Wednesday, 7 October 2026

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 Breakdown படத்தை இவ்வளவு தயக்கத்துடனும் தாமதமாகவும் பார்க்க காரணம் விடாமுயற்சி!




 தத்தி தாவுது மனசு படத்தில் வடிவேலு தங்கப்பதக்கம் சிவாஜி கேரக்டரை spoof செய்திருப்பார்.மேலதிகாரி மும்தாஜுக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வரும்.ஒன்று வடிவேலு குற்றவாளிகளை பிடித்ததற்கு விருது கொடுப்பதாக அறிவிக்கும் அழைப்பு.மற்றொரு அழைப்பு அவரது மனைவி குல்ஃபி ஐஸ்காரனுடன் ஓடிப்போய்விட்டதாக செய்தி வர "நா புறப்படுகிறேன் மேடம்" என்று கண்களில் நீர் தளும்ப நடந்து செல்கையில் மேலதிகாரி மும்தாஜின் மேஜை மேலுள்ள பேனா பென்சில் கோப்புகள் எல்லாவற்றையும் கீழே தள்ளிவிட்டுவிடுவார்.மும்தாஜ் கடுமையுடன் கண்டிக்க சாரி மேடம் என்று செல்வார்.





    Breakdown என்ற விறுவிறுப்பான படத்தை ஓசியில் காப்பி அடிப்பதே குற்றம்.இதுல அந்தக்கதையை மேற்சொன்ன குல்ஃபி ஐஸ்காரன் கதையெல்லாம் செருகி இதுல அஜீத்தை வேறொரு பெண் விரும்புவதாகவும் இவர் அதை மறுப்பதாகவும் வேறு காட்சி இருக்காம்.

    அய்யா அஜீத் அவர்களே நீங்கள் செவாலியே chivalry என்று சமீபகாலமாக துடிப்பது புரிகிறது.அதுக்கு சொந்தமா ஒரு கதையை உருவாக்கி நடித்திருக்கவேண்டும்.

    விடாமுயற்சி பட விமர்சனத்தில் தமிழ் டாக்கீஸ் மாறன் "இப்படம் ஆங்கிலப்பட காப்பி என்பது அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிந்துபோக பிறகு ஒரு பெருந்தொகையை கொடுத்து சரி செய்ததாக" சொன்னார்.உண்மையில் அதைவிடவும் கூடுதல் தொகையை கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.ஒரு திரில்லர் படத்தை வேறுமாதிரி கச்சா முச்சா கதையாக்கியதற்கான அபராதம்!


    மேலும் அஜீத் , வீடு பட சொக்கலிங்க பாகவதரின் தீவிர ரசிகர் என்று இப்படத்தின் தோற்றம் மூலம் நிரூபித்திருந்தார்!



.

டிஸ்கி: இன்னமும் விடாமுயற்சி பார்க்கவில்லை.பார்க்கும் எண்ணமுமில்லை.பயில்வான் விமர்சனத்தை வைத்தே நாம் இதை எழுதியுள்ளோம்.


*************************************************

களம்காவல்:

     வழக்கமாக இம்மாதிரி கொலைகாரன் போலீசு கதைகளில் போலீசுக்கு தனிப்பட்ட வாழ்வில் மணமுறிவு/குழந்தையை பார்க்க முடியாமை/மனைவி இறந்துபோவது என்று ஏதேனும் ஒரு சோகத்தை வைத்து அவர் அதை எதிர்கொள்ள ஏதேதோ பொடிகளை உறிஞ்சி/ஐஸ் கட்டி போட்ட அகல பாத்திரத்துக்குள் முகத்தை விடுதல்/ ஷவரின் கீழ் நிற்பது போன்ற தேய்வழக்குகள் இல்லை என்பது பெரும் ஆறுதல்!

      நமதபிமான விநாயகன் கை மடித்துவிடப்பட்ட சட்டை கைக்கடிகாரம் இரண்டின் மூலமே ஒரு காவலரின் தோரணையை கொண்டுவந்துவிட்டார்!ஜெயிலரில் வந்தவரா இவர்? தெக்கு வடக்கு படத்தில் சேட்டை செய்தவரா இவர் என்றெல்லாம் வியக்கவைத்து விட்டார்.


