Friday, 27 January 2012

எக்சைல் -அரச்ச மாவ அரைப்போமா?

உதயா டில்லிக்குசெல்கிறான்!அங்கு ஒரு பெண் எழுத்தாளர்!இதே காட்சி "எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்" காட்சியை நினைவு படுத்தலாம்!அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது!
தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை!கேரளா மலப்புரத்தில் 3500 பேரு கூடுனாங்க!எதுக்கு?அய்யாவோட தமிழ் பேச்சை கேட்க(அவர்கள் மலையாளிகள் இருந்தாலும் இவரை தமிழில் பேச சொல்லி கேட்பார்களாம்!)எல்லாரும் நரம்பு புடைக்க கத்தும்போது இவர் சாந்தமாக பேசுவது நல்லா இருக்குன்னு சொல்றாங்களாம்! சரி இவுரு என்னா பேசுனாருன்னு அந்த மக்களுக்கு என்ன புரிந்ததோ? நாம் ஒரு மலையாள படத்தை பார்த்தால் என்ன புரியுமோ அவ்வளவுதான்!
முன்பு நான் கடைசியாக செல்ல விரும்பும் நாடு அமேரிக்கா அப்படின்னு மூச்சுக்கு __ தபா(பின் நவீனத்துவத்துல நம்பர் வரக்கூடாதாமே?-கொய்யாக்கோ) சொல்லிட்டு இப்போ ஏதோ ஒரு சாமியார் அமெரிக்காவை தாழ்த்தி பேசியவுடன் அங்கு 50% மன நோயாளிகள் தாங்கள் மன நோயாளிகள் என்று தெரிந்து மருந்துசாப்பிடுராங்களாம்!ஆனால் இங்கு 80% மன நோயாளிகள்அதை பற்றி தெரியாமலே இருக்காங்களாம்!(உங்க வாசகர் சதுரத்தில் இது  எத்தனை விழுக்காடு?-கொய்யாகோ)
Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image
        (புல்லெட்ஸ்'ல் விந்து ஸ்டாக் இல்லை!அதனால் இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்துள்ளேன்!!)    சாமியார்  பேசி கொண்டிருக்கிறார்!திடீரென்று உதயாவுக்கு வெளியே சைகை கட்டும் ஒரு செமபிகரு வெளியே வருமாறு சைகை செய்கிறார்!உதயா எழுந்து வெளியே செல்ல முயற்சித்தால் குஷால் தாசின் அடியாட்கள் இவனை வெளியே உடாமல் தடுக்கின்றனர்!எப்படியோ முண்டியடித்து வெளியே வந்து விழுந்தான் உதயா!அப்போது சிதறிய செருப்பை யாரோ ஒரு பிச்சைக்காரன்  சேர்த்து இவன் பக்கத்தில் போட்டுவிட்டு செல்கிறான்!அதன் படம் கீழே!

இதென்னா ஒரு ஆண் ஒரு பெண்செருப்பு!உதயா சொல்வதெல்லாம் பொய் என சிலர் சொல்லலாம்!ஆனால் செருப்பில்லாமல் சுற்றியலைந்த உதயா ஒரு திருமணத்தில் ஓசியில் தின்று கொண்டிருந்தபோது திருமண வீட்டார் இருவரும் இவனை யார் நீ என கேட்க கைகலப்பாகி ஆள உட்டாபோதும்னு ஓடியாந்த போது  அவசரத்தில் வாசலில் இருந்த செருப்பை ஜோடி மாற்றி போட்டுகொண்டு ஓடினான்!(தவிர பின்னவீனத்துவத்தில் ஆண் பெண் பேதமேது?)
              திருமணம் நடந்ததாக சொல்லப்படும் ஆழ்வார்பேட்டையில் இருந்து தப்பிக்க அவன் தாறுமாறாக ஓடினான்! பஸ் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம கூட எழவில்லை!(டிக்கட் வாங்காம அங்க வேற ஒத  வாங்கணுமா உதயா?-கும்மாங்கோ)
          ஆழ்வார்பேட்டை-மந்தவெளி-மைலாப்பூர்-முண்டக்கண்ணி அம்மன் கோவில்-லைட் ஹவுஸ்-மெரீனா பீச்

