Showing posts with label இசையராஜா. Show all posts
Showing posts with label இசையராஜா. Show all posts

Saturday, 3 October 2015

ஒரு ஓடை நதியாகிறது (1983)

                    காலம்  காலமாக  குழந்தைகள்  என்றாலே  நாம்  நமது  மனதில் சில  பிம்பங்களை  சுமந்துவருகிறோம்.
  • பொய்  சொல்ல  மாட்டார்கள்..
  • குழந்தையும்  தெய்வமும்  ஒன்னு(மனுசன  டார்ச்சர்  பண்றதுலையா  உதயா?-முனியாண்டி)
  • கள்ளம்  கபடமற்றவர்கள் 
  • உள்ளொன்று  வைத்து  புறமொன்று  பேசாதவர்கள் 
இப்படி  பலப்பல..நம் மனதில்  இருக்கும்  இந்த  முன்முடிவுகளை  குழந்தைகள்  மேல்  திணிக்கிறோம்.அல்லது  இரண்டையும்  ஒப்பிட்டு  பார்த்து  ஏமாற்றமடைகிறோம்.எரிச்சல்  அடைகிறோம்.அது அந்த  உறவில்  சரிசெய்ய முடியா  ஒரு விரிசலை  உண்டுபண்ணி  விடும்.
                    சமூகத்திலும்  சரி  சினிமாவிலும்  சரி  தந்தை  கேரக்டர்  பெரும்பாலும்  மகனால்  வெறுக்கப்படும்  ஒரு  சர்வாதிகாரி  போலத்தான்  பார்க்ப்படுகிறது/சித்தரிக்கப்படுகிறது.காரணம்  மேற்சொன்ன  அந்த  முன்முடிவுகள்!எவ்வித  எதிர்பார்ப்பும்  முன்முடிவுகளும் இல்லாமல்  குழந்தைகளை  அணுகுவதே  சிறந்தது.
                  இந்தப்படம்  கூட  ஒரு  சிறுவனின்  கணிக்க  முடியா  மன  ஓட்டத்தை  சொல்வதாகவே  உள்ளது.
                 பதினெட்டு  வயதானால்  மேஜர்  என்பது  சட்டவிதி.ஆனால்  அதற்குமுன்பே  ஏதோ  ஒரு  தருணத்தில்;  யாரோ  ஆற்றும்  எதிர்வினையில்;  ஏதோ  ஒரு  அனுபவத்தால் குழந்தைத்தனம்  விலகி பெரிய  மனுசத்தனம்  என்று  சொல்லமுடியாவிட்டாலும்  ஓரளவு maturity குழந்தைகளுக்கு  வந்துவிடும்.
                 இப்படத்தில்  அந்தத்தருணம்  மிக  அற்புதமாக  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தந்தை  பெயர்  தெரியாது  வளரும்  சிறுவன்.அவனின்  தாய்  நோய்வாய்ப்பட்டு  இறந்துபோகிறார்.அவனை  எடுத்து வளர்ப்பது  யார்?என்ற  கேள்வி  வருகிறது.திருமணத்திற்கு  முன்பு    உணர்ச்சி  வேகத்தில் செய்த  செயலின்  விளைவு  இப்போது  சிறுவனாக  நிற்பதை  ரகுவரன்  பார்க்கிறார்.மனைவி  குழந்தை  என்று  செட்டிலாகிவிட்டார்.வேலை  கிடைத்ததேகூட  அந்த  ஏமாற்றப்பட்ட  பெண்ணின்  தந்தையின்  உதவியால்தான்.இவ்விரண்டு  விஷயமும்  அவரின் குற்ற  உணர்ச்சியை  நாளுக்கு  நாள்  அதிரிக்கரிக்கச்செய்கிறது.

               என்னவானாலும்  சரி  மகனை  தானே  வளர்ப்பது  என்று  முடிவெடுத்து  மனைவியிடம் தைரியமாக  சொல்லும்  அந்த  தருணத்தில்தான்  ஒட்டு  கேட்கும்  சிறுவன்  உளவியல்  ரீதியில் பெரியவனாகிறான்(அதைத்தான்  ஒரு  ஓடை  நதியாகிறது  என்று  டைட்டில்  வைத்திருக்கிறார்கள்).
                தான்  தந்தை  வீட்டில்  வளர்ந்தால் அவரது  மனைவிக்கு பெரிய  தர்மசங்கடத்தை  கொடுத்துவிடும்  என்று  வேறொரு  ஊருக்கு  கிளம்புகிறான்.பேருந்து  நிலையத்தில்  அவனை  கண்டுபிடிக்கும் ரகுவரனிடம்  "நான் ஒரு  நல்ல  நிலைக்கு  வந்தபின்  உங்களை  கண்டிப்பாக சந்திக்கிறேன்" என்று  சொல்லி  பெங்களூரு  செல்லும் பேருந்தில் தனியே  கண்ணீர்  மல்க  செல்வதாக  முடிகிறது.அவனுக்கு  தந்தையோடு  இருக்க  விருப்பம்தான்.ஆனால்  தாய்க்கும்  அவரது  குழந்தைக்கும்  இது  பிற்காலத்தில்  பல  பிரச்ச்னனைகளை  உண்டாக்குமே? என்று முதிர்ந்த மனநிலையில்   சிந்தித்து உறுதியான  முடிவெடுக்கிறான்.அது  தன்னைத்தானே  அச்சூழலில்  இருந்து  விளக்கிக்கொள்ளுதல்.ஸோ காலட்  பெரிய  மனிதர்களே  இப்படியாக அடுத்தவர்  உணர்வுகளுக்கு  மதிப்பு  கொடுத்து  முடிவெடுக்காத   நிலையில்  ஒரு  சிறுவன்  இவ்வளவு  மெச்சூரிட்டியோடு  சிந்திப்பதை  ரொம்ப  இயல்பாக  அதேநேரம்  மணிரத்னம்  பாணி  குழந்தைகளைப்போல  ஓவர்  ரியாக்ட்  பண்ணாதவகையில்  காட்சிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதர்.

