உருவானதுதான் மிச்சம்.இதுக்குமேல இதுபத்தி எதுவும் சொல்ல விரும்பல!
.
             ஒரு மனிதனின் செயல் இன்னொரு மனிதனின் செயலில் வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும் என்கிறார்கள்.இப்படம் ஒரு மகத்தான படமா வந்திருக்க வேண்டியது.திரைக்கதைல ஏதோ ஒரு சிறு சறுக்கல் நிகழ அது இன்னொரு சறுக்கலை உண்டாக்கி அதனால் மற்றொரு சறுக்கல் என்று  மாபெரும்  பட்டர்ஃபளை எபெக்டை படத்திலும் காணமுடியுது!
.
டிஸ்கி 1: பொதுவா தியேட்டர்ல படம் ஆரம்பிச்சு அரை மணிநேரம் வரை எவனாவது வந்துகினே இருப்பான்.இந்த படம் சர்பிகேட் என்பதாலோ என்னவோ ஒரு மணி நேரம் வரை இருட்டில் ரகசியமா பலர் வந்து அமர்ந்தனர்.அவர்கள் வேறு ஏதோ எதிர்பார்ப்பில் வந்துவிட்டது மட்டும் உறுதி.
டிஸ்கி 2: இருக்குற ட்விஸ்ட்ல எல்லாம் பெரும் ட்விஸ்ட் கடைசில தியேட்டர்ல ஓடும்  பிட்டு படத்துல ஓணாண்டி புலவர் டாக்டர் கேரக்டர்ல வந்ததுதான்!செம ட்விஸ்ட் மாமு!
டிஸ்கி 3:  விஜய் சேதுபதிக்கு ரசிகைகள் நிறைய உண்டு போல!!ஆண் துணையோடோ தனியாகவோ வந்திருந்தனர்.அவர்களில் சிலர்  படம் முக்கால்வாசி நடந்துகொண்டிருக்கும் போதே வெளியேறியதை காண முடிந்தது.(நிச்சயம் இப்படம்  வணிக சினிமாவை எதிர்பார்த்து வந்தோருக்கு ஒருவித அசவுகரியத்தை தரும்!)
டிஸ்கி 4: படத்திற்கு இப்பதிவின் தலைப்பே முதலில் வைக்கப்பட்டிருந்தது.அதுவே சாலப்பொருத்தம் என்பது என் கருத்து.
     

Tuesday, 26 February 2019

Double Bill- Andhadhun & சீதக்காதி



சீதக்காதி 
இந்த ஒன்லைன் சொல்லும்போதும் கேக்கும்போதும் “அட!ரொம்ப வித்தியாசமா இருக்கே” ங்கிற எண்ணம் கண்டிப்பா பெரும்பாலோனோருக்கு வரும்.அப்படித்தான் விஜய் சேதுபதிக்கும் வர நடிக்க சம்மதித்திருக்கிறார்  என்பது தெளிவாவே தெரியுது.உண்மையில் இந்தப்படம் மட்டுமல்ல பட படங்களின் கதைகளை இயக்குனர்கள் சொல்லும்போது அற்புதமா இருந்து கடைசில பைனல் கட் பாக்க சொல்ல “நீ என்ன சொன்ன?என்னத்த எடுத்து வச்சிருக்க?” என்று ஹீரோ மனகண்ணில் இயக்குனரை மவுன்ட் ரோடில் ஓட ஓட அடித்து இழுத்து சென்றிருப்பார்கள்!