         இப்படி ஓடியது பாதி மாரத்தானாக கூட இருக்குமோ என்று உதயாவுக்கு ஒரு சந்தேகம்!நின்னு யோசிச்சா உதயா உதையா என மாறிடும்னு தெரிஞ்சி தொடர்ந்து ஓடினான்!வழியில் ஒரு பன்றி இவனுக்கு புட்டத்தை காட்டிக்கொண்டு இவனோடு சேர்ந்து ஓடியது வியப்பளித்தது!ஒரு வழியாக அந்த பன்றி தெருவோரம் இருந்த _யை கண்டு அங்கு திசை திரும்பியதில் உதயா ஆறுதல் அடைந்தான்!
         ஓசி சோறு தின்னத்துக்கா இம்புட்டு ஓட்டம ஓட உட்றானுங்க ***** என்று வைந்தான்!கில்லி படம் போல லைட் ஹவுஸ் உயரத்தில் பல்லி போல ஒட்டிகொள்ளலமா எனவும் நினைத்தான்!ஆனா திரிசா இல்லையே!திரிசா கெடைக்கலைன்னா  திவ்யா எனவும் சொல்லி பார்த்தும் ஒரு மொக்க பிகரும் மடியவில்லை!ஒருவழியாக மெரீனா வந்தடைந்தான்!
        ஜோடி ஜோடியாக காதலர்கள் காம களியாட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருன்தது இவனுக்கு எரிச்சலை தந்தது!பிரான்சில் ழான் புழான் என்னும் நகரத்தின் வீதிகளில் ஜோடிகள் உடலுறவே செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறான்!இங்கே எப்போ அது போல வருமோ!இதை ழாக் வாழபழாக் என்னும் கவிஞர் தனது கவிதையில் சொல்வதாவது:
         Si mi voz muriera en tierra...

Si mi voz muriera en tierra,
llevadla al nivel del mar
y dejadla en la ribera.

Llevadla al nivel del mar
y nombradla capitana
de un blanco bajel de guerra.

Oh mi voz condecorada
con la insignia marinera:
sobre el corazon un ancla
y sobre el ancla una estrella
y sobre la estrella el viento
y sobre el viento una vela! 

தவறு  நடந்து விட்டது!ழாக் வாழபழாக் பிரெஞ்சு கவிதைக்கு பதில் ரபெல் ஆள்பெர்டி எழுதிய ஒரு கவிதை இங்கே பிரசுரமாகிவிட்டது!வாழபழாக் பிரெஞ்சு அரசை எதிர்த்து கலக்கம் செய்தவர்!நடுரோட்டில் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சில் துப்பும் போராட்டம் நடத்தியவர்!கடைசியில் அவரது அந்தரங்க உறுப்பை அறுத்து அவனை நபும்சகனாக அலைய விடுகிறது அரசு(இங்கே ரேஷன் கடையில் க்யூவில் நின்னாலே அந்த கதிதானே உதயா?-கும்மாங்கோ)
           "தமிழகமே மனிதனை கொல்லும்  ஒரு பெரிய வதை கூடம் போல உள்ளது!கேரளாவில் பாலும் தேனும் ஓடுது!கொல்கத்தாவில் சுண்டு விரல்ல தட்டுனா சொர்க்கம் தெரியும்" என்றான் உதயா. அஞ்சலி பாண்டீசை உதயாவின் முகத்தில் விட்டெறிந்தாள்!
                                "தொவச்சி இஸ்திரி போட்டு எடுத்து வா"
 [உதயா தொடர்ந்து அரேபிய இலக்கியத்தில் மூழ்கியுள்ளதால்(அது புரியுதோ புரியலையா!காலையில் பெருந்தேவி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அரேபிய புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து கொள்வான்!நைட்டு ரெமி மார்டின் அடிக்கும் வரை இந்த வேடம்தான்!)பல வசனங்கள் வலது புறத்தில் இடம் பெறுகின்றன!]
        ஓடினான் இஸ்திரி கடைக்கு!கடைக்காரன் மும்முரமாக(!!??) சகீலா படம் பாத்துக்கொண்டு இருக்கான்!அப்போது உதயா மனதில் தோன்றிய ஒரு ஆப்ரிக்க கவிதை!

                My Africa My Africa My Africa
My Africa of which everybody imitates
My Africa of which culture exceed the Greek
My Africa of which everyone is jealous of

My Africa My Africa My Africa
My Africa of enormous natural endowment
My Africa of Non-Violence
My Africa of Amorous populates

My Africa My Africa My Africa
My Africa of patriot men and women
My Africa of shelter and vintage hospitality
My Africa of great ancestral mythology

My Africa My Africa My Africa
My Africa that bore fruits of black diamonds
My Africa which is a gift to the whole world
My Africa of great leadership

My Africa My Africa My Africa
My Africa of learned youths
My Africa of a bright generation
My Africa true tradition

My Africa My Africa My Africa
My Africa of black pageant women
My Africa of strong men
My Africa from who we all hail from
For every African deserves a Nobel Prize in
Existence. 

