Sunday, 1 March 2020

கோலிவுட் ரவுண்டப் 3.0


முதலில் நாம் சென்றது நெற்றிமாறன் இயக்கி கூர்யா நடிக்கும் வாடியவாசல் பட ஸ்பாட்டுக்கு.
.
நெற்றி: சேறும் சகதியுமாய் ஒரு குட்டையில் இருந்து எழுந்து வரீங்க!அப்படியே டைட் க்ளோசப்பில் கேமராவை பார்த்து “படிய்யா!படிடா டேய்!படிச்சு தொலைடா எருமை!” ன்னு ஆவசேமா அனல் தெறிக்க பேசுறீங்க!
.
கூர்யா: க்கும்!படம் பாக்க தியேட்டருக்கு வரவனே ஸ்கூல் காலேஜ் பசங்கதான்!நாம படிடா!கடிடா!ன்னு கடிச்சிட்டு இருந்தா எந்திரிச்சு ஓடிடுவான்!

நெற்றி: ஓடட்டும்லா!படம் ஓடாட்டி எனக்கென்ன?எசகுபிசகா எதையாவது ஒரு படம் எடுத்துட்டு கடைசில இப்படி ஒரு அட்வைஸ் பண்ணாத்தான் ஒலக விமர்சகன் படத்தை ஒலகசினிமாம்பான்!எனக்கும் மாசிய விருது கிடைக்கும்!

கூர்யா: அப்போ எனக்கு?

.
நெற்றி: இந்தாங்க சங்கு!டைட் க்ளோசப்பில் அட்வைஸ் பண்ணிட்டு அப்படியே இந்த சங்கை ஊதிய மேனிக்கு அப்படியே மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் ஒரு புள்ளியா மறைஞ்சு போகுற வரைக்கும் காட்டி எண்டு கார்ட் போடுறோம்!
.
கூர்யா (மைன்ட் வாய்ஸ்): க்கும்!ஏற்கெனவே என்னோட மார்க்கெட் அந்த நிலைமைலதான் இருக்கு!இதை இவன் நேரடியாவே சீனா எடுக்க போறானாம்!யப்பா மிடில!
************************************************************************************************************************.
அடுத்து கங்கட் கிரபு இயக்கி மம்பு நடிக்கும் மான்ஆடு பட ஸ்பாட்!
மாலை 6 மணி.
கங்கட் கிரபு: யப்பா ஒருவழியா தெளிஞ்சி கிளிஞ்சி நாமதான் கடைசியா ஸ்பாட்டுக்கு வந்தோம்னு நினைச்சா மம்பு நமக்கு மேல இருக்கான்!சரி அட்ஜஸ்ட் பண்ணுவோம்! டேய் மேக்கப்பு! அந்த தொப்பையும் தொந்தியுமா இருக்குற எக்ஸ்ட்ராவை புடிச்சு பெருசா தாடி ஒட்டி குல்லா மாட்டி கூட்டியா!லாங் ஷாட்ல எடுத்து மம்புன்னு ஒப்பேத்துவோம்!
.
எக்ஸ்ட்ரா வந்ததும்
கங்கட் கிரபு: ம்ம்...ஓகே!அப்படியே மேரா நாம் அப்துல் ரகுமான்!மேரா நாம் அப்துல் ரகுமான்னு பாடிகிட்டே விரலை நல்லா வளைச்சு நெளிச்சு அபிநயம் பண்ணு!
எக்ஸ்ட்ரா: மேரா நாம் அப்துல் ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.ரகுமான்!! மேரா நாம் ஏ.ஆர்.முருகதாஸ் !!!!!
அசிஸ்டன்ட்:சார் லிப் சிங்க் ஆகல!
.
கங்கட் கிரபு:ஆகாட்டி போகட்டும்!எடுத்தவரைக்கும் எடிட்டிங் கொண்டுவா!அங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம்!என்று சொல்லிவிட்டு மம்புவுக்கு போன் செய்கிறார்.யாரு மம்புவா?
.
மம்பு: ஏய்ய்ய் மம்பு இல்ல!எம்டிஆர் னு சொல்லு!
.
கங்கட் கிரபு:ஓ எம்டிஆரா?எரடு மசாலா  தோசா த்வரிதா  தரலு!
மம்பு: என்னையே கலாய்க்கிறானுங்களா!இரு வச்சிக்கிறேன்....ஹலோ கங்கட்ஜியா?நா இப்ப வெயிட் ரிடக்ஷன் ப்ரோக்ராமுக்கு மலேசியா வந்திருக்கேன்!இங்க பாத்ரூம்ல க்ரீன் மேட் தொங்கவிட்டு அப்படியே நா செல்பி கேமராவுல வசனத்த பேசிடுறேன்!நீங்க  அந்த பக்கம் பேஸ்டைம்ல அதை அப்படியே ரெகார்ட் பண்ணி யூஸ் பண்ணிக்குங்க.
.
கங்கட்: இங்க எக்ஸ்ட்ரா வாயசைச்சத லிப் சிங்க் பண்ணனும்!அதுக்கு மம்பு பாத்ரூம்ல டப்பிங் பேசி அனுப்புன ஆடியோவை அதுல ஒட்ட வக்கணும்!அது பத்தாதுன்னு க்ளோசப் ஷாட் எல்லாம் பேஸ் டைம் ரெகார்டிங் வச்சி முடிக்கணும்!ஸ்ஸ்ஸ்ஸ்....சப்பா!இன்னக்கி பேக்கப்!வழக்கம் போல மில்லி ஊத்துனாத்தான் சரியா வரும்!