      உண்மையில் இந்தப்படம் அய்யா என்ற வயதான நாடக நடிகரை சுற்றியே நிகழுது.படத்தின் அஸ்திவாரமே அதான்!அது எவ்வளவு வலுவா பார்வையாளனை துளைக்கும்படி இருக்கணும்?ஆனா இந்த படத்துல அய்யாவின் பயணம் கால வரிசைப்படி காட்டப்படுது.ஐம்பதுகள் தொடங்கி 2013 வரை..கொஞ்சம் கொஞ்சமா மேடை நாடக கலாச்சாரம் மங்கி மறைந்து போய் ஏதோ கடமைக்கு பத்து பேரு உக்காந்து நாடகம் பார்ப்பதாக தற்காலத்தில் காட்டப்படுது.சரி அது பிரச்சனையில்லை.
    அப்போ என்ன பிரச்சனை?விஜய் சேதுபதி தான்!முதலில் இந்த அய்யா கேரக்டர் கமல் நடிப்பதாக இருந்ததாவும் அவர் ஏதோ காரணத்தால் மறுத்துவிட விஜய் சேதுபதி இதை செய்ததாவும் சொல்லப்படுது.உண்மையில் கமலே இதை செய்திருந்தாலும் சரியா வந்திருக்குமான்னு தெரியல.கமல் பெரும்பாலும்(விதிவிலக்குகளும் உண்டு)  கமல் என்ற பிரக்ஞையிலேயே நடிப்பவர் என்பதால் இந்த அய்யா கேரக்டரிலும் தனது அதிமேதாவித்தனம் மிளிரும்(??)வசனங்கள் எதையாச்சும் வச்சிருப்பார்.இதான் சாக்குன்னு செலக்டிவ் நாத்திகம் பேசி தள்ளியிருப்பார்(யப்பா தசாவதாரம் படத்துல கோவிந்த் பேசுன செலக்டிவ் நாத்திக  பாதிப்புலேர்ந்தே இன்னும் வெளிய வர மிடில-கும்மாங்கோ)


இதுல வி.சே வை நொந்து பயனில்லை.அவர் கதைய கேக்குறாரு.அதுவும் கமலுக்காக இருந்த கதை +அவருக்கு மக்கள் மத்தில இருக்கும் நல்ல பேர(உண்மையில் நடிக்கும் திறனுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னு எனக்கு விலங்கல-உதயா) மேலும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ள ஒரு கேரக்டர்ன்னதும் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்று தெரியுது.அவர் அவரால் முடிஞ்சதை செய்துதான் இருக்கிறார்.இருந்தாலும் அந்த அய்யா கேரக்டருக்கு இது பத்தாது.கமலே பத்த மாட்டார்!வேற யாரு?
      செந்தமிழை(செந்தமிழ்ல இருக்கும் ழ் ஏ 90% தமிழர்களுக்கு உச்சரிக்க வராது) சரியான ஏற்ற  இறக்கத்தோடு பேசுவதோடு உடல்மொழியும் அதோடு 100% பொருந்தி வரும் ஒரு நடிகரை அய்யா கதாபாத்திரம் கோருகிறது.ஆனால் வி.சே வுக்கு சாதாரண தமிழே பேச வராது.எப்பவுமே மெட்ராஸ் பாஷதான்!அவர் வடசென்னை பகுதியை சார்ந்த கேரக்டரா இருந்தாலும் சரி(இப்ப வடசென்னை மீட்பு சீசன் போயிட்டு இருப்பதால் எல்லா படத்துலயும் அந்த ஏரியா கேரக்டர் ஒண்ணு தப்பாம தமிழ்  படங்களில் இடம்பெறும்-உதயா) இல்ல சின்னாளப்பட்டியை  சேர்ந்த ஒரு கேரக்டர் பண்ணாலும் சரி."இன்னா?" என்றுதான் ஆரம்பிப்பார்.மக்களும் விமர்சகர்களும் அதை கண்டுக்கிறது இல்ல! (முன்பே சொன்னது போல மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் ஒரு நடிகன் நடிப்புலயும் வசன உச்சரிப்புலையும் எப்படி சொதபுனாலும் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள்)