எழுதியவர் யார் என உதயாவுக்கே தெரியவில்லை!(காஞ்சி போனபூமியெல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வற்றி போனா?-கொய்யாகோ)


        S##T & Shirt பாருக்கு போனான்!அங்கே இருக்கைகள் கோன் பனேகா க்ரோர்பதியில் இருப்பது போன்று மிக உயரமாக இருக்கும்!இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவெனில் பேண்டீஸ் போடாத சிட்டுகளின் ___ இலையை தரிசனம் செய்யலாம்!இதற்காகவே உதயா பைசா காசில்லாமல் அங்கு சென்று சும்மனே அமர்ந்து விட்டு பேரர் வரும்முன்னே வெளியே ஓடிவிடுவான்!
             அன்று போதாத நேரம் பேரர் வந்து "வாட் டூ யூ வான்ட் ஸார்" என்று கேட்டான்!எப்பவும் "லேட்டர்" என சொல்லி கொஞ்ச நேரம் "தரிசனம்" செய்துவிட்டு எஸ்கேப் ஆகிடுவான் உதயா!ஆனால் இன்று போதாத நேரம் பல பிகருங்க இவனையே பார்த்து கொண்டிருந்த நேரம்(காரணம்:உதயா பேண்ட் ஜிப் போட மறந்து விட்டான்-கொய்யாக்கோ) பேரர் ஆர்டர் கேட்க லேட்டர் என்று சொன்னால் மான கேடு என்று நினைத்து "ஒரு ரெமி மார்டின் லார்ஜ்" என்று சொல்லி தொலைக்க வேண்டி இருந்தது!ஹோட்டலில் காசில்லைன்னா மாவாட்டனும்!ஆனா பாரில்?என்ன செய்ய சொல்வார்களோ!சரி அதை அப்புறம் பார்ப்போம் அதுவரை பிகருன்களை பார்ப்போம் என்று வைத்த கண் வாங்காமல் "தரிசனம்" செய்து கொண்டிருக்க லார்ஜ் வந்தது!இன்று மதியம் வரையாவது இதையே குடிப்பதாக நேரம் கடத்த வேண்டும்!ஏதாவது நண்பன் வந்தா பில்லை அவன் தலையில் கட்டலாம் ஏன்டா நினைத்தான்!இதனிடையே ஒரு ஜப்பானிய கவிஞரின் ஹைக்கூ நினைவுக்கு வந்தது:
       
  • Summer Dhugal Lindsay:

  • they've gone...
    where the beach umbrella was
    the sand not quite so hot
    Paul Mena:
  • through the fingerprints
    on my window-
    cloudless blue sky. John.
    Deserted steel-mill.
    Along the Ohio River,
    Chromatic butterfly.
    James Dolan
    Dallas summer song:
    cicadas whir, the
    sirens call

    ---"ஸார் எனிதிங் மோர்"-பேரர்!"நோ நோ நத்திங்"என்ற உதயா அப்படியே பாரை  விட்டு ஓடிவிட தீர்மானித்தான்!கதவை திறக்கும் நேரம் கணக்கெடுத்து கொண்டான்!பில்லை தானே கட்டுவதாக சொல்லிவிட்டு கேஷ் கவுண்டர் அருகே சென்றவன் திடீரென்று திறந்த கதவின் வழியே ஓடினான்!

    Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image

    எனக்கு  வாழ பிடிக்கல உதயா!அஞ்சலி முத்தமிட்டு கொண்டே சொன்னாள்!"திவாகர் நாய் என்னை தினம் செருப்பால் அடிக்கிறான்"!
    சமயம் பார்த்து செருப்பை களவாண்டு விடவேண்டும் என தீர்மானித்தான் உதயா!(எத்தனை நாளைக்குதான் செருப்பு போட்டா மாதிரியே நடக்கிறது அவ்வவ்...-கும்மாங்கோ).
                                           ஆண்கள் எல்லாருமே அப்படிதான் அஞ்சலி!
    "டேய் நீயும் அப்படித்தான்னு சொல்ல வர்ற அப்படிதானே?நேத்து புக பேரில் பல பொண்ணுங்களை நீ சந்துக்கு ஒட்டிகினு போனதை ன பார்த்தண்டா"!என்று சொல்லி கொண்டே கொரடாவை எடுத்து கொண்டு வந்தாள்!(அது எதற்கு என்பதை வாசகர்கள் கற்பனைக்கே விடுகிறோம்-கும்மாங்கோ).அந்த கொரடாவின் படம் கீழே!

    Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image "ஹாய்"
             ஹாய்
    ஹாவ் ஆர் யூ?
             குட் !யூ?
    ஹோப்  தி சேம்!
              அப்பா இருக்காரா?
    இல்லை டியர்!ஏன்?
              வெப் கேமை ஆண் பண்ணு!
    ஓகே!
              இப்போ உன் முகத்த காட்டு
    அதை அப்புறம் காட்டுறேன்!நீ மொதல்ல உன் வீட்டு கதவை திற!
              எதுக்கு?
    திற சொல்றேன்!
              ஓகே டியர் நீ சொல்லி செய்யாம இருப்பானா?
    (கதவை திறக்கிறான்)
               ஹலோ ஹலோ யாருடா நீங்கெல்லாம்(பத்து தடியனுங்க உள்ளே நுழைகிறார்கள்!கையில் அதே கொரடாவுடன்!பின்னாலேயே சேட் செய்த அந்த பிகரும்!)
               ஏய் ஷோபி!நீ எப்படி இங்க?சேட் செய்துகொண்டு இருந்தியே!
    ஆமாண்டா (கையில் லேப்டாப்பை காட்டுகிறாள்)
    உனக்கு இன்னிக்கு இருக்குடா துர்கா பூஜை(ஷோபி பெங்காளி காரி-கொய்யாகோ)
               ப்ளீஸ் ப்ளீஸ் ஷோபி!நான் சும்மா பொழுது போக செக்ஸ் சேட் செய்யுறேன்!அந்த பென்னும்தானே உடன்படுகிறாள்!அவளையும் கேட்க வேண்டியதுதானே கலாசார காவலர்கள்!
    ஏய் ஏய் உதயா கூல்!
               நான்தான் ஆபாச சேட் பண்நேன்னு என்ன ஆதாரம்?
    இப்போ நீயே சொல்ல போரடா என்று சொல்லி கொண்டே தலையசைக்க குண்டர்கள் கொரடாவுடன் உதயாவை நெருங்கி அவனது ஜிப்பை அவிழ்த்து.......ஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ .....(இது உதயாவின் அலறல்!என்ன நடந்ததுன்னு சொல்லவா வேணும்-கொய்யாகோ)

    Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image Double-headed arrow image 

    •  இனி விந்துவை புல்லட்பாண்டாக கூட யூஸ் பண்ண முடியாத நிலைமையில் உதயா!உச்..உச்..உச்..
    உதயா அடித்த சரக்கில் கும்மாங்கோ கொய்யாகோ என பேரு மாறி மாறி வந்துள்ளது-ஒன்பதாம் நூற்றாண்டின் செத்த  மூளை)

Friday, 23 December 2011

கடவுள் ஆஸ்கர் எல்லாம் கொடுக்குறாரா என்ன?"உண்மை" தமிழன் பாரீர்!!!!!

ஏ.ஆர் ரகுமான் பிரபலமானது ரோஜா என்னும் தமிழ் படத்தின் மூலம்!மேலும் அவர் ஆஸ்கர் வாங்கியபோது தமிழில் பேசுனதுக்கு எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சிலாகித்தனர்!இவரல்லவோ உண்மை தமிழன் என்று சொன்னார்கள்!தமிழனுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு பெருமை அப்படின்னு மக்கள் எங்கும் திரண்டு கொண்டாடினர்!
ஆனால்  இத்தகைய ஒரு மனிதர் எத்தகைய பேச்சை இப்போது பேசியுள்ளார்ன்னு   பாருங்க!தமிழனுக்கு துரோகம் இழைப்பதர்காகவே கேரளத்தவன்  காசு கொடுத்து எடுக்க சொன்ன படம் Dam999.

          கூடங்குளம் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரமது!பல லட்சம்மக்கள் பசி தூக்கம் எல்லாவற்றையும் மறந்து போராடி கொண்டிருந்தனர்!மத்திய அரசுக்கு இது பெரும் சிக்கலானது!இந்த நேரத்தில் எரிகிற குடிசையில் பீடி பற்றவைப்பது போல வந்தது Dam999 படம்!இது முல்லை பெரியாறு அணை உடைந்து அதனால் பலகிராமங்கள் மூழ்குவது பற்றிய ஒரு படம்!அதனால் இது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது!
           ஆனால் இது தொடக்கமே!இதன் தொடர்ச்சியாக அணை பற்றிய  பல போலியான தகவல்களை பரப்பி விட்டது கேரளம்!இதனால் அங்குள்ள தமிழர்கள் மற்றும் சபரிமலைக்கு செல்வோர் அடித்து நொறுக்கப்பட்டது என இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்!
          இத்தகைய தமிழக மக்களுக்கு துரோகம்இழைக்கும் ஒரு படத்தை பற்றி சிலாகித்து சொல்வதன் மூலம் ரகுமான் தனது "தமிழ் விசுவாசத்தை" காட்டியுள்ளார்!
      இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.(ஆமா கடவுள் ஆஸ்கர் பரிந்துரை குழுவில் இருப்பதை சொல்லவே இல்ல!)
     "உண்மை" தமிழனின் பேச்சு!