கிரேம்ஜி:ஆடியன்சை எவ்வளவோ டார்ச்சர்  பண்ணிட்டோம்!இதை பண்ண மாட்டமா?


.
தயாரிப்பாளர்: (தலையில் துண்டோடு) அடேய் அவன் என்னடான்னா ஸ்பாட்டுக்கே வர மாட்றான்!இவன் என்னடான்னா ஆறு மணிக்கு வந்துட்டு ஏழு  மணிக்கு ஜூட் விட்டுட்டான்!அப்போ சாமிப்படம் முன்னாடி சத்தியம் காண்டிராக்ட் பேப்பர்ல கையெழுத்து எல்லாம் சும்மாவாச்சுகுமா!
.
*********************************************************************************
 அடுத்து பஞ்சித் இயக்கி கார்யா நடிக்கும் படத்தின் ஸ்பாட்....
.
பஞ்சித்: நீங்க இப்ப இன்னா பண்றீங்கன்னா.....
கார்யா:அன்னா மச்சி?இப்ப நா நார்த் மட்ராஸ் ஏரியாவுல வாழுற கேரக்டர்.பாக்ஸர்.லேண்ட் இஸ் அவர்ஸ்...க்ளைமேக்ஸ்ல ஒரு டுப்பாக்கி குண்டு!கரக்ட்?
.
கஞ்சித்: அதானுங்க!இன்னா நா சொல்றதுக்கு மின்னாடியே கரீட்டா சொல்றீங்கோ!அசிஸ்டன்ட் யார்னா கத சொன்னாங்களா?
.
கார்யா: இல்ல மச்சி!உன்கிட்ட இருக்குற ஒரே கத அதான?
.
கஞ்சித்: இன்னாதிது!நம்ம தொழில் ரகசியத்த அக்கூரேட்டா புரிஞ்சி வச்சிகிறாரு?இவராண்ட இனிமே உசாரா இருக்கோணும்! 
.
*******************************************************************************************************************

அடுத்து பெயரிடப்படாத ஒரு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றோம்!
 .
இருளோ என்று இருக்க அறையின் மூலையில் ஒரு  கேமரா ஓடிக்கொண்டிருக்க லைட்பாய், கேமராமேன், டைரக்டர், நடிகர் என்று எவரையும் காணாததால் சற்று பீதியடைந்து அங்கிருந்து ஜூட் விட எத்தனித்த நிலையில் கூரையில் இருந்து ஒரு குரல்!

ஆஸ்கர்!ஆஸ்கர்!ஆஸ்கர்!

ஓ!விவரம் புரிந்தவாறு நாம் அண்ணாந்து பார்க்க அங்கு கம்பிகள் உதவியோடு மூர்த்திபன் தொங்கியபடி இன்னொரு கேமராவை கீழ்நோக்கி போகஸ் செய்தவாறு கையசைக்கிறார்!
மூர்த்திபன் :இந்த முறை என்ன வித்தியாசம்னா....
உதயா: நீங்க சொல்லாமலே தெரியுது!எந்த நடிகர் நடிகையுமே இல்லாம ஒரு படம்!
மூர்த்திபன் :அதே!ஆஸ்கர் நிச்சயம்!தங்க கரடி லட்சியம்! என்றவாறு போகசை அட்ஜஸ்ட் பண்ண நாம் வெளியேறுகிறோம்!

*************************************************************************************************************************கடைசியாக போகேஷ் ஜனகராஜ் இயக்கி அண்ணா நடிக்கும் பாஸ்டர் பட ஸ்பாட்!
அண்ணா
இன்னா நீ சொல்லு
 நா வந்தா தில்லு
காலுல முள்ளு
போவாத நீ தள்ளு
என்று முனகியபடி இருக்க...
போகேஷ்: அப்படியே உங்க மகன்..
அண்ணா: மகன் வேண்டாம்!மள்னு வய்யி!அப்பத்தான் செண்டிமெண்ட் பலமா ஒர்க்கவுட் ஆகும்!
போகேஷ்: சரிங்ணா!உங்க மகளை நீங்க பாத்து பத்து வருஷம் ஆகுது!இந்த பத்து வருஷம் நீங்க கஞ்சா கடத்தியதால் உள்ள போயிட்டீங்க!
அண்ணா: அட என்னைய்யா!சும்மா ஜெயிலு விலங்கு நொய்யின்னிட்டு!!வேணாம்!காலேஜ் அட்மாஸ்பியர் போ!
போகேஷ்:ஆங்!சரிங்!நீங்க காலேஜ் ப்ரொபசர்!ஆனா டை கட்டி ஷூ போட்ட ப்ரொபசர் இல்ல!அழுக்கா கருப்பா கலீஜா வந்து...... அப்படி டெரரா நிக்குற ப்ரொபசர்!
அண்ணா:ஆங்!இது ஓகே!அப்படியே மேல போ!