   உண்மைல இதுல வி.சே வை குறைகூற முடியாது.இப்படியொரு கேரக்டர் கிடைக்குதேன்னு அவர் ஒத்துகிட்டு செய்திருக்கார்.ஆனா இந்த கேரக்டரை செய்யக்கூடிய சரியான நடிகர் ஒருவர் மட்டும்.சிவாஜி கணேசன்!செந்தமிழ் வசனத்தை  ஏற்ற இறக்கத்தோடு தெளிவாக சரியான முகபாவனையோடு வசனம் பேச அவரைவிட்டால் வேறு ஆளில்லை என்பதே உண்மை.குறிப்பா வி.சே செந்தமிழ் தட்டுதடுமாறி பேசும்போதெல்லாம் சிவாஜி நினைப்புதான்!
அதைத்தாண்டி படத்தை மூணு மணி நேரம் இழுத்தது அந்த ஷூட்டிங் காட்சியையே இருவேறு நடிகர்களை வச்சி வளத்துனது என்று பல குறைகள்.முன்னமே சொன்னது மாதிரி கதையாக யோசிச்சதை கேட்டப்போ நல்லா இருக்கும் ஒரு சப்ஜெக்ட் இது.படமாக்குவதில் பெரும் குளறுபடி!

.*******************************************************************************************************************

அந்தாதூன்.
பொதுவா ஒரு படத்தில் கண் பார்வையில்லாத/காது கேட்காத/வாய் பேசாத...அல்லது வேறு வகை உடல்/உளவியல்  குறைபாடுள்ள கேரக்டரை மூன்று template ல்  காட்டுவதே வழக்கம்.
     1.      அந்த கேரக்டர் மேல அனுதாப அலை வீச வைத்து ஆடியன்சை அழுகாச்சியில் மூழ்கடிப்பது
2.      கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஒரு கேரக்டராக காட்டுவது.3.      சாமானியர்களை விடவும் நேர்மையானவர்களாகவும் அசாத்திய திறன் பெற்றவர்களாகவும் exaggerate செய்வது

இப்ப பொதுவா இருக்கும் “யாரையும் புண்படுத்த கூடாது” டிரெண்டில் முதல் மற்றும் மூன்றாம்  வகை கேரக்டர்களே திரையை நிறைக்கின்றன.இது உடல் குறைபாடுள்ள கேரக்டர்களுக்கு மட்டுமல்லாமல் வேற மதத்தை குறிப்பிட்ட சில சாதிகளை சார்ந்த கேரக்டர்கள்கூட kid Galahad எனுமளவுக்கு நன்மையின் உண்மையின் நேர்மையின் சின்னமாக காட்டி ‘பொக்குதே!’ன்னு ஆடியன்ஸ் அழாத குறைக்கு தள்ளிவிடுகிறார்கள்.

    அந்தாதூன் படம் அப்படி மூணு  வகைலையும் வராதது பெரும் ஆறுதல்!இதுல கண் பார்வை தெரியாத ஆகாஷ் (ஆயுஷ்மான் குரானா) மீது மேற்சொன்ன மூன்று  அணுகுமுறைகளும் இல்லாமல் புது மாதிரியாக காட்டியுள்ளனர் .ஒருவகையில் இது ப்ளாக் காமெடி படம் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.ஆனா நம்மூரு ப்ளாக் காமெடி படங்கள்ல கூட அனுதாப அலைகளை காண முடியும்.
   நல்லவன் கெட்டவன் வரைமுறைகளுக்கு உட்படாத கேரக்டர்களே படத்தை மேலும் சுவாரசியமாக்கும்.100% மசாலா படங்களில் அது சாத்தியமே இல்லை என்றாலும் இடைநிலை சினிமா மற்றும் இடைநிலை+மசாலா படங்களில் அது சாத்தியமே.இந்த படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் அந்த ரகம்.ராதிகா ஆப்தே மற்றும் அந்த பழைய நடிகர் அணில் தவான்  தவிர எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களாகவே உள்ளனர்