ஆக  எவனையாவது நம்பி ஏமாறுவது தமிழனின் பிறவி குணம்!முன்பு ரஜினிகாந்தை நம்பி ஏமாந்தனர்!இப்போ ஏமாறுவதுக்கு ஆள் தேடி கொண்டிருந்தனர்!நல்லா கிடைச்சாரு  மாயமான்!சாரி ரகுமான்!
சோறு போட்ட கையை வெட்டுவது போல இவர் சொல்லியுள்ள கருத்து எவ்வளவு அசிங்கத்தை இவர் மனதில் வைத்துள்ளார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் மீது இவர் வைத்த்துள்ள "பாசத்தையும்" இது தெளிவாக காட்டுது!இரைச்சல் நாயகனின் மேலும் ஒரு இரைச்சல் இது!
 


Thursday, 15 December 2011

ராமராஜனும்,பால் கறப்பவர்களும் மற்றும் தமிழனின் பொது புத்தியும்!

மொதல்லையே சொல்லிபுடுரேன்!நான் ராமராஜன் ரசிகன் இல்லை!அவர் கலர் கலராக டிரெஸ் போட்டு கொண்டு ஆடுவது, ஓவர் மேக்கப், பாடியே காளை மாட்டை(வாடி வாடி என்னுடைய பேச்சி) அடக்குவது போன்ற காமெடிகளை நானும் செமையா கிண்டல் செய்தவன்தான்!ஆனால் பேச்சு அதை பற்றியல்ல!
    தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களின் பொதுபுத்தி பற்றியது!
பெரும்பாலான டிவிகளில் மிமிக்ரி அல்லது மாகரி ஷோ நடத்துவர்!அதாவது ஒரு நடிகர் அல்லது நடிகை அல்லது ஒரு சினிமா பிரபலம் போல ஒருவர் தோன்றி அவர் பேசிய வசனங்களை இவர் காமெடியாக பேசுவது அல்லது அவரது மேனரிசங்களை இவர் நக்கல் பண்ணுவது ...இப்படி போகும் நிகழ்ச்சி!பொதுவாக பார்த்தால் அது நன்றாகத்தான் இருக்கும்!
           ஆனால் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு!அதான் ராமராஜனை கிண்டல் செய்வது!சரி கலர் கலர் சட்டைகளை போட்டுகொண்டு கிண்டல் செய்தால் சரி நாமும் ரசிக்கலாம்!அல்லது காளை மாட்டை வாடி வாடின்னு பாடுனா ரசிக்கலாம்!ஆனால் என்ன செய்கின்றனர்?
          ஒருவர் அரை ட்ரவுசர் போட்டுகொண்டு தோளில் ஒரு கயிற்றை மாட்டிக்கொண்டு கையில் ஒரு பால் கேனை எடுத்துகொண்டு உள்ளே நுழைவார்!உடனே அந்த டிவி நடுவர்கள் ஏதோ இவர் நிர்வாணமாக வந்துவிட்டதுபோல விழுந்து விழுந்து சிரிப்பர்!பின்னர் அவர் மாடு கரப்பதுபோல பாவ்லா செய்வார் !அதற்கு இவர்கள் அதற்கு மேல் சிரிப்பர்!(ராமராஜன் மாட்டுகாரனாக பால்கறப்பவராக நடித்த ஒரே படம் எங்க ஊரு பாட்டுக்காரன் .)

