Thursday, 20 February 2025

Tag?? No it's a Rolex!

 பில்லா படத்தில் பிரபு தனக்கு கீழ் பணிபுரியும்  ஆதித்யாவிடம் இந்த கேள்வியை கேட்பதாக வரும்.இந்த பதிலை கேட்டதும் ஆதித்யா மேல் சந்தேகம் அதிகமாவதாக காட்சி செல்லும்.( "கிஃப்ட்டா கொடுத்தாங்க" என்று ஆதித்யா சமாளிப்பது கண்டு பிரபுவுக்கு வியப்பும் சந்தேகமும் வரும்)
    


சம்பளம் தவிர்த்து வேறு எதோ வழியில் வருமானம் வருகிறது என்பதை வழமையாக 'புது வீடு வாங்கிட்டீங்க போல', 'புது கார் வாங்கிட்டீங்க போல' என்று வைக்காமல் இப்படி புதுமையாக வைத்தது அப்போதே  நமக்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
              Tissot PRX Chronograph?
 

    காரணம் திரையுலகில் உள்ளவர்களுக்கு இந்த luxury watches hierarchy எல்லாம் தெரிந்தாலும், மிகப்பெரிய luxury watches collection வைத்திருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் போராளி புரட்சியாளன் என்றெல்லாம் காட்டிக்கொள்ளவே விழைவார்கள்(விஜய் சேதுபதி,தனுசு,சூர்யா ,ஆர்.ஜே.பாலாஜி, செராக்ஸ் கடை அட்லீ ஆகிய சில உதாரணங்கள் உண்டு).ஆனால் விஷ்ணுவர்தன் unabashed என்பார்களே!அதுபோல அந்த ரசனையான அறிவை ஒரு காட்சியாக்கியது உண்மையில் அற்புதம்.தன்னை போராளி என்று காட்டிக்கொள்ள சற்றும் விழையாத அஜீத்தையும் பாராட்ட வேண்டும்.அதன்பின்னும் சரி முன்பும் சரி தமிழ் சினிமாவில் வாட்ச் hierarchy சம்மந்தமாக ஒரு காட்சி நாம் பார்க்கவில்லை.
   24 என்ற டுபாக்கூர் படத்தில் ஒரு watch maker கதாபாத்திரம் என்று கூறப்பட்டாலும் அதில் சூர்யா வாட்ச் குறித்த எந்த காத்திரமான உரையாடலும் செய்ய மாட்டார்.விடலைத்தனமாக "basically I am a watchmaker" என்று தேய்ந்து போன ரெக்கார்டாக அறுத்து தள்ளுவார்.இதே watchmaker கேரக்டரை விஷ்ணுவர்தன் இன்னும் nunanced ஆக ரசனையாக காட்டியிருப்பார் என்று தோன்றியது.ஆனால் அதையும் போராளி இமேஜில் இருக்கும் ஈரோ அனுமதிக்க வேண்டுமே!
சூர்யாவிடம் ஏகப்பட்ட luxury watches இருந்தாலும் அந்த அறிவை படத்தில் வைக்காததன் காரணம் தெரிந்ததே!போராளியாக ஃபார்ம் ஆகிட்டா பிறகு அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய வேண்டுமே!
  *******************************
Pulp fiction படத்தில் அத்தனை chapter களுமே நன்றாக இருக்கும் என்றாலும் நம்மை கவர்ந்தது Butch Coolidge (ப்ரூஸ் வில்லிஸ்) வரும் பகுதி. அதிலும் குறிப்பாக வாட்ச் மீட்கும் காட்சி!

   சிறுவனான கூலிட்ஜிடம் கேப்டன் கூன்ஸ் (கிறிஸ்டோபர் வால்கென்) ஒரு கோல்ட் வாட்சை மிக நீண்ட போராட்டத்திற்கு எப்படி இவன் கையில் அது கிடைத்துள்ளது என்ற மகிமையை ரொம்பவும் தீவிரமாக விளக்குவார்.தந்தை தந்தைக்கு தந்தை என்று பரம்பரையாக வந்த வாட்ச்.தான் வேலை பார்க்கும் மார்செல்லஸ் என்ற ஈவிறக்கம் இல்லாத தாதாவிடமிருந்து தப்பித்து காதலியுடன் வேறொரு ரகசிய இடத்தில் ஒரு மோட்டலில் தங்கி இருப்பார்.

