பில்லா படத்தில் பிரபு தனக்கு கீழ் பணிபுரியும் ஆதித்யாவிடம் இந்த கேள்வியை கேட்பதாக வரும்.இந்த பதிலை கேட்டதும் ஆதித்யா மேல் சந்தேகம் அதிகமாவதாக காட்சி செல்லும்.( "கிஃப்ட்டா கொடுத்தாங்க" என்று ஆதித்யா சமாளிப்பது கண்டு பிரபுவுக்கு வியப்பும் சந்தேகமும் வரும்)
காரணம் திரையுலகில் உள்ளவர்களுக்கு இந்த luxury watches hierarchy எல்லாம் தெரிந்தாலும், மிகப்பெரிய luxury watches collection வைத்திருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் போராளி புரட்சியாளன் என்றெல்லாம் காட்டிக்கொள்ளவே விழைவார்கள்(விஜய் சேதுபதி,தனுசு,சூர்யா ,ஆர்.ஜே.பாலாஜி, செராக்ஸ் கடை அட்லீ ஆகிய சில உதாரணங்கள் உண்டு).ஆனால் விஷ்ணுவர்தன் unabashed என்பார்களே!அதுபோல அந்த ரசனையான அறிவை ஒரு காட்சியாக்கியது உண்மையில் அற்புதம்.தன்னை போராளி என்று காட்டிக்கொள்ள சற்றும் விழையாத அஜீத்தையும் பாராட்ட வேண்டும்.அதன்பின்னும் சரி முன்பும் சரி தமிழ் சினிமாவில் வாட்ச் hierarchy சம்மந்தமாக ஒரு காட்சி நாம் பார்க்கவில்லை.
24 என்ற டுபாக்கூர் படத்தில் ஒரு watch maker கதாபாத்திரம் என்று கூறப்பட்டாலும் அதில் சூர்யா வாட்ச் குறித்த எந்த காத்திரமான உரையாடலும் செய்ய மாட்டார்.விடலைத்தனமாக "basically I am a watchmaker" என்று தேய்ந்து போன ரெக்கார்டாக அறுத்து தள்ளுவார்.இதே watchmaker கேரக்டரை விஷ்ணுவர்தன் இன்னும் nunanced ஆக ரசனையாக காட்டியிருப்பார் என்று தோன்றியது.ஆனால் அதையும் போராளி இமேஜில் இருக்கும் ஈரோ அனுமதிக்க வேண்டுமே!
சூர்யாவிடம் ஏகப்பட்ட luxury watches இருந்தாலும் அந்த அறிவை படத்தில் வைக்காததன் காரணம் தெரிந்ததே!போராளியாக ஃபார்ம் ஆகிட்டா பிறகு அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய வேண்டுமே!
*******************************
Pulp fiction படத்தில் அத்தனை chapter களுமே நன்றாக இருக்கும் என்றாலும் நம்மை கவர்ந்தது Butch Coolidge (ப்ரூஸ் வில்லிஸ்) வரும் பகுதி. அதிலும் குறிப்பாக வாட்ச் மீட்கும் காட்சி!
அப்போதுதான் அந்த வாட்ச் தனது வீட்டிலேயே இருப்பதை உணர்வார்.மீண்டும் தனது வீடு இருக்கும் ஏரியாவுக்குள் நுழைந்தாலே மேலே டிக்கெட் உறுதி என்று தெரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஏகப்பட்ட ரத்தக்களரி உதைகள் தாண்டி தனது வீட்டில் அந்த வாட்சை கண்டுபிடித்து அதை அணியும் அந்தத்தருணம் 🫰🫰🫰
Lancet trench watch என்று அழைக்கப்பட்டாலும் அது ஒரு பாக்கெட் வாட்ச் தான்.அதில் ஸ்ட்ராப் போட்டு கூலிட்ஜ் அணிவதாக கார்சிவிருக்கும்
Tarantino எந்தளவு ரசனையான ஒரு படைப்பாளி என்பதை அந்தக்காட்சி உணர்த்தும்.அந்தக்காட்சியை ஏகப்பட்ட விசில் கைத்தட்டல் பறக்கும் பேப்பர் துண்டுகள் மத்தியில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் நமக்கு இப்போதும் உண்டு!
" ஆமா தாத்தா காலத்து இத்துப்போன வாட்ச்.அதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா?பேசாம குவாட்டர் அடிச்சிட்டு தூங்குவோம்" என்று "அதிஉன்னத ரசனை"யோடு சொல்லிவிட்டு தூங்குவதாக காட்சி வந்திருக்கும்!
*************************************
No comments:
Post a Comment