        இப்போ சிரிப்பது ராமராஜன் என்னும் நடிகரின் பிம்பத்தை பார்த்தில்ல!இவர்கள் சிரிப்பது டவுசர் போட்டுகொண்டு பால் கறக்கும் பால்காரர்களை பார்த்தே!ஏன்னா இவர்கள் ஹை கிளாஸ் மகானுபாவுகள்!பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர மேல் நடுத்தர அல்லது ஹை கிளாஸ் மக்களே!இவர்கள் டை கட்டிக்கொண்டு ஒபீஸ் போவது கவுரவமாம்!ஆனால் ட்ரவுசர் போட்டு கொண்டு பால் கறப்பது நகைப்புக்குரியதாம்! இது நகரத்தில் இருப்பவன் கிராமத்தில் இருப்பவனை ஏளனம செய்வதாகவும் ஆகிறது!
       அது சரி கேன்வாஸ் ஷூ போட்டுகொண்டு மாட்டுகாரனாக வந்தால்தான் உங்களுக்கு பிடிக்கும்போல!
         இந்த மனப்போக்கை ஊக்குவிக்கும் ஊடகங்கள் தங்களின் டீ.ஆர்.பி ரேட்டிங் பற்றிதான் கவலைப்படும்!அவர்களுக்கு மக்களின் மனநிலையை பற்றி  கவலை இல்லை!இவர்கள் திருந்துவதாக தெரியவில்லை!

Saturday, 3 December 2011

துடி துடித்த நடிகர் பிங்கி ராஜா!மனித நேயத்தின் மொத்த சொரூபம்!

நடிகர் பிங்கி ராஜாவிடம் தயங்கி நின்றிருக்கிறார் ஒருவர்!அவுரு புள்ளைக்கு சரக்கடிச்சி கீழ உழுந்து காலு ஓடைஞ்சி போச்சாம்!"யோவ கதை சொல்ல வந்தேன்னு நெனச்சேன் இதை மொதல்லையே சொல்ல கூடாதா"ன்னு சொல்லி 65 ஓவா கொடுத்து "இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்னு நான் சொன்னேன்னு நீ இதை வெளியில்(பேஸ்புக் உட்பட) லீக் பண்ணி விடு!அப்புறம் பாரு!மனித நேய மாணிக்கம் பட்டம் எனக்குதான்"!அப்படின்னு சொன்னாராம் பிங்கி ராஜா!
சாரி  பிங்கி ராஜா!நீங்க நடிப்பதுக்கு சம்பளம் வாங்குறீங்க இல்ல?அதுல எம்புட்டு கருப்பு எம்புட்டு வெள்ளையில் வாங்குறீங்க?எம்புட்டு வரி காட்டுறீங்க?நீங்க க்யூவில் நின்னு ஒட்டு போட்டதாக ஒரு பழைய ஸ்டில்லை வைத்துக்கொண்டு "ஆஹா!இவர்தான் உண்மையான குடிமகன்"னு இந்த இளிச்சவாய மக்கள் நெகிழ்ந்து போறாங்க!அவங்களுக்கு தெரியுமா நீங்க உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு போடவே இல்லைன்னு!
பிரியாணி போட்டா மனித நேய பண்பாளர் ஒட்டு போட க்யூவில் நின்னு அதை தனது போட்டோக்ராபர் மூலம் போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் விட்டு "ஆஹா!இவரல்லவோ உண்மை மனிதன்" அப்படின்னு உங்கள் அல்லகைகளை விட்டே செய்தி பரப்புரீங்க!ஹ்ம்ம்...ஏமார்றவன் இருக்குற வரை ஏமாற்றுகிரவன் இருப்பான்! தமிழன்னா  கேட்கவும் வேணுமா?எங்கிருந்தோ பிற மாநிலத்துல இருந்து வந்த பிங்கி ராஜாவுக்கு தமிழே ஒழுங்கா பேச வராது!அதுவும் பேட்டிகளில் 90% English 10% தமிழ் இப்படிதான் பேசுவாரு அந்த மனித குல மாணிக்கம்!ஆனாலும் முட்டாள் தமிழன் அவர் பின்னாடி ஓடுறான்!ஒடுங்க ராசா!ஒடுங்க!

Thursday, 1 December 2011

திரிசா கெடைக்கலன்னா திவ்யா!!

திரிசா கெடைக்கலன்னா திவ்யா!!
http://charuonline.com/blog/?p=2669
 மேலும் சாரு மாமாவுக்கு குரு பூஜை நாள்:திசம்பர் 18
http://pichaikaaran.blogspot.com/2011/11/blog-post_27.html 
 
 
சிறப்பு விருந்தினர்கள் சுராத்து மற்றும் செந்தேள் சென்காயிரம் மற்றும் சகிலா  ..சரி சரி வந்துடுங்க!

