அவ்வாறே நீட் UG ல பெரும் சாதனை செய்து நாக்பூர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.ஏன் தில்லி எயிம்ஸ் போகவில்லை என்பதையும் விளக்கினார்.பிறகு நீட் UG ஐ விட பல நூறு மடங்கு கடினமான நீட் PG ஐயும் அசால்ட்டாக தேறினார்.உண்மையில் இவருக்கு ஒரு மூளை தானா?இல்லை external hard disc போல ஏகப்பட்ட மூளைகளை அவ்வப்போது thunderbolt கொண்டு கனெக்ட் செய்துகொள்கிறாரா? என்ற சந்தேகம் உண்டு!
அனூஜ் பள்ளியில் படிப்போருக்கு நீட் சம்மந்தமான அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார்.அதற்கான வீடியோக்களும் அவர் சேனலில் உள்ளது.அவரது இணையதளமும் உள்ளது.காசர் பாணியில் சொல்வதென்றால் "சார்ந்தோர் பயன்படுத்திக்கொள்க"!
.
அதுவும் சரிதான் . முக்கியமாக நம்ம department டான சினிமா பற்றியும் பேசுகிறார். உலக விமர்சன அக்கப்போர் இல்லை.தான் பார்த்த படங்களில் வரும் மருத்துவம் சம்மந்தமான காட்சிகளில் உள்ள பிழைகள் அபத்தங்கள் நகைச்சுவைகள் என்று சுட்டிக்காட்டும் வீடியோக்கள் உள்ளன .
ஏனய்யா எம். பி. பி.எஸ் படிக்கும்போதே OBG ஒரு பாடமாக வரும்.அதில் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பாடம் நடத்துவதில்லை.அனாடமி பாடம் வரும். ஃபிசியாலஜி வரும். அப்படி இருக்கையில் எம். பி. பி.எஸ் முடித்த ஒரு மாணவன் OBG முதுகலையில் சேரும்போது அங்கே என்ன பாடம் என்ன வழிமுறைகள் பெண் உடல்கூறு அமைப்பு மற்றும் அது சார்ந்த மருத்துவ பிரச்சனைகள் எதுவுமே தெரியாமல் போய் முழித்தபடி நிற்கிறார் .அதுதான் படம் என்று அனூஜ் விளக்கியபோது "நல்லவேளை இந்த படத்தை நாம் பார்க்கவில்லை.பார்த்திருந்தால் முனியாண்டி சொல்லும் உவமையான ' கை காலை கட்டி மலக்கிடங்கில் போட்டது போல'த்தான் இருந்திருக்கும்.தப்பித்தோம்" என்று நினைத்துக்கொண்டோம்!
என்ன படம் இதெல்லாம்?எந்நேரமும் இடுப்புக்கு கீழேயே சிந்திக்கும் எதோ சில தற்குறிகள் சேர்ந்து இந்தக்கதையை சிந்தித்திருக்க வேண்டும்!எஸ்.ஜே.சூர்யா கூட இப்படியெல்லாம் சிந்தித்தது இல்லையேடா!மருத்துவ கண்ணோட்டம் வேறு!சாமானிய கண்ணோட்டம் வேறு என்பது கூட புரியாத மழு மட்டைகள் உருவாக்கிய படம் போல!
************************
இந்த நேரத்தில் இப்படத்தில் நடித்த ஆயிஷ்மான் குரானா பற்றியும் சொல்ல வேண்டும் .அந்தாதூன் பார்த்தபோது ஆயுஷ்மான் வேறொரு உயரத்திற்கு செல்லப்போகிறார் என்று நினைத்தால் நடந்ததோ வேறு!
ஆயுஷ்மான் படங்களை அந்தாதூனுக்கு பிறகு நாம் பார்க்கவில்லை.படங்களின் போஸ்டரை பார்த்தே காத தூரம் ஒடிவிடுவோம்.அவரும் வடநாட்டு சாம்சாக ஒருபாலின விழைவு,பெண் வேடம், ஆணுக்குள் பெண் என்பதாக நடித்து வருவதை போஸ்டர் மூலம் புரிந்து கொண்டோம்.What a wasted talent! Go Woke go broke என்பார்கள்.அதுபோல இப்படியே நடிச்சிட்டு இருந்தால் அவர் நிரந்தர காமெடி பீஸாகவே நீடிப்பார்!
*************************************
இது ஒரு நல்ல ஆரம்பம் தான்.இப்படி கேலி கிண்டல் செய்தாலாவது மருத்துவம் சார்ந்த காட்சிகளில் இயக்குனர்கள் கூடுதல் முனைப்போடு செயல்பட ஒரு உந்து சக்தியாக இருக்க கூடும்.நாம் சொல்வது புரச்சி புடலங்காய் என்று ஊரை ஏமாற்றாமல் சினிமா துறையில் தன்னை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்ற முனைப்பு கொண்ட சில அதிசயப்பிறவி இயக்குனர்களை மட்டும்!
No comments:
Post a Comment