Friday, 7 February 2025

ஐயாயிரம் வருட இரும்பு!

 யூ ட்யூப் சேனல்கள் பலவிதம்.பொத்தாம் பொதுவாக tech reviewer என்று போட்டுவிட்டு குண்டூசி தொடங்கி இன்ஷுரன்ஸ் வரையில் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு விளக்கி தள்ளும் விடலைகள்(வயதில் அல்ல.நடவடிக்கையில்.அது எந்த வயது ஆசாமியாக இருந்தாலும் சரி) ஒருபக்கம்.
 பெரும்பாலான இந்திய அதிலும் குறிப்பாக தமிழ் சேனல்கள் இந்தவகை.
   மற்றொருபக்கம் ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்டையே சேனல் தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து அதைப்பற்றி மட்டுமே பேசுவோர் மற்றொரு வகை.மேற்கத்திய சேனல்கள் இவ்வகையில் அதிகம்.இந்திய அதிலும் தமிழ் சேனல்களில் அப்படியும் உண்டு என்றாலும் அபூர்வம்.
   அப்படியான ஒரு சேனல் The Brand Dude. இவர் தமிழ் சினிமா பிரபலங்கள் அணியும் கை கடிகாரங்கள் என்ன பிராண்ட் எது எத்தகைய மாடல் எந்த மேக் அதன் movement எத்தகையது என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார்.

San Martin 36mm VH31??

   
 
 
ஆனால் இந்த சேனலில் வரும் கமன்ட்கள் என்ன தரத்தில் உள்ளன என்பதை நீங்களே கீழே பாருங்கள்!
 



 

  ஒருவேளை விவசாயி என்றோ மருத்துவ தகவல் என்றோ கல்வி செய்திகள் என்றோ சேனல் பெயரை வைத்து அப்போது இப்படியெல்லாம் பதிவுகள் போட்டால் இப்படி ஏடாகூடமாக கேட்பதில் சிறிதளவு நியாயம் உள்ளதாக கூறலாம்.ஆனால் அவர் தெளிவாக Brand dude என்ற பெயரில் கை கடிகாரங்கள் பற்றி மட்டுமே வீடியோக்கள் போட்டு வருகிறார்.அத்தகைய சேனலில் வந்து நாளைக்கு எக்சாம் இருக்கு.இன்னைக்கு பிட் எதாச்சும் கிடைக்குமா?கிழைய தலைமுறை பயன்பெறுமாறு இதெல்லாம் செய்யலாமே? என்று கேட்கும் மந்திகள் தான் அதிகம்.

   அதிலும் ஒரு பக்ரா "விஜய் சேதுபதி அணிந்திருக்கும் ஜட்டி பற்றியும் போடுங்கள்" என்று கமன்ட் செய்கிறான்.இந்த நேரத்தில் தான் ஞாநி நியாபகம் வந்தது. ஆர்க்குட் பிரபலமாக துவங்கிய காலத்தில் அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் "பள்ளிகளில் சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குறித்த அடிப்படைகளை ஒரு பாடமாக பள்ளிகள் பயிற்றுவிக்க வேண்டும்" .

 

      இதில் நமக்கு உடன்பாடு இல்லை.காரணம் இன்று ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்காத பள்ளிகளே இல்லை.ஆனால் பள்ளியில் படிப்போர் நடந்துகொள்ளும் விதம் எப்படியாக உள்ளது என்பதை நாம் கூற வேண்டியதில்லை.அதுபோல என்னதான் பள்ளியில் ஆன்லைன் பயன்பாடு குறித்து பாடம் எடுத்தாலும் எவரையும் திருத்த முடியாது.
  ஐயாயிரம் வருசமா ஒரே இரும்பை அடிச்சிட்டு இருந்ததால் பண்போடு பேசுதல் நாகரீகமாக நடந்து கொள்ளுதல் கண்ணியமாக ஆன்லைனில் உரையாடுதல் போன்றவை அவுட் ஆப் சிலபஸ் ஆகிப்போச்சு!
   முனியாண்டி எப்போதும் வைக்கும் "philistine சமூகம்" புலம்பல் என்றுமே உயிர்ப்போடு இருக்கும் என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை!

 

.
  மேலே குறிப்பிட்ட அதே கருத்தோடு உடன்படும் மற்றொரு விஷயம்.கோட்டு கோபி ஏ.ஆர்.ஆரை பேட்டி எடுக்கிறார் .இது வரை இல்லாதபடி (அதிசயமாக!) ஏ.ஆர்.ஆர் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பகிர ஆரம்பிக்கிறார்.உதாரணமாக ஒரு படத்தின் பாடல்கள் ஆறு ட்ராக் என்பதாக மட்டுமே இருந்ததாகவும் தான் வந்து படத்திற்கு ஆறு ட்ராக் அதுவே தனியாக கேசட் சிடியில் எட்டு ட்ராக் என்ற புதிய முறையை பயன்படுத்தியது பற்றி பேச ஆரம்பிக்கிறார்.உடனே கோட்டு கோபி நீங்கதான் அதை முதல்ல செஞ்சீங்களா?அப்படி இப்படி என்று எதேதோ கேட்க மனிதர் மீண்டும் தனது ஆமை ஒட்டுக்குள் புகுந்து கொண்டு அந்த விளக்கத்தை கைவிடுகிறார்.





   மேலும் பாடல் வரிகள் புரியவில்லை என்ற கேள்விக்கு "நல்ல ஆடியோ சிஸ்டத்தில் கேளுங்க" என்று சொன்னதை பெரிய விஷயமாக கோட்டு கோபி கேட்கிறார்.அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு??
   இதே கோபியின் இடத்தில் சித்ரா லட்சுமணன் இருந்திருந்தால் அப்படியே தான் கேள்வி கேட்பதையும் இடையில் குறுக்கீடு செய்வதையும் மொத்தமாக நிப்பாட்டி ரஹ்மானை முழுமையாக பேச விட்டிருப்பார்.கண்டிப்பாக சித்ரா ஏ.ஆர்.ஆரை விரிவாக ஒரு பேட்டி எடுக்க வேண்டும்.
 

   கோட்டு கோபி நீயா நானா மாதிரியான "கார்ப்பஸ் கல்லோசம் தாம்புக்கயிறு மாதிரி தடிமனாக உள்ளவர்கள் வாயாடும் நிகழ்ச்சி"க்குத்தான் லாயக்கு.
(கார்பஸ் கல்லோசம் உவமானம்  - வாத்தியார்)

No comments:

Post a Comment