   ஆகாஷ்  கூட கண் தெரியாத ஆசாமியாக நடித்து ஐநூறு ரூபாய்க்கு நல்ல வீடு (என்ஜிஓ மூலம்) பெற்று வாழ்கிறார்.அந்த சிறுவனும் காசுக்கு ஆசைப்பட்டு பல்வேறு சேட்டைகளை செய்கிறான்(ரகசியமா வீடியோ எடுத்து வச்சிக்கிட்டு அதை பார்க்க ஐம்பது ரூபாய் வசூலிப்பது).அந்த உறுப்பு திருடும் டாக்டர் மற்றும் அவருக்கு உதவும் அந்த லாட்டரி விற்கும் பெண் மற்றும் அவளுக்கு துணையா வரும் ஆசாமி எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்!
             உண்மையில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.ஆனா போகப்போக விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது.குறிப்பா ஆயுஷ்மான் கண் தெரியாதவன் மாதிரி நடிக்கிறவன் என்று தெரிந்ததுமே சுவாரசியம் கூடிடுது.அதுக்கப்புறம் அந்த பாடியை டிஸ்போஸ் செய்யும் சமயத்தில் இவன் விடாமல் பியானோ வாசிக்க எப்ப ஒழிவான்?என்று தபு எதிர்பார்க்க கிடைக்கும் ஒரு சின்ன கேப்பில் கணவன் வந்துவிட்டதாவும் அவனது பியானோ இசை கேட்டு கைதட்டி பாராட்டுவதாகவும் ஏற்கெனவே எடுத்த வீடியோ பதிவ்ளிருந்து ஆடியோவை ப்ளூடூத் ஸ்பீக்கர்ல போட்டு அவனை வெளிய அனுப்புறதும்,அப்புறம்  அந்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை மாடியில் இருந்து தள்ளி விடும் நேரத்தில் ஒலிக்கும் பீத்தோவன் 5th ம் அட்டகாசம்!
A Fifth of Beethoven :D 

          அதுபோல ராதிகா ஆப்தே ஆயுஷ்மான் காட்சிகளில் காமெடி நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு.பிறகு அவரை அம்போவென விட்டுட்டாலும் ஆயுஷ்மானை தேடி அவன் வீட்டுக்கு வரும்போது தபு ஏடாகூடமா நின்னுகிட்டு இருக்கும்போது டென்சன் ஆகி கத்திட்டு போவது பட ஆரம்பத்தில் கோபத்தோடு வண்டி ஓட்டும் காட்சிகளில் அவர் சரியாகவே பொருந்துகிறார்.

                சில சின்ன சின்ன விஷயங்கள் கவனித்து செய்துள்ளார் இயக்குனர்.உதாரணமாக ஒரு காலத்தில் தான் ஹீரோவாக நடித்து பிறகு மார்க்கெட்டே இல்லாமல் போன பிரமோத் சின்ஹா(அணில் தவான்)  யூட்யூபில் தனது பட பாடல்கள் காட்சிகளுக்கு வரும் கமண்டுகளுக்கு லைக் போட்டு நன்றி தெரிவிக்கும் காட்சியை சொல்லலாம்.அப்புறம் லாட்டரி விற்கும் சக்கு பார்வையற்ற ஆகாஷை ஒரு லாட்டரி சீட்டை தொட சொல்லி பக்கத்தில் உக்காந்திருக்கும் நபரிடம் “பார்வையற்றவர்கள் ஆனடவனின் ஆசி பெற்றவர்கள்.அவர்கள் தேர்ந்தெடுக்கும் சீட்டு நிச்சயம் பரிசு பெறும்”என்று சொல்லி நூறு ரூபாய் சம்பாதிப்பது,ஆயுஷ்மான் உண்மையில் குருடன்தானா இல்லையா?என்று போலீஸ் அதிகாரியும்  தபுவும் வெவ்வேறு தருணங்களில் சோதிக்கும் காட்சி ரணகளம்! படத்தின் இறுதியில் தான் கண் தானம் பெறவில்லை என்பதுமாதிரி காட்டிட்டு கடைசில அந்த கோக் டின்னை உதைப்பதோடு முடிப்பது இன்னொரு உதாரணம்! சமீபத்தில் ரசித்து பார்த்த(இப்படி சொல்ல வைக்கும் படங்களே அரிதாகிவிட்ட நிலையில்) படங்களுள் ஒன்று!