 

    அப்போதுதான் அந்த வாட்ச் தனது வீட்டிலேயே இருப்பதை உணர்வார்.மீண்டும் தனது வீடு இருக்கும் ஏரியாவுக்குள் நுழைந்தாலே மேலே டிக்கெட் உறுதி என்று தெரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஏகப்பட்ட ரத்தக்களரி உதைகள் தாண்டி தனது வீட்டில் அந்த வாட்சை கண்டுபிடித்து அதை அணியும் அந்தத்தருணம் 🫰🫰🫰
   Lancet trench watch என்று அழைக்கப்பட்டாலும் அது ஒரு பாக்கெட் வாட்ச் தான்.அதில் ஸ்ட்ராப் போட்டு கூலிட்ஜ் அணிவதாக கார்சிவிருக்கும்
Tarantino எந்தளவு ரசனையான ஒரு படைப்பாளி என்பதை அந்தக்காட்சி உணர்த்தும்.அந்தக்காட்சியை ஏகப்பட்ட விசில் கைத்தட்டல் பறக்கும் பேப்பர் துண்டுகள் மத்தியில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் நமக்கு இப்போதும் உண்டு!


 
  இதுவே தமிழ் சினிமாவாக இருந்திருந்தால்???

" ஆமா தாத்தா காலத்து இத்துப்போன வாட்ச்.அதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா?பேசாம குவாட்டர் அடிச்சிட்டு தூங்குவோம்" என்று "அதிஉன்னத ரசனை"யோடு சொல்லிவிட்டு தூங்குவதாக காட்சி வந்திருக்கும்!

(பிரியாணி குவாட்டர் புரச்சி தவிர நம்மூர் ஈரோக்களுக்கு வேறெதுவும் தெரியாது! - கும்மாங்கோ)

   *************************************

ஜான் விக் படத்தில் ரீவ்ஸ் Carl F Bucherer watch அணிந்திருப்பார்.வழமையான ரோலக்ஸ் ஒமேகா என்றில்லாமல் அது முற்றிலும் புதுமையாக இருந்தது. 
 

ஆனால் ரோலக்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கி விட்டது.இனி எந்த புது மாடலும் வெளியிடப்படாது.ஏற்கனவே Bucherer வைத்திருப்பவர்கள் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.உண்மையில் ஸ்மார்ட் வாட்ச் என்ற டுபாக்கூர் வாட்ச் வரவால் இம்மாதிரி பாரம்பரிய நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மாபெரும் அவலம்!
   


அதிலும் கடிகாரத்தை டயல் உட்புறமாக கட்டி இருப்பார் ஜான் விக்.காரணம் வெளிப்புறமாக டயல் இருந்தால் ரகசியமாக பல இடங்களில் செல்ல நேரிடும்போது எங்கிருந்தாவது ஒளி பட்டு பிரதிபலித்து இவரை காட்டிக்கொடுத்து விடும் என்பதால்!

  

Sunday, 16 February 2025

இந்த கட்டுக்கு நாலு இன்ச் இருந்தா போதாது???

 “Although he’s a contemporary assassin, Eddie and I were keen to express the analogue nature of the Jackal’s methods and preparation,” says the show’s costume designer Natalie Humphries on how the team settled on what watches would appear on-screen. “A precision timepiece was essential.”
      

Nathalie Humphries


 

இது Day of the jackal சீரிஸின்  காஸ்டியூம் டிசைனர் கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி. Sniper வைத்து கொல்லும் நேரங்களில் Omega Railmaster ம், மக்களோடு மக்களாக கரைந்து பணியாற்றும் போது Seamaster Aqua Terra ம் அணிந்தது ஏன் என்பதை விரிவாக விளக்குகிறார்.தொடரில் வரும் ஒரு காவலாளி ஏன் குறிப்பிட்ட வாட்ச் அணிந்தார் என்பதையும் விளக்குகிறார்.
   