      ஏற்கெனவே Rorshach படத்தில் "இவரா மம்மூட்டி?" என்று வியக்க வைத்தவர் இப்படத்திலும் அதே போன்று மிரட்டிவிட்டார். Rorshach படத்தில் மனிதர் கேமராவுக்கு மிக நெருக்கமாக உட்கார்ந்திருந்தாலும் அவரின் கண்களை பார்க்கையில் எங்கோ ஆயிரம் மைல் தள்ளி அமர்ந்திருக்கும் உணர்வை கொடுத்து மிரட்டி இருந்தார்.இதிலும் அப்படியே! அத்தனை கொலைகளையும் சிறிதும் நடுக்கம் தயக்கம் வருத்தம் இல்லாது செய்யும்போது "யாருய்யா இது?" என்று கேட்க வைத்துவிடுகிறார்.

அதிலும் அவர் கிங்ஸ் லெவன் பிடித்து வட்ட வட்டமாக புகை விடும் காட்சிகள் அதகளம்!

புகைபிடிக்கும் காட்சியை ஸ்பாட்டில் மம்மூட்டி improvise 
செய்ததாக இயக்குநர் கூறி இருந்தார்!


     


"தான் எவ்வளவு பெரிய நடிகன்" என்ற மனவோட்டத்தை குப்பையில் போட்டால் மட்டுமே இப்படியெல்லாம் நடிக்க முடியும்( காசர் கவனிக்க!).படத்தின் குறைபாடுகள் அது இதுவென்று ஏகப்பட்ட ஒலக விமர்சகர்கள் ஆய்வு செய்திருந்தாலும் படம் முழுக்க ஒருவித சில்லிடும் உணர்வை கொடுத்ததை மறக்க முடியாது.அது தவிர இரு மாபெரும் நடிகர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்கள்.இதையெல்லாம் தமிழ் சினிமாவில் உள்ள தென்னாட்டு கிளாஸ் கின்ஸ்கி தென்னாட்டு பிராண்டோ தென்னாட்டு அல் பசினோ ஆகியோர் பார்த்து கற்க முயல வேண்டும்!

அக்கட தேசத்துல 'மம்மூட்டி கம்பெனி' தயாரிப்புல "இப்படியெல்லாம் கதை யோசிக்க முடியுமா?" ன்னு வியக்கவைக்கிற படங்கள்ல அவர்  நடிச்சிட்டு இருக்கார்.ஆனா சார்வாள்? அன்பறிவ் இயக்கத்தில் படத்தை உடப்பில் போட்டாச்சு.இப்ப அடுத்த ஒரு அப்பாவி இயக்குனர் பேர்ல இன்னொரு படத்தை அறிவிச்சிருக்கீங்க.அதுவாச்சும் செல்ஃப் எடுக்குமா?


**************************************************



டிஜிட்டல் கேமராவுக்கு வக்காலத்து வாங்குவோர் தொடர்ந்து சொல்லிவந்தது : "ஃபிலிமில் படமாக்குவதைவிட பலமடங்கு மலிவாக டிஜிட்டலில் படமாக்கி விடலாம்"

       மைனா கும்கி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் " ஃபிலிமில் படமாக்கும்போது ஒளிப்பதிவில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது கட்டாயம்.ஆனால் டிஜிட்டலில் அந்த மெனக்கெடல் தேவையில்லை.ஏதேனும் ஒளிப்பதிவில் பிழை இருந்தாலும் "சிஜில பாத்துக்கலாம்" என்று விட்டுவிடுகிறார்கள்.அந்த செலவு ஃபிலிம் செலவை தொட்டுவிடும்" என்றார்..


 மேலும் "டிஜிட்டலில் எடுக்கப்படுவது வெறும் footage தான்.அதில் உயிரோட்டம் கலைநயம் எதுவுமில்லை" என்று தடாலடியாக உண்மையைப்போட்டு உடைத்துவிட்டார்! யப்பா இயக்குநர்களே தயாரிப்பாளர்களே அப்படித்தான் அந்த கருமத்தை பயன்படுத்ததான் வேண்டுமா?

***************************



   

No comments:

Post a Comment