போகேஷ்: நீங்க தினம் புல்லா ஏத்திகிட்டு கிளாஸ்ல குட்டி கத சொல்றது வழக்கம்!அதுக்கு பயந்துகிட்டே எவனும் க்ளாஸுக்கு வர மாட்றான்!
அண்ணா: ஆங்!இங்க ஒரு சாங்!அது எல்லாருக்கும் தெரியும்!மேல போ!
போகேஷ்: இதனால காலேஜ் நிர்வாகம் உங்கள சஸ்பென்ட் பண்ணுது!இது தெரிஞ்சி காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கொதிச்சி எழுறாங்க!
அண்ணா: அதான் நா கிளாசே எடுக்காம அறுக்குறேன்!அப்புறம் எதுக்கு இவனுங்க கூவுறாங்க?
போகேஷ்: நீங்க கிளாசே எடுக்காம அறுக்குரதால தான் அவங்க அந்த நேரத்துல ஜாலியா கேண்டீன்ல அரட்டை இன்னும் ரெண்டு அவர் கட் பண்ணிட்டு சினிமானு  இருக்காங்க!வேற வாத்தியார் வந்து கிளாசை ஒழுங்கா எடுத்தா இதெல்லாம் முடியுமா?
அண்ணா: ஆங்!பாயின்ட்!இப்ப ஒரு பெரிய உள்ளிருப்பு போராட்டம்!எனக்காக மாணவர் தலைமையில்!இல்லையா?
போகேஷ்:ஆமாங்ணா!
அண்ணா: அப்படியே பாகிஸ்தான்ல இருக்குற நாப்பதாயிரம் தீவிரவாத முகாமில் இருக்கும் எல்லா அப்பாவிக்கும் இங்க க்ரீன் கார்டு கொடுக்கணும்னு குரல் கொடுக்குறேன்!கொடுத்த மேனிக்கு...
இருவிரல் கிருஷ்ணாராவ்!
ஆகிடுச்சே நாடு (இ)ராவ்!
உட்டுகினேன் நா ராவ்!
ப்ரோபசரில் நான் வாவ்!
இப்படி ஒரு பாட்டு அப்படியே மழை எபெக்ட்ல!ஈரோயினிக்கு வேற எந்த சீனும் இல்ல!அதனால இந்த பாட்டுல கூட ஆடுறாப்ல!
போகேஷ்: சரிங்ணா!
அண்ணா: அப்படியே அடுத்த சீன்ல டெல்லிக்கு போறோம்!அங்க நான்!எதிர்ல க்ரம்ப்!
போகேஷ்: அவரு எப்படி?
அண்ணா: அது அப்படித்தான்!ரெண்டே நிமிஷம் பேசுறேன்!க்ரீன் கார்ட் இல்ல ரேஷன் கார்ட் கூட கிடையாது  என்கிறார் க்ரம்ப்!!எல்லாரும் என்னை அமெரிக்க அதிபர் தேர்தல்ல க்ரம்ப்க்கு எதிரா  போட்டியிட சொல்றாங்க!நா மறுத்து “க்ரீன் கார்ட் கண்டிப்பா கொடுப்பேன்!தீவிரவாதிகளுக்கு மூணு வேலை பிரியாணி போட்டு கைகால் அமுக்குவேன்” என்று உறுதியளிக்கும் பர்னி பாண்டரஸ்க்கு வாய்ஸ் கொடுக்குறேன்!அவர் ஜெயிக்கிறார்!அமெரிக்காவே என்னை தலைல வச்சிக்கிட்டு கொண்டாட திரும்ப நான் கிளாஸ்ல குட்டி கத சொல்ல ஆரம்பிக்க..... அப்படியே ஃப்ரீஸ் பண்ணி முடிக்கிறோம்!