 
 
 ஒருவேளை தமிழ் சினிமாவில் ஒரு பிரதான கேரக்டர்/வேறு முக்கிய கேரக்டர்  ஏன் குறிப்பிட்ட மாடல் வாட்ச் அணிய நேர்ந்தது என்பது குறித்து இங்கே காஸ்டியூம் வடிவமைப்பாளர் பேட்டி கொடுத்தால் எண்ணாகும்?நம்மாளுங்க எப்படி கமன்ட் செய்வார்கள்??

அந்த கேரக்டரின் ஜட்டி உடும்பு மார்க்கா?என்று  ஆரம்பித்து ஏகப்பட்ட அபத்த கேள்விகளை கேட்பார்கள்.அப்புறம் வழக்கம் போல "இந்த காசில் எத்தனை ஏழைகளுக்கு..." டெம்ப்ளேட் கேள்வி (அந்த கேள்விய எழுப்பியவர்கள் தான் ஆகச்சிறந்த luxury watch collection வைத்துள்ளார்கள் - கும்மாங்கோ) கேட்கப்படும். அதாவது தான்  ரசனையே இல்லாமல் எருமைத்தோலாக இருந்தால் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும்.
     "இந்த கட்டுக்கு நாலு இன்ச் இருந்தா போதாது?" என்ற வடிவேலு காமெடி வசனம் போல ஒரு பிளாட்பார வாட்ச்சை ஹீரோ கையில் கட்டிவிட்டால் கூட யாரும் கண்டுக்கவோ கேள்வி கேட்கவோ போவதில்லை!
       இதுபோலவே சினிமா பாடல்கள்  99% 128kbps டவுன்லோட்/FM + மொபைலின் ஒற்றை ஸ்பீக்கரில் தான் கேட்கப்படுகிறது.இதற்கு நான் ஏன் மிக்ஸிங்கில் மெனக்கெட வேண்டும்? என்று அறிவுஜீவி பிரகாசு போன்றோர் practical ஆகத்தான் யோசிக்கிறார்கள்!
   இதெல்லாம் தெரியாத ஏ.ஆர்.ஆர் ஹாரிஸ் இருவரும் ஒரு பாடலுக்கே மணிக்கணக்கில் நாள்கணக்கில் மாதக்கணக்கில் மெனக்கெடுகிறார்கள்!

Friday, 14 February 2025

Hisaab Barabar

 

படத்தில் திரைக்கதை சரியில்லை இது சரியில்லை அது சரியில்லை என்ற விமர்சனங்களை பார்த்தோம். அதை கடைசியில் பார்ப்போம்.

 

  நமக்கு முக்கியமாகத்தெரிந்த இரண்டு விஷயங்கள்: மோசடி செய்த பேர்வழியை எதிர்கொண்ட விதமும் அந்த மோசடி பணத்தை கையாளப்பட்ட விதமும்.
     இரும்பு திரை மாதிரி ஒரே நேரத்தில் நூறு பேரை துவைத்து எடுப்பதாகவும் இல்லாமல் துணிவு  மாதிரி "ஹீரோ இப்ப என்னதான் பண்ணிகிட்டு இருக்காருன்னே புரியலையே" என்று படத்தில்  நடித்தவர்கள் உட்பட  யாருக்குமே புரியாமல் குழப்பியும் அடிக்காமல் இருந்ததே பெரிய விஷயம்!

   



 தனது குடும்பத்தை சிதைத்த வங்கி முதலாளி ஒருவனை பிரித்விராஜ் பழிவாங்கும் நான் நினைத்ததை முடிப்பவன்(Robin Hood 2009) நமது அபிமான படம்.அதிலும்  நம்பகத்தன்மை இருக்கும்.அதில் விசாரணை அதிகாரியாக வரும் நரேன் விளையாட்டுத்தனமான  கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருப்பார்.