Tuesday, 29 November 2011

சிட்டிசன் பார்ட் 2

சிட்டிசன் அஜித்தை விட அதிக முறை மதம் மாறி சாதனை செய்த சேஷாசலம் என்கிற பெரியார் தாசன் என்கிற சித்தார்த் என்கிற அப்துல்லா(யப்பா மூச்சு முட்டுது)!!
இது தொடர்பான டவுசர் கிழிக்கும் ராஜனின் கட்டுரை இதோ:
 http://www.rajanleaks.com/2010/03/blog-post_432.html

Sunday, 27 November 2011

ஏன் இந்த கொலைவெறி ?(ஞாநி கட்டுரை)

ஞாநி  அவர்களுக்கு நன்றியுடன்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கில செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி ?
கம்ர்ஷியல் சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். அறுபதுகளில் ஒரு முறை ஒரு நடிகர் தான் நடிக்கும் பாத்திரத்துக்காகத் தொடர்ந்து தலையை மொட்டையடித்துக் கொள்வதாக செய்தி வெளியானபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்போது அவருக்கிருந்த அவருக்கே உரிய நையாண்டியில் கேட்டார் : அந்த நடிகர் ஒரு இஸ்லாமியர் வேடத்தில் நடித்தாரே, அதற்காக முறைப்படி சுன்னத் செய்துகொண்டாரா ?! சினிமாகாரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்தபட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணா சாலையில் நடந்து போகிற காட்சியை படம் பிடித்ததைக் கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி ‘ என்று பரபரப்பாக்குவார்கள்.
அந்த வரிசையில் படத்துக்கான முன்னோட்ட பப்ளிசிடியாகத்தான் ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாட்டு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்புள்ள எதையும் செய்தியாக்கி விற்பனை செய்வதில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் கொலைவெறிக்கு இது சரியான தீனி. படத்தின் டைரக்டர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. நாயகன் மருமகன் தனுஷ். ஜோடி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. சிறந்த நடிகர் விருது வாங்கிவிட்ட தனுஷ் அடுத்து சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஆங்கிலப் பாடலாசிரியர் . தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கில பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக்கூடும்.
கொலை வெறிபாட்டு ஏன் ஹிட்டானது ? அதில் அப்படி என்னதான் இருக்கிறது ?
இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்’ என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். , அருண், அகல்யா, ஷோபா, லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும் !
இந்த மாதிரி நவீன டெக்னாலஜி சார்ந்த வணிக சாமர்த்தியங்களை தமிழ் வணிக சினிமா அடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. அதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.
கொலைவெறி பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டடதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப்படத்தில் இருக்கும் ஆங்கிலப்பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாட்டு கேட்கும் இளம் மனங்களில் இடம் பிடிக்க அடிப்படைக் காரணம் கால்தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப்பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது.
பாடலின் விஷயம்தான் நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. கல்யாணப்பரிசு காலத்திலிருந்து சினிமாவில் இருக்கும் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்’ தீம்தான். ஆனால் அறுபது வருட முந்தைய தமிழ்க் காளைக்கும் இன்று தனுஷ் மூலம் சித்திரிக்கப்படும் தமிழ்க் காளைக்கும் கடுமையான வேறுபாடு இருக்கிறது.
இன்று தனுஷ் காட்டும் இளைஞன் விடலையாக, பொறுக்கியாக, ஒரு சமூகப் புல்லுருவியாக இருக்கிறான்.ஆடுகளம் படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரம் அவன் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு மனிதன் பற்றியது. விதவைத்தாய் வறுமையில் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவள் பேசினாலே, “ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு” என்று விடலை மொழியில் வாயை மூடச் சொல்லுகிறான். தொடர்ந்து பேசும் தாயிடம் வாயை மூடாவிட்டால், ‘கொன்னே போடுவேன்’ என்று கர்ஜிக்கிறான். செவத்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் துரத்தித்துரத்தி மிரட்டி மிரட்டிக் காதலிக்க வைக்கிறான்.முப்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்த படத்தின் சேவல் சண்டை பண்பாட்டு அடையாளம். தனுஷ் என்ற கதாநாயகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 14 முதல் 20 வரையிலான எண்ணற்ற இளைஞர்களுக்கு பொறுக்கித்தனமும் பெண் சீண்டலும்தான் படத்தின் செய்தி.