Wednesday, 1 January 2020

Yavanika 1982


                  கிளாசிக் அங்கீகாரம் பெற்ற படங்கள் பல கவனிப்பாரற்று கிடக்கின்றன.இருந்தும் இப்படி எருமை மாட்டு தோலால் செய்த sensibility யோடு அரசு நிறுவனங்கள்(National Film Archives!BLAH!)  இருக்கும் வேளையில் சில தனி நபர்கள்/விடியோ விஷன் நிறுவனங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள்,மற்றும்  யூ ட்யூப் சேனல்கள்  முயற்சி எடுத்து சில படங்களை நல்ல முறையில் காப்பாற்றி வைத்துள்ளன.குறிப்பாக ஹாட்ஸ்டார் நிறுவனம் மற்றும் Cinema Limitless செய்துள்ள/செய்துவரும்  பணி மகத்தானது.பெரும்பாலான மலையாள கிளாசிக் படங்களை தரமாக சப்டைட்டில் சேர்த்து(இது என்னை பொறுத்தளவில் மிக முக்கியம்.காரணம் சாதாரணமாக இப்படங்கள் சப்டைட்டில் இல்லாமல் யூட்யூபில் கிடைக்கின்றன)வெளியிடுகின்றன.
   இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற தீராத எண்ணம் பல வருடங்களாக  இருந்தாலும் சப்டைட்டில் இல்லை என்பதால்  இப்படத்தை இதுவரைக்கும் பார்க்க இயலவில்லை.
      ஐயப்பன் எனும் மேடை நாடக/நடன நிகழ்ச்சிகளுக்கு தபேலா வாசிப்பவர் காணாமல் போகிறார்.அவனுக்கு என்ன நேர்ந்தது?கொலை செய்யப்பட்டானா?அப்படியென்றால் அதை செய்தது யார்?கொல்லவேண்டிய காரணம் என்ன?என்பதை ஆராய்வதே படம்.
        “ஓ!இது மற்றுமொரு whodunit ஆ?” என்று கேட்டால் இல்லை.அதையும் தாண்டிய ஒரு பரிமாணம் இப்படத்திற்கு உள்ளது.வெறும் கொலையாளி யார் என்று கூறி பார்வையாளனை அதிர வைப்பதல்ல இப்படத்தின் நோக்கம்.இன்னும் சொல்லப்போனால் யார் கொலையாளி என்று இறுதியில் காட்டப்படும்போது நமக்கு பெரிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை.உண்மையில் அத்தகைய அதிர்ச்சியை உண்டாக்குவதல்ல இயக்குனரின் நோக்கம்.
   படத்தின் ஆன்மாவாக இருப்பது மேடை நாடக குழு ஒன்றின் வாழ்க்கை,அவர்களது எதிர்பார்ப்பு- ஏமாற்றங்கள், ஒத்திகை பார்ப்பது,ஒவ்வொரு ஊராக பயணிப்பது,ரத்தசொந்தம்-நட்பு போன்றவை இல்லாவிட்டாலும் மேடை நாடக நடிகர்கள் என்ற அந்த ஒரு மெல்லிய இழையால் பின்னப்பட்டவர்கள்.
     ஏதோ சினிமா நடிகர்கள் போல லட்சக்கணக்கில் அல்ல ஏன்  ஆயிரக்கணக்கில் கூட அவர்களால் சம்பாதிக்க முடியாது.சில நூறுகள் ஐம்பதுகள் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும்.இருந்தாலும் அவர்கள் அதை செய்கிறார்கள்.பெரிய புகழெல்லாம் கூட கிடைக்காது. இருந்தாலும் நாடகம் நடத்துகிறார்கள்.
   நடிகர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் சண்டைகள் இருந்தாலும் நாடகம் நடந்துகொண்டே இருக்கிறது.துவக்கத்தில் ஐயப்பன் வராதபோதும் நாடகம் நடக்கிறது.பிறகு வேறொருவர் வந்து தபேலா வாசிக்கிறார்.ஒரு நடிகை திருமணம் புரிந்து துபாய் செல்லவிருக்க அவள் இடத்தில்  இன்னொருத்தி என்று நாடகம் எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் நிறுத்தப்படுவதில்லை.
   அதனாலேயே ஐயப்பன் காணாமல் போய் இருவாரங்களுக்கு யாருமே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.பிறகு சக நாடக நடிகர்களின் வற்புறுத்தலால் குழுவின் தலைவர் வக்கச்சன் (திலகன்) போலீசில் புகார் தருகிறார்.அதன்பிறகு காவல் அதிகாரி ஜேக்கப் (மம்மூட்டி) இவ்வழக்கை விசாரிக்கிறார். 
     இதன்பிறகு வந்த பல படங்களில் மம்மூட்டி இதுமாதிரியான வேடத்தில் நடித்துள்ளார்.அதில் சிலவற்றை பார்த்துள்ளேன்.உண்மை(Truth) படம் ஒரு உதாரணம்.இருந்தாலும் இதில் அவர் ஒரு ஹீரோ வேடத்தில் மையமாக அல்லாமல் படத்தை முன்னகர்த்தும் ஒரு முக்கிய கேரக்டராக மட்டுமே வருகிறார்.
     படத்தின் முக்கிய அச்சாணி போல வருபவர் ஐயப்பன்(பரத் கோபி).இந்த கேரக்டர்ல நடிக்க அவர் தபேலா வாசிக்க கற்றுக்கொண்டார் என்று படித்தேன்.அதை காட்சியில் காண முடிகிறது.வெறுமனே மண்டையை ஆவேசமா ஆட்டியபடி வரட்டி தட்டும் பாவனைகள் எதையும் இப்படத்தில் அவர் தபேலா வாசிக்கும் காட்சியின் எந்நொடியிலும்  காண முடியாது.
  இவர் ஒரு பேட்டியில் “நடிகன் என்பவன் ஒரு கேரக்டர் என்ற அந்த வரைமுறைக்குள் நுழைந்து நடிக்க வேண்டுமே ஒழிய தன்னில் அந்த கேரக்டரின் வரைமுறையை உருவாக்கி நடித்தால் அந்த நடிகன் என்பவனே திரையில் தெரிவான்.”
    பரத்கோபி நடித்த படம் பார்ப்பது இதுவே முதன்முறை.இவரிடம் கண்டது spontaneity .ஒரு அறைக்குள் நுழைகிறார் என்றால் 'இந்த குறிப்பிட்ட இடத்தில் அந்த கேரக்டர் நிக்கும்.அதை நோக்கி நமது நடை அமைய வேண்டும்' என்றெல்லாம் அவர் திட்டமிடுவதில்லை.அப்படியே வேகமாக நுழைகிறார் அதன்பின் நிகழ்வது முற்றிலும் தன்னியல்பான எதிர்வினையே! 
   இப்படத்தில் பெண்பித்தனாக குடிகாரனாக அதேநேரம் தபேலா வாசிப்பதில் கை தேர்ந்த ஒரு கலைஞனாக என்று பல்வேறு பரிமாணங்கள்.ஐயப்பன் கேரக்டரே ஒரு மர்மமாகத்தான் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இங்கிருந்த ஐயப்பன் ஏதோ லக்னோ சென்றதாகவும் பதினைந்து வருடம் கழித்து திரும்பியபோது தபேலா வாசிப்பில் கைதேர்ந்தவனாக திரும்பியதாக கூறப்படுகிறது.அதோடு அல்லாமல் அங்கே ஒரு மனைவியை கைவிட்டுவிட்டு கேரளம் வந்து இங்கே ஒரு மனைவி பதின்ம வயது மகன் விஷ்ணு (அசோகன்) சகிதம் வாழ்வதாக காட்டப்படுகிறான்.அதோடு எங்கு சென்றாலும் அங்குள்ள பெண்களை தன்வயப்படுத்திவிடுபனாகவும் காட்டப்படுகிறார்.
        எந்நேரமும்  குடி&பெண்கள்!இதேபோன்ற இன்னொரு  பெண் பித்தனும் அதே நாடக குழுவில் உண்டு. பாலகோபாலன்(நெடுமுடி வேணு).