 

      இந்தப்படம் கொஞ்சம் Lage Raho Munnabhai படத்தின் சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் காந்தியம் அது இதுவென்று திசை மாறவில்லை.
    பதினேழு ரூபாய் கணக்கில் குறைகிறது என்று அதை விசாரிக்க ஒரு லட்சம் செலவானதை ராதே மோகன் ஷர்மா(மாதவன்) சுட்டிக்காட்டும் காட்சி தற்கால ஊழல்/லஞ்ச  ஒழிப்பு வழக்குகள் விசாரிக்கப்படும் லட்சணத்தை  காட்டியது.
     அதைவிடவும் மாபெரும் ஆறுதல் தந்த ஒரு விஷயம் என்றால் படத்தின் முடிவில் மோசடி செய்து சேர்க்கப்பட்ட பணம் ஒரு பெரிய  கன்டெய்னரில் வரும்.அங்கே ஏமாந்த மக்கள் கூடி இருப்பதை கண்டதும் நமக்கு பீதி எகிறியது.
    சிவாஜி தொடங்கி துணிவு வரையில் இந்தமாதிரி மொத்தமாக ஏமாற்றப்பட்ட பணம் மக்கள் மத்தியில் கிடைத்ததும் ஆளாளுக்கு கையில் அள்ளிக்கொண்டு போகும் அபத்த காட்சியையே இதுவரை கண்டிருக்கிறோம்.அதிலும் துணிவு படத்தில் உச்சகட்டமாக தான் போலீசில் இருந்து தப்பிக்க ஏமாற்றப்பட்ட பணத்தை confetti canon  மூலம் காற்றில் பறக்கவிட்டு குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் அஜீத் எஸ்கேப் ஆகிப்போவதாக காட்டிய அவலத்தை மறக்கவே முடியாது.
   
       ஆனால் இதில் அந்தமாதிரி எந்த விடலைத்தனமும் செய்யாமல் முறையாக அரசிடம் ஒப்படைப்பதாக காட்டியது பெரும் ஆறுதல்.மாதவன் நடித்த படம் என்பதால் (தற்காலத்தில்) அந்த மாதிரி பொறுப்பற்ற காட்சிகளில் நடிக்கமாட்டார் என்று ஏனோ  தோன்றிய   சிறு நம்பிக்கை வீண் போகவில்லை!

   மாதவனை பொறுத்தளவில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி .2000 தெனாலி தொடங்கி இப்போதுவரை உள்ள ரஹ்மான் மாதிரி*
    தமிழில் திராபை படங்களாக கொடுத்துவிட்டு ஹிந்தியில் பெயர் வாங்கும் விதத்தில் இருவரும் ஒன்றே!
     மேலும் உறுத்தலாக இருந்த ஒரு காட்சி என்றால் படத்தின் காவல் அதிகாரி வேடத்தில் வரும் பூனம் ஜோஷி (Kirti Kulhari)தான் ரொம்பவும் professional என்கிறார்.அதை சொல்லி முடித்த உடனே விசாரணைக்கு ஆஜரான மாதவனிடம் "பதினைந்து வருடத்துக்கு முன்பு நீங்கள் ஒரு பெண்ணை நிராகரித்தீர்கள்!நினைவில் உள்ளதா?" என்கிறார்.என்ன professionalism- ஓ!

    மோசடி செய்யும் வங்கி முதலாளியாக மிக்கி கேரக்டரில் நீல் நிதின் முகேஷ் ஆங்காங்கே கத்தி படத்தை நினைவூட்டுகிறார்.ஆனால் இதில் அவருக்கு  ஹீரோ மூலம் கம்யூனிச கிளாஸ் எடுக்கப்படவில்லை!அவர் மொத்தமாக பணத்தை அடுக்கி வைத்து அதன் முன் நிற்கும் காட்சிகள் செயற்கை!

 
    துணிவு படத்தின் விடலைத்தனமான ஹீரோ கேரக்டருக்கு பொருத்தமாக அஜீத் ஏழாம் வகுப்பு மாணவன் போல கண்ணாடி ஃப்ரேம் போட்டிருப்பார்.இதில் மாதவன்  முதிர்ந்த கேரக்டருக்கு பொருத்தமான ஃப்ரேம் போட்டிருந்தார்.ஜெயிலருக்கு பிறகு ஹீரோ கேரக்டருக்கு பொருத்தமான கண்ணாடி  ஃப்ரேம் இதுதான்.