                 ரகுவரனை  பொறுத்தளவில்  கொடூர  வில்லத்தனம் என்றாலும்  சரி  மிக  மென்மையான கதாபாத்திரம்(கூட்டுப்புழுக்கள்,ஆஹா,முகவரி...etc.,) இரண்டுக்கும்  இடைப்பட்ட  சம்சாரம்  அது  மின்சாரம்   கதாபாத்திரமானாலும்  சரி  அனாயசமாக  செய்துவிடக்கூடியவர்.இப்படத்திலும் முதலில்  மைனர்  வேலைகள்  செய்வது;பின்னர் சின்ஸியராக வேலை செய்து நல்லநிலைக்கு வருதல்; பிறகு அந்தச்சிறுவனையும் மரணப்படுக்கையில்  இருக்கும்  அவன் தாயையும்   நினைத்து  உருகுதல்  என்று அட்டகாசமாய்  நடித்திருக்கிறார்.அந்த  சிறுவனுக்கு  தமிழ்  தெரியாது  என்று  நினைக்கிறேன்(ஏதோ  ஹிந்தி  படத்தில்  பார்த்ததாக  நினைவு).ஆனாலும்  சரியாக  வாயசைத்து  நன்றாகவே நடித்திருக்கிறான்.

               படத்தின் குறைகள்  இரண்டு.  ஒன்று   ரகுவரனுக்கு  எஸ்.என்.சுரேந்தரின்  டப்பிங் குரல் .அது  மோகனுக்கு அட்டகாசமாய்  பொருந்திய  அளவில்  பாதிகூட  இங்கே பொருந்தவில்லை..ஏன்  ரகுவரனே  மென்மையான  பல  கதாபாத்திரங்கள்  செய்யக்கூடியவர்தானே(கூட்டுப்புழுக்கள்)!அவர்  குரல்  ஒன்றும்  கர்ணகொடூரமானது  இல்லையே!இரண்டு அந்த  சிறுவனுக்கு  ஒரு பெண்ணின் குரலை  டப்பிங்  கொடுக்க  செய்தது.மிகப்பெரிய இயக்குனரான  ஸ்ரீதர்  இதை  எப்படி  கவனிக்காமல்  விட்டார்  என்று  தெரியவில்லை
     (வழக்கம்போல)  படத்தின்  ஆணிவேராக    இசையராஜா  இசை. 

     பி.கு:         ரகுவரன்  ஹீரோவாக  நடித்ததில்லை..வில்லனாக  மட்டுமே  நடித்திருக்கிறார்  என்று  தனுசு  போன்ற  விஷக்கொசுக்கள்  விஷமத்தனமாக  பொய்த்தகவலை  மக்கள் மனதில்  பதிய  வைப்பது கேடுகெட்ட  ஒரு  சூழலை  காட்டுகிறது.அதற்கு  மறுப்பாக கூட  இப்பதிவை  எடுத்துக்கொள்ளலாம்.