ஆனால் அவரின் பெண் பித்து என்பது வேறு.வெறுமனே படுக்கைக்கு அழைத்தோ நிர்பந்தத்தின் பேரில் மனைவியாக்கிக்கொள்ளும் தன்மையோ இல்லாது அனைத்து இளம் பெண்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து நல்ல பேர் வாங்கி கொள்ளுதல்.அதன்மூலம் ஏதேனும் ஆதாயம்(!!??) பெற முடிந்தால் சரி.இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாலகோபாலன் பலவந்தம் செய்யாத பெண் பித்தன்!
    இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருமே ஒரு தனித்தன்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.திலகன் மேடை நாடகத்தில் அந்த காலகட்டத்திலும் ஆக்டிவ்வாக நடித்து கொண்டிருந்தவர் என்பதால் அந்த கேரக்டருக்கு அவர் நியாயம் செய்ய முடிந்துள்ளது.

அதுமட்டுமல்லாது படத்தில் வரும் மேடை நாடக காட்சியில் அந்த சிகப்பு திரைச்சீலை அவர் தனது நிஜ  நாடக குழுவில் இருந்து கொண்டுவந்ததாம்.யவனிக என்றால் திரைச்சீலை!இதே தலைப்பில் ஓவியர் ஜீவா அவர்கள் ஒரு புத்தகம் எழுதி தேசிய விருது பெற்றார்(அதிலும் இப்படத்தை பற்றி எழுதியிருப்பார்)
     உண்மையில் படத்தில் என்னை கவர்ந்தது யதார்த்தம்.இந்த வார்த்தையை பயன்படுத்தவே பயமாக உள்ளது.யதார்த்தம்-யதார்த்த சினிமா கலைப்படம் என்றெல்லாம் இப்போது தமிழில் ஏதேதோ செய்து பயமுறுத்தும் நிலையில் இவ்வார்த்தை கடும் ஒவ்வாமையை தந்தாலும் இந்த வார்த்தையே இங்கே பொருந்தி வருவதால் வேற வழியில்ல.படத்தின் துவக்கத்தில் அந்த நாடக குழு வேனில் ஏறி நாடகம் போட வேறொரு ஊருக்கு செல்வதாக துவங்குவதும் படம் முடியும் போதும் அதே போல வேனில் ஏறி சொந்த ஊருக்கு செல்வதாகவும் முடிகிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த குழுவினரோடு நமக்கே நெருங்கிய பரிச்சயம் உண்டாகிவிட்ட ஒரு உணர்வு.அதை சரியாக வார்த்தைகளில் கொண்டுவரவே முடியாது.ஆனால் உணர்வுகளில் கொண்டுவந்துவிட்டார்கள்!

Sunday, 13 October 2019

Executive Action (1973)


              
            இப்படம் வெளியானபோது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பல : படத்தில் ஒரு ஆழம் இல்லை.தவிர படத்தில் எல்லோரும் கிளிப்பிள்ளை போல வசனத்தை ஒப்பிக்கிறார்கள்,பல கற்பனை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்..etc..etc..ஆனால் கென்னடி படுகொலை தொடர்பாக சந்தேகம் எழுப்பிய முதல் முழுநீளப்படம் இதுவே!கென்னடி கொலை நிகழ்ந்து பத்தாவது ஆண்டு நினைவாக படம் வெளியிடப்பட்டது.படம் பார்க்க வந்தவர்களுக்கு பல்வேறு புகைப்படங்கள் ஆவண தகவல்கள் என்று ஒரு pamphlet போல வழங்கப்பட்டது.