 
   ஆனால் மாதவன் பாத்திரப்படைப்பு என்பதில் ஒரு நிலையான தன்மையில் இல்லை. இருபது ரூபாய்க்கு ஆரஞ்சு பழம் வாங்கும் ஷர்மா மாதிரியான ஒரு கேரக்டர் சரியாக இருபது ரூபாய் கொடுத்தே வாங்குவார்.இல்லாட்டா வாங்கவே மாட்டார்.மீதி காசுக்கும் ஆரஞ்சு பழங்களை அதுவும் ரயில் புறப்படும் நேரத்தில் வாங்கும் கேரக்டர் அல்ல அது!மேலும் பதினேழு ரூபாய் குறைந்ததற்கு பிராயச்சித்தமாக அந்த ரூபாயை வரவு வைத்தது மட்டுமல்லாமல் ஒரு டிவி வேறு பரிசாக வங்கி கொடுக்கிறது.அதை இவர் வாங்கியதாக காட்டியதிலும் பெரும் சறுக்கல்!

 
     மேலும் இவ்வளவு சீக்கிரம் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்படுவது, மந்திரி வரை தண்டிக்கப்படுவது எல்லாம் கொஞ்சம் surreal ஆக போய்விட்டது.அதை தவிர்த்து பார்த்தால் இது பார்க்கக்கூடிய  படம் தான்(தற்கால தமிழ் படங்களை ஒப்பிட்டு பார்க்கையில்).
 

 புரச்சி கம்யூனிசம் wokism என்று அடித்து விடும் சந்தர்ப்பம் கதையில் ஏகப்பட்ட இடங்களில் இருந்தாலும் அந்தமாதிரி விடலைத்தனத்தை செய்யாததற்கு இயக்குனருக்கும்(Ashwni Dhir ) மாதவனுக்கும் பாராட்டுக்கள்.

   
      

Friday, 7 February 2025

ஐயாயிரம் வருட இரும்பு!

 யூ ட்யூப் சேனல்கள் பலவிதம்.பொத்தாம் பொதுவாக tech reviewer என்று போட்டுவிட்டு குண்டூசி தொடங்கி இன்ஷுரன்ஸ் வரையில் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு விளக்கி தள்ளும் விடலைகள்(வயதில் அல்ல.நடவடிக்கையில்.அது எந்த வயது ஆசாமியாக இருந்தாலும் சரி) ஒருபக்கம்.
 பெரும்பாலான இந்திய அதிலும் குறிப்பாக தமிழ் சேனல்கள் இந்தவகை.
   மற்றொருபக்கம் ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்டையே சேனல் தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து அதைப்பற்றி மட்டுமே பேசுவோர் மற்றொரு வகை.மேற்கத்திய சேனல்கள் இவ்வகையில் அதிகம்.இந்திய அதிலும் தமிழ் சேனல்களில் அப்படியும் உண்டு என்றாலும் அபூர்வம்.
   அப்படியான ஒரு சேனல் The Brand Dude. இவர் தமிழ் சினிமா பிரபலங்கள் அணியும் கை கடிகாரங்கள் என்ன பிராண்ட் எது எத்தகைய மாடல் எந்த மேக் அதன் movement எத்தகையது என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார்.

San Martin 36mm VH31??

   
 
 
ஆனால் இந்த சேனலில் வரும் கமன்ட்கள் என்ன தரத்தில் உள்ளன என்பதை நீங்களே கீழே பாருங்கள்!
 



 

  ஒருவேளை விவசாயி என்றோ மருத்துவ தகவல் என்றோ கல்வி செய்திகள் என்றோ சேனல் பெயரை வைத்து அப்போது இப்படியெல்லாம் பதிவுகள் போட்டால் இப்படி ஏடாகூடமாக கேட்பதில் சிறிதளவு நியாயம் உள்ளதாக கூறலாம்.ஆனால் அவர் தெளிவாக Brand dude என்ற பெயரில் கை கடிகாரங்கள் பற்றி மட்டுமே வீடியோக்கள் போட்டு வருகிறார்.அத்தகைய சேனலில் வந்து நாளைக்கு எக்சாம் இருக்கு.இன்னைக்கு பிட் எதாச்சும் கிடைக்குமா?கிழைய தலைமுறை பயன்பெறுமாறு இதெல்லாம் செய்யலாமே? என்று கேட்கும் மந்திகள் தான் அதிகம்.