Saturday, 26 May 2012

சலங்கை ஒலி -தோற்றவனின் வலி

 புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை 
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை  
             என்ற சந்திரபாபு பாடலுக்கு இலக்கணமாய் நிஜ வாழ்வில் வாழ்வோர் பலர்..மிக அபூர்வ திறமைகளை கொண்டிருந்தாலும் சரியான வாய்ப்பு இல்லாமல் போவது சரியான நேரத்தில் உதவ பணமோ அல்லது பெரிய புள்ளி அல்லது வாரிசு  என்ற உதவியோ இல்லாதது போன்ற பல காரணங்களால் திறமைசாலிகள் பலர் தமது திறமைகள் நிரூபிக்கபடாமலேயே சமூக அங்கீகாரமோ அல்லது பாராட்டோ பெறாமலேயே மாண்டு போனோர் பூமியில் பல கோடி...
அப்படி ஒருவரின் கதைதான் சலங்கை ஒலி..
         இந்த படத்தை பார்ப்பது இதுதான் முதல் முறை என்பதை ஒரு வித தயக்கத்துடனே சொல்லிகொள்கிறேன்.பார்த்தவுடன் அந்த தயக்கம் இப்படி ஒரு படத்தை இவ்வளவு வருடம் பார்க்காமல் போய்விட்டோமே என்ற வருத்தமாக மாறியது...எது எப்படி இருந்தாலும் படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆனாலும் இன்றும் மனதில் நிற்கிறது..
       மேலும் இப்படத்தை பார்த்தபோது இரண்டு விஷயங்கள் தோன்றின .
முதல் விஷயம் கமல் தவிர இந்த படத்தில் வேறு யாராவது நடித்து நாட்டியம் ஆடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற டெர்ரரான எண்ணம பயமுறுத்தியது(ரஜினி சத்யராஜ் விஜயகாந்த் போன்றோர் நாட்டியம் ஆடுவதாக கற்பனை செய்து பாருங்கள்).இன்றும் கூட நாட்டியம் தெரிந்த ஒரு நடிகர் கமலுக்கு  பிறகு (சூர்யா  விஜய் தனுசு போன்றோர் நாட்டியம் ஆடுவதாக கற்பனை  செய்யவும்). பிரபுதேவா இருக்கிறார் என்றாலும் அவருக்கு நடிக்க தெரியுமா என்பது பெரிய கேள்வி..
இன்றைக்கு நடிப்பு என்றால் என்ன?சிக்ஸ் பேக்ஸ் காட்டுவதே..அல்லது லுங்கியை நடு ரோட்டில் தூக்கி கொண்டு ஆடினால் தேசிய விருது நிச்சயம்..
         இப்போது ப்ளாகர் உலக அறிவுஜீவிகள் பலர் கமலை ஈயடிச்சான் காப்பி என்று விமரிச்ப்பதை ஒரு பேஷனாக கொண்டுள்ளனர்.அது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் முன்பொரு காலத்தில் அவர் பல நல்ல படங்களை தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. எண்பதுகளில் அவர் பின்பற்றிய அல் பசினோ உடல்மொழிகளை பின்பற்றாது நடித்த படங்களை அப்படி சொல்ல இயலும்.இது அப்படி ஒரு படம்.
        சில வருடங்கள் முன்பு வரலாறு என்று ஒரு படம்..அதில் அஜீத் நடனமாடும் இன்னிசை அளபெடைய என்ற பாடல் திரையில் ஓடிகொண்டிருந்த போது நான் நண்பனிடம் கேட்டேன் "வாட் ஹீ இஸ் டூயிங்?" என்று கேட்டபோது தெரியலியேபா என சிவாஜி ஸ்டைலில் சொன்னான்...
   கிராபிக்சில் சுற்றி சுழன்றாடுவதாக காட்டிய போது எனக்கு தலை சுற்றியது..
சரி எங்கயோ போய்ட்டேன்.சலங்கை ஒலி படத்தை என்றுமே ரீமேக் செய்ய முடியாது என்பது மட்டும் உறுதி(நிம்மதி கூட)
       மற்றொரு விஷயம் இந்த படத்தின் முதுகெலும்பு இசை.பாடல் இசை மற்றும் பின்னணி இசை.ராஜாவை தவிர வேறு யாரும் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தால் லபோ திபோ என ஏதோ ஒரு இசையை பாடலை கொடுத்து படத்தை ஒழித்திருப்பர்.இந்த படத்திற்கு இசைக்காக இசையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது("வாங்கியது" இல்லை.அதெல்லாம் இப்போ சில  அரைவேக்காடுகள் வாங்குவது போல அப்போது இல்லை)

         வைரமுத்து (பிற்காலத்தில்)எதிர் கோஷ்டியில் சேர்ந்து ராஜாவை தூற்றாத சமயம் அது.
"உலக வாழ்க்கை நடனம் 
நீ ஒப்புக்கொண்ட பயணம் 
நீ தொடங்கும்போது முடியும் 
அது முடியும்போது தொடங்கும்" 
என்ற வரிகளே அவரை பற்றி சொல்ல போதுமானது.

 தனது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தும் தாய் மரணத்தால் புழுங்கி தவிப்பதில் மிளிர்கிறார்.தனது வாழ்நாள் முழுக்க திறமை அங்கீகரிக்க படாதவராகவே(கடைசியில் மேடையில் வீல் சேரில் உட்காரும்போது அவர் கேட்கும் கை தட்டல் ஒலிக்கு கண்ணீர் மல்க வணங்கி இறக்கிறார்.
நிஜ வாழ்வின் கொடூரங்களில் இருந்த தன்னை தற்காத்துக்கொள்ள தொடர்ந்து குடி என்னும் கற்பனை உலகிலேயே வாழ்கிறான் பாலு.அதுவே அவன் வாழ்வை அழிக்கிறது.
பி.கு: இப்படி எல்லாம் நடித்த கமல் இப்போது ஒரு Narcissist ஆக மாறி போனது நேரக்கொடுமைதான்!ஒலக சினிமாவை காப்பிடியடிப்பதை விட்டு விட்டு வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில்(அமிதாப் போல) நடிப்பது இவருக்கும் நல்லது சினிமாவுக்கும் நல்லது பார்க்குரவனுக்கும் நல்லது.