    சரி படத்தில் பல சம்பவங்கள் அதில் காட்டப்பட்டது போல நிகழாமல் இருந்திருக்கலாம்.கதாபாத்திரங்கள் மாறுபட்டிருக்கலாம்.ஆனால் படம் எழுப்பும் கேள்விகள் ...அதை மறுக்க முடியுமா?என்றால் இல்லை என்பதே பதில்.
     கென்னடி சோவியத்துடன் சமாதானமாக போவது பற்றி பேசுதல்,வியத்நாமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க படைகளை விளக்கிக்கொள்ளுதல் பற்றிய வாக்குறுதி,சிஐஏ அமைப்பையே கலைக்கும் முயற்சி என்று பல பேச்சுக்கள் செய்திகள் காட்டப்படுகின்றன.அதை ஒரு குழு பார்த்துக்கொண்டிருக்கிறது.அக்குழு யார் என்ன?என்பது பற்றியெல்லாம் சொல்லப்படுவதில்லை.என்றாலும் அது தீவிர வலதுசாரி குழு என்பது உறுதியாகிறது.இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் KKK மாதிரியான ஒரு வெள்ளை ஆதிக்க குழு,போர் தளவாடங்கள் விற்கும் தொழிலதிபர்கள் அடங்கிய குழு.அவர்களுக்கு கென்னடி பெரும் இடைஞ்சல்!He must go! 
கொலைக்கு நிதி அளித்தவராக காட்டப்படுபவர்

   கென்னடியை எங்கே வைத்து கொல்லலாம் என்பது பற்றிய விவாதங்கள் நடக்கிறது.பிறகு டல்லாஸ்க்கு திறந்த காரில் செல்ல உள்ளார் என்ற தகவல் கிடைத்ததும் அங்கேதான் அவரை முடிக்க வேண்டும் என்று இடத்தை உறுதி செய்கிறார்கள்.பிறகு அவரது வாகன அணிவகுப்பு செல்லும் இடங்களை மேப்பில் ஆராய்ந்து மூன்று இடங்களில் மூன்று துப்பாக்கி சுடும் வல்லுனர்களை இருத்தி கென்னடியை ஒரு triangulated gunfire zone(மூன்று புறத்தில் இருந்து சுடுவதற்கு வாகான இடம்) க்குள் கொண்டுவருதல் பற்றி திட்டமிடுகிறார்கள்.அதாவது ஒரு துப்பாக்கி குண்டில் இருந்து அவர் தப்பித்தாலும் மீதமுள்ள இரண்டு நபர்களின் குண்டிலிருந்து தப்பிக்க வாய்ப்பு மிக மிக குறைச்சல்.

      மலைப்பாங்கான இடத்தில் பயிற்சி எடுக்கிறார்கள்.,மூவரும் மூன்று வெவ்வேறு இடங்களில் துப்பாக்கியோடு நிற்க ஒரு திறந்த காரில் ஒரு ஆளுயர பொம்மை போல வைத்து அதை ஓட்டி செல்கிறார்கள்.அந்த கார் அந்த மூவரையும் கடந்து செல்லும் முன் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த வேண்டும்.டைமர் வைத்து பக்காவாக திட்டமிடுகிறார்கள்.இறுதியில் பொம்மையின் எந்தெந்த பகுதியில் குண்டு துளைத்தது என்பதையும் ஆராய்ந்து சுடுவோர் நிற்கும் இடங்களையும்  டைமிங்குகளையும்  இன்னும் fine tune செய்கிறார்கள்.
துல்லியமாக சுட பயிற்சி எடுக்கிறார்கள்

   சரி மூன்று கொலைகாரர்களை வைத்து முடித்துவிடலாம்.ஆனால் யாரை சிக்க வைப்பது?அங்கேதான் லீ ஹார்வி ஆஸ்வால்ட் சிக்குகிறான்.இவர்களின் திட்டம் குறித்தெல்லாம் அவனுக்கு எதுவும் தெரியாது.ஆனால் அவனை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?கொரிய யுத்தத்தில் US Marines ல் இருந்தவன்.பிறகு வெளியேறி சோவியத் யூனியன் செல்கிறான்.அங்கே சில காலம் இருந்துவிட்டு அங்கே சோவியத் குடிமகளான மரீனாவை மணம் புரிந்து மீண்டும் அமேரிக்கா திரும்புகிறான்!
மனைவி குழந்தையுடன் ஆஸ்வால்ட்


   சார்லி சாப்ளின் பற்றி பலருக்கும் தெரியும்.அவர் இடதுசாரி அனுதாபி என்று கட்டம் கட்டி அமெரிக்கா அவரை வெளியேற்றியது.பிறகு அவரது கடைசி காலத்தில் தான் ஏதோ பிச்சை போடுவது போல அமெரிக்காவுக்கு அழைத்து ஆஸ்கர் கொடுத்தார்கள்.எப்படி?வெறும் இடதுசாரி அனுதாபி என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை இப்படி குடைந்து எடுத்திருக்கிறார்கள்(மேலும் பல பல ஹாலிவுட் பிரபலங்கள் மெக்கார்த்தி ஆட்சியில் இப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்).ஆனால் ஒரு ex marine ஆஸ்வால்ட் சகஜமா சோவியத் போகிறான்.திரும்ப அங்கிருந்து எந்த சிக்கலும் இல்லாமல் அமெரிக்கா திரும்புகிறான்.