குடும்பப் படமாக, அதாவது குடும்பத்தோடு சென்று கண்டு களிக்க ஏற்றவையாக சென்ற வருடம் பாராட்டப்பட்ட இன்னொரு படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்தப்படத்தின் நாயகப்பாத்திரம் இன்னொரு பொறுக்கி. துபாயிலிருந்து அப்பா அனுப்பும் பணத்தை அம்மாவிடமிருந்து ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சைக்கிளைத் தடுத்துப் பிடித்துத் தன்னைக் காதலிக்கும்படி மிரட்டுபவன். இந்தப் படமும் விமலுக்கு பதில் தனுஷ் நடித்திருக்கக்கூடிய ஒரு படம்தான்.
இரு படங்களிலும் பொறுக்கி கதாநாயகர்களால் காதலிக்கும்படி மிரட்டப்பட்ட நாயகிகள் அடுத்த கட்டத்தில் தாமே மனமுவந்து காதலிக்கிறார்கள்.இதுதான் விடலை மனங்களுக்குக் களிப்பூட்டும் செய்தி.
இந்த வரிசையில்தான் ‘கொலைவெறி’பாடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. செவத்த பெண் ஏமாற்றிவிட்டாள். கறுத்த பையன் புலம்புகிறான். வெள்ளை நிலா கறுப்பு வானத்தில் இருப்பது போல நாம் இருக்க முடியாதா என்று ஏங்குகிறான்.
தன் காதலை ஏற்காதவளைக் கொலை வெறி பிடித்தவள் என்று வர்ணிக்கிறான்.
கொலை வெறி பாடல் வந்திருக்கும் அதே சமயத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு தனுஷ் பாடிய பாடல் என் காதல் அது கண்ணீருல.. இதில் பிரபலமான வரிகள் : அடிடா அவளை உதைடா அவளை என்பவைதான். எதற்கு அடிக்கவேண்டும்? உதைக்க வேண்டும்? இவனைக் காதலிக்க அவள் மறுத்துவிட்டதற்குத்தான். விடலை மனங்களுக்கு இன்னொரு செய்தி. உனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கவேண்டாம். அவள் எதற்கு இருக்க வேண்டும்? அடி உதை கொல்லு… தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவது தொடர்ந்து நடக்கும் கொடுமையான வன்முறை.
இரு பாடல்களிலும் குடிப்பதும் போதையும் இந்த சோகத்துக்கு மருந்தாக ஆறுதலாக சொல்லப்படுகிறது. இருபதாயிரம் கோடி ரூபாய் விற்பனையை நோக்கி தமிழக அரசின் மது வியாபாரம் படுவேகமாக ‘வளர்ந்து’ கொண்டிருக்கும் நிலையில், ப்ளஸ் டூவிலேயே போதை அடிமைகள் உருவாகிக் கொண்டிருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயக பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதை செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.
இன்றைய தமிழ் சமூகத்தில் வளரிளம்பருவத்தில் இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு பதில் கொலைவெறியோடு அதிகரிப்பதையே கொலைவெறி பாடல் கலாசாரம் செய்கிறது. ஆண்-பெண் உறவு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதே விடலைப்பருவத்தில் புரியாத சிக்கலாக பலருக்கு இருக்கிறது. செவத்த பெண்ணுக்காக ஏங்கும் கறுத்த பையன் என்ற பிம்பம் இருவருக்கும் ஆபத்தானது. செவப்பும் கறுப்பும் உடல் நிறமும் பிரதான விஷயங்களே அல்ல. மன்ம்தான் முக்கியம், அறிவுதன முக்கியம். அன்புதான் முக்கியம் என்ற பார்வைக்கு பதில் உடல் சார்ந்து மட்டுமே இவை இளம் மனதைத் தூண்டுகின்றன.நம் சமூகத்தின் நிறவெறியின் இன்னொரு வடிவமே கொலை வெறி பாட்டு.
இப்படிப்பட்ட பாடல்கள் ஹிட் ஆவது பற்றி வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம். எதிர்காலத் தமிழகம் பற்றி சிந்திக்கும் ஒருவரும் மகிழ்ச்சியடையமுடியாது. பொறுக்கியாக நடிக்கும் தனுஷோ,நடிக்கவைக்கும் ஐஸ்வர்யா, வெற்றிமாறன்களோ தங்கள் அன்றாட நிஜ வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும், உடையவர்களாக வாழ்வதினால்தான் அவர்களால் ‘தொழிலை’ ஒழுங்காகச் செய்யமுடிகிறது. ஆனால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்கள் தமிழகத்தின் பள்ளிகளிலும், தெருக்களிலும் ஏராளமான இளம் மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலைக்கழிப்பிலிருந்து வழிநடத்த நம்மிடம் முறையான கவுன்சிலிங் அமைப்புகள் எதுவும் இல்லை. வழி காட்டக்கூடிய ஊடகங்களே அவர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். நாய் விற்ற காசு குரைக்காது என்பதுதான் அரசு முதல் படைப்பாளிகள் வரை தாரக மந்திரமாகிவிட்டது.
****நன்றி:ஞாநி