   அதிலும் ஒரு பக்ரா "விஜய் சேதுபதி அணிந்திருக்கும் ஜட்டி பற்றியும் போடுங்கள்" என்று கமன்ட் செய்கிறான்.இந்த நேரத்தில் தான் ஞாநி நியாபகம் வந்தது. ஆர்க்குட் பிரபலமாக துவங்கிய காலத்தில் அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் "பள்ளிகளில் சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குறித்த அடிப்படைகளை ஒரு பாடமாக பள்ளிகள் பயிற்றுவிக்க வேண்டும்" .

 

      இதில் நமக்கு உடன்பாடு இல்லை.காரணம் இன்று ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்காத பள்ளிகளே இல்லை.ஆனால் பள்ளியில் படிப்போர் நடந்துகொள்ளும் விதம் எப்படியாக உள்ளது என்பதை நாம் கூற வேண்டியதில்லை.அதுபோல என்னதான் பள்ளியில் ஆன்லைன் பயன்பாடு குறித்து பாடம் எடுத்தாலும் எவரையும் திருத்த முடியாது.
  ஐயாயிரம் வருசமா ஒரே இரும்பை அடிச்சிட்டு இருந்ததால் பண்போடு பேசுதல் நாகரீகமாக நடந்து கொள்ளுதல் கண்ணியமாக ஆன்லைனில் உரையாடுதல் போன்றவை அவுட் ஆப் சிலபஸ் ஆகிப்போச்சு!
   முனியாண்டி எப்போதும் வைக்கும் "philistine சமூகம்" புலம்பல் என்றுமே உயிர்ப்போடு இருக்கும் என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை!

 

.
  மேலே குறிப்பிட்ட அதே கருத்தோடு உடன்படும் மற்றொரு விஷயம்.கோட்டு கோபி ஏ.ஆர்.ஆரை பேட்டி எடுக்கிறார் .இது வரை இல்லாதபடி (அதிசயமாக!) ஏ.ஆர்.ஆர் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பகிர ஆரம்பிக்கிறார்.உதாரணமாக ஒரு படத்தின் பாடல்கள் ஆறு ட்ராக் என்பதாக மட்டுமே இருந்ததாகவும் தான் வந்து படத்திற்கு ஆறு ட்ராக் அதுவே தனியாக கேசட் சிடியில் எட்டு ட்ராக் என்ற புதிய முறையை பயன்படுத்தியது பற்றி பேச ஆரம்பிக்கிறார்.உடனே கோட்டு கோபி நீங்கதான் அதை முதல்ல செஞ்சீங்களா?அப்படி இப்படி என்று எதேதோ கேட்க மனிதர் மீண்டும் தனது ஆமை ஒட்டுக்குள் புகுந்து கொண்டு அந்த விளக்கத்தை கைவிடுகிறார்.





   மேலும் பாடல் வரிகள் புரியவில்லை என்ற கேள்விக்கு "நல்ல ஆடியோ சிஸ்டத்தில் கேளுங்க" என்று சொன்னதை பெரிய விஷயமாக கோட்டு கோபி கேட்கிறார்.அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு??
   இதே கோபியின் இடத்தில் சித்ரா லட்சுமணன் இருந்திருந்தால் அப்படியே தான் கேள்வி கேட்பதையும் இடையில் குறுக்கீடு செய்வதையும் மொத்தமாக நிப்பாட்டி ரஹ்மானை முழுமையாக பேச விட்டிருப்பார்.கண்டிப்பாக சித்ரா ஏ.ஆர்.ஆரை விரிவாக ஒரு பேட்டி எடுக்க வேண்டும்.
 

   கோட்டு கோபி நீயா நானா மாதிரியான "கார்ப்பஸ் கல்லோசம் தாம்புக்கயிறு மாதிரி தடிமனாக உள்ளவர்கள் வாயாடும் நிகழ்ச்சி"க்குத்தான் லாயக்கு.
(கார்பஸ் கல்லோசம் உவமானம்  - வாத்தியார்)