  சோவியத் என்பது அக்காலத்தில் ஒரு இரும்புத்திரை என்பது தெரிந்ததே!அதற்குள் இவன் சுலபமா போயிட்டு சுலபமா அமேரிக்கா திரும்பி அங்கே வாழ துவங்குகிறான்.
 
சோவியத் குடியுரிமை அளிக்குமாறு ஆஸ்வால்ட் வேண்டிக்கொண்ட கடிதம்
சிஐஏ எப்பிஐ ஆகியோரின் கண்காணிப்பில் அவன் இருக்கிறான்.தெருவில் நின்று கேஸ்த்ரோ ஆட்சியை காப்பாற்றும்படி துண்டு சீட்டு கொடுக்கிறான்.அசல் வீடியோ கீழே.


   ஆக இத்தனை கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் ஒருவன் தனியே திட்டமிட்டு எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி  கென்னடியை கொன்றான் என்பதெல்லாம்  அப்பட்டமான புழுகு என்பது உறுதியாகிறது.கடைசியில் மெக்ஸிகோ சென்று அங்கிருந்து கூபா செல்லவும் முயன்றுள்ளான்.அப்புறம் முடிவை மாற்றிக்கொண்டு டெக்சாஸ் வந்து டெக்சாஸ் ஸ்கூல் புக் டெப்பாசிட்டரி(TSBD) ல் வேலைக்கு சேர்கிறான்.

    இப்ப முதலில் சொன்ன அந்த குழு ஆஸ்வால்ட் மாதிரியே ஒரு இளைஞனை பிடித்து ஆஸ்வால்டின் நடை உடை பாவனை உச்சரிப்பு முறை போன்றவற்றை வீடியோ கேசட் மூலம் காட்டி அந்த இளைஞனை அவனைப்போலவே பழக்குகிறார்கள்(பில்லா படத்தில் அலெக்சாண்டர்-   ராஜப்பாவிடம்  பில்லாவின் வீடியோ  கேசட்டை காட்டி   பழக்கும் காட்சி நினைவிருக்கா?அந்த மாதிரி!).பிறகு அவன் ஒரு பழைய கார் விற்கும் கராஜில் போய் தகராறு செய்கிறான்.கடைசியில் என்பேர் ஆஸ்வால்ட் என்று உரக்க சொல்லிவிட்டு வருகிறான்.ஒரு துப்பாக்கி விற்கும் கடையில் கார்கேனோ ரைபிளை கொடுத்து அந்தில் scope பொருத்தி தருமாறு சொல்கிறான்.அங்கும் பெயரை உரக்க சொல்கிறான்.இப்படி ஆஸ்வால்ட் அங்கெல்லாம் நடமாடியதாக ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
ஆஸ்வால்ட் போலவே ஒருவன்
 
வெட்டி ஒட்டப்படும் ஆஸ்வால்டின் முகம்
   அந்த மூவருக்கும் கூலி பேசப்படுகிறது.இப்போதைக்கு கொஞ்சம் தொகை.பிறகு ஐந்தாண்டுகள் கழித்து ஒரு பெரும் தொகை அவர்களுக்காக திறக்கப்படும் சுவிஸ் வங்கி கணக்கில் வரவு.பத்தாண்டுகள் கழித்து மேலுமொரு பெரிய தொகை!ஐந்தாண்டுகள் அமெரிக்கவை விட்டு வெளியே இருக்க வேண்டும்!Heat அடங்கியதும் நாடு திரும்பலாம் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படுகிறது.
    கென்னடி அடுத்தாண்டு தேர்தலில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த செல்வாக்கு குறைந்த இடம் என்று சொல்லப்படும் டெக்சாஸ் வருகிறார்.திறந்த காரில் சென்றால் கூடுதல் மக்களின் அபிமானத்தை பெறலாம் என்று நினைக்கிறார்.காரின் இருபுறங்களிலும் நின்றுகொண்டே வரும் சீக்ரட் சர்வீஸ் நபர்களை கூட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.பிறகு நடந்தது வரலாறு.

Foster: [speaking to Farrington] Dallas has one of the highest murder rates in the country. In the last two years, the Secret Service has established 149 threats against Kennedy's life from Texas alone, yet they send him into hostile territory with no more protection than you and I would arrange for a favorite dog. 

TSBD ஆறாவது மாடியில்  ஒருவன்.இவன் சுட்டுவிட்டு துப்பாக்கியை வைத்துவிட்டு செல்கிறான்.பிறகு ஆஸ்வால்ட் சிக்கியதும் அவனையும் இந்த துப்பாக்கியையும் இணைத்து கதை பின்னுகிறார்கள்!

