நமக்கு முக்கியமாகத்தெரிந்த இரண்டு விஷயங்கள்: மோசடி செய்த பேர்வழியை எதிர்கொண்ட விதமும் அந்த மோசடி பணத்தை கையாளப்பட்ட விதமும்.
இரும்பு திரை மாதிரி ஒரே நேரத்தில் நூறு பேரை துவைத்து எடுப்பதாகவும் இல்லாமல் துணிவு மாதிரி "ஹீரோ இப்ப என்னதான் பண்ணிகிட்டு இருக்காருன்னே புரியலையே" என்று படத்தில் நடித்தவர்கள் உட்பட யாருக்குமே புரியாமல் குழப்பியும் அடிக்காமல் இருந்ததே பெரிய விஷயம்!
இந்தப்படம் கொஞ்சம் Lage Raho Munnabhai படத்தின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் காந்தியம் அது இதுவென்று திசை மாறவில்லை.
பதினேழு ரூபாய் கணக்கில் குறைகிறது என்று அதை விசாரிக்க ஒரு லட்சம் செலவானதை ராதே மோகன் ஷர்மா(மாதவன்) சுட்டிக்காட்டும் காட்சி தற்கால ஊழல்/லஞ்ச ஒழிப்பு வழக்குகள் விசாரிக்கப்படும் லட்சணத்தை காட்டியது.
அதைவிடவும் மாபெரும் ஆறுதல் தந்த ஒரு விஷயம் என்றால் படத்தின் முடிவில் மோசடி செய்து சேர்க்கப்பட்ட பணம் ஒரு பெரிய கன்டெய்னரில் வரும்.அங்கே ஏமாந்த மக்கள் கூடி இருப்பதை கண்டதும் நமக்கு பீதி எகிறியது.
சிவாஜி தொடங்கி துணிவு வரையில் இந்தமாதிரி மொத்தமாக ஏமாற்றப்பட்ட பணம் மக்கள் மத்தியில் கிடைத்ததும் ஆளாளுக்கு கையில் அள்ளிக்கொண்டு போகும் அபத்த காட்சியையே இதுவரை கண்டிருக்கிறோம்.அதிலும் துணிவு படத்தில் உச்சகட்டமாக தான் போலீசில் இருந்து தப்பிக்க ஏமாற்றப்பட்ட பணத்தை confetti canon மூலம் காற்றில் பறக்கவிட்டு குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் அஜீத் எஸ்கேப் ஆகிப்போவதாக காட்டிய அவலத்தை மறக்கவே முடியாது.
ஆனால் இதில் அந்தமாதிரி எந்த விடலைத்தனமும் செய்யாமல் முறையாக அரசிடம் ஒப்படைப்பதாக காட்டியது பெரும் ஆறுதல்.மாதவன் நடித்த படம் என்பதால் (தற்காலத்தில்) அந்த மாதிரி பொறுப்பற்ற காட்சிகளில் நடிக்கமாட்டார் என்று ஏனோ தோன்றிய சிறு நம்பிக்கை வீண் போகவில்லை!
மாதவனை பொறுத்தளவில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி .2000 தெனாலி தொடங்கி இப்போதுவரை உள்ள ரஹ்மான் மாதிரி*
தமிழில் திராபை படங்களாக கொடுத்துவிட்டு ஹிந்தியில் பெயர் வாங்கும் விதத்தில் இருவரும் ஒன்றே!
மேலும் உறுத்தலாக இருந்த ஒரு காட்சி என்றால் படத்தின் காவல் அதிகாரி வேடத்தில் வரும் பூனம் ஜோஷி (Kirti Kulhari)தான் ரொம்பவும் professional என்கிறார்.அதை சொல்லி முடித்த உடனே விசாரணைக்கு ஆஜரான மாதவனிடம் "பதினைந்து வருடத்துக்கு முன்பு நீங்கள் ஒரு பெண்ணை நிராகரித்தீர்கள்!நினைவில் உள்ளதா?" என்கிறார்.என்ன professionalism- ஓ!
No comments:
Post a Comment