அருகில் உள்ள கட்டிடத்தில் இரண்டாவது ஆள்

Grassy Knoll ன் பின்புறத்தில் மூன்றாவது ஆள்.இந்த ஆள் சுட்டதில் தான் கென்னடி தலை சிதறியது!இது மட்டும் கென்னடிக்கு  முன்புறத்தில் இருந்து சுடப்பட்டது


   துப்பாக்கியால் சுட்ட மூவரும் கூலாக தங்களது துப்பாக்கிகளை எடுத்துகொண்டு வெளியேறுகிறார்கள்.ஆங்காங்கே சீக்ரட் சர்வீஸ் என்ற போலி பேட்ஜ் உடன் இருக்கும் நபர்கள் உதவியோடு இவர்கள் விமானம் ஏறி தப்பிக்கிறார்கள்.ஆஸ்வால்ட் கொலை நடந்த 12.30 மணிக்கு TSBD கட்டிடத்தின் வேறொரு தலத்தில அமர்ந்து கோக் குடித்துக்கொண்டிருக்கிறான்.பிறகு அங்கிருந்து வெளியேறுகிறான்.முக்கால் மணி நேரம் கழித்து காவல் அதிகாரி ஜே.டி.டிப்பிட் கொல்லப்படுகிறார்.ஆனால் ஆஸ்வால்டால் அல்ல!வேறொரு நபரால் என்றும் அதை அப்பகுதி மக்கள் சிலர் பார்ப்பதாகவும் காட்டுகிறார்கள்.
   அதிபரை கொன்ற(??!) ஆஸ்வால்ட் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கிறான்!ஆகா!எத்தனை cool personality!ஒலகத்திலேயே இப்படி எங்காவது கொலை செஞ்சிட்டு படம் பார்த்த கதை உண்டா?அங்கே அவனை கைது செய்கிறார்கள்(பக்ரா சிக்கிடுச்சு).
              அதற்காக ஆஸ்வால்ட் மகா உத்தமன் என்றெல்லாம் சொல்லவில்லை.அவன் சிஐஏவின் கீழ் சோவியத்தில் ஏதோ பணிக்காகவே அனுப்பி வைக்கப்பட்டான்.அது சரியாக நடந்துமுடின்ததோ இல்லையோ அவன் அமேரிக்கா திரும்புகிறான்.எப்பிஐ அதிகாரி ஒருவர் இவனை கண்காணித்து வந்ததாகவும் இவன் ஒருநாள் அந்த கண்காணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எப்பிஐ அலுவலகத்திற்கே சென்று கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறான்.உண்மையில்  அதில் என்ன இருந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை!காரணம் அந்த கடிதத்தை அந்த அதிகாரி எரித்துவிட்டார்!அவனுக்கொரு சந்தேக பின்னணி இருந்ததை இவர்கள் வாகாக பயன்படுத்திக்கொண்டுவிட்டார்கள் 
Day of the Jackal
          அதே காலகட்டத்தில் பிரெஞ்ச் அதிபராக இருந்த சார்ல்ஸ் டி கால் மீதும் பல்வேறு கொலை முயற்சி தாக்குதல்கள் நடந்துள்ளன.(இத்தகைய ஒரு கொலை முயற்சியை  கற்பனையாக அதே நேரத்தில் பயங்கர விறுவிறுப்பாக சொன்ன படம் The Day of the Jackal).ஆனால் அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட சீக்ரட் சர்வீஸ் வீரர்களின் பாதுகாப்பிலேயே இருந்தார்.ஆனால் கென்னடிக்கோ வெறும் பன்னிரண்டு பேர்தான்!அவர்களில் ஒன்பது பேர்  முந்தைய தினம் ஃபுல்லா சரக்கேத்திகிட்டு அரைமப்பில் அடுத்தநாள் ட்யூட்டிக்கு வந்தவர்களாம்!

  பதினெட்டு சாட்சிகள் 1967 க்குள் வெவ்வேறு காரணங்களால் மரணத்தை தழுவுகிறார்கள்.அப்படி நான்காண்டுகளுக்குள் பதினெட்டு பேர் தற்செயலா இறந்து போவதற்கான ப்ராபபலிட்டி  ஓராயிரம் ட்ரில்லியனில் ஒன்றாம்!
எனது மிக அபிமான நாயை கூட இப்படி ஒரு டுபாகூர் பாதுகாப்பு அடங்கிய வாகன அணிவகுப்பில் அழைத்து செல்ல மாட்டேன் என்கிறான் ஃபாஸ்டர் .





                  சோவியத் அதிபர் ஒரு சாலையில் செல்கிறார் என்றால் அங்குள்ள கட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் பாதுகாப்பு வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்பது மாதிரியான பல்வேறு  அசல் தகவல்களை இப்படம்  வழங்குவதன் மூலம் வேண்டுமென்றே கென்னடியை குறைவான பாதுகாப்பு ஏற்பாட்டில் அழைத்து சென